பேச்சு:கூறாக்கம் (கணிதம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேச்சு:Chunking (division) என்ற பேச்சுப் பக்கத்தில் இருந்த உரையாடல்[தொகு]

@Ravidreams: எனது பயனர் பக்கத்தின் மேற்புறமுள்ள ’பங்களிப்புகள்’ இல் தமிழ் மொழிபெயர்ப்புக்கள் என்று ஒரு அறிவிப்பு இருந்தது. ஒரு ஆர்வக் கோளாறினால் அதை கிளிக் செய்து ஆவி கட்டுரைத் தலைப்பிட்டுப் பார்த்தேன். அப்படியே ஆங்கிலத்திலேயே உள்ளடக்கம் கொண்டு புதுக் கட்டுரையாக உருவாகி விட்டது. நான் செய்த தவறு என்ன என்று புரியவில்லை. கட்டுரையின் உள்ளடக்கத்தைத் தமிழில் மொழிபெயர்த்து, தலைப்பையும் நகர்த்தலாமா, இல்லை கட்டுரைக்கு நீக்கல் வார்ப்புரு இட்டுவிடலாமா?

இந்தப் புதிய மொழிபெயர்ப்பு பற்றியும், இதைப் பயன்படுத்தலாமா, இதைச் சரியாக பயன்படுத்தும் வழிமுறைகள் பற்றியும் எனக்கு வழிகாட்ட முடியுமா? கட்டுரை உருவாகும் முன், இதற்கு முன்தோற்றம் காணும் வசதி உள்ளதா?--Booradleyp1 (பேச்சு) 15:28, 21 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

"மொழிபெயர்ப்பை வெளியிடவும்" என்பதைச் சொடுக்கினாலேயே, பக்கம் வெளியிடப்படும். தேவையான திருத்தங்களை வலப்பக்கத் திரையில் மேற்கொண்ட பின், வெளியிடலாம். இது விசுவல் எடிற்றர் போன்றதே. "பெறுநர்" என்பதன் கீழ்ச் சரியான தமிழ்த்தலைப்பையிட்டுத் தொடங்கினால், தலைப்பும் சரியாக வரும். மேலும் விவரங்களுக்கு: https://m.mediawiki.org/wiki/Content_translation --மதனாகரன் (பேச்சு) 17:00, 21 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
ஆங்கிலத் தலைப்புள்ள இக்கட்டுரையை நீக்கி விட்டு மீண்டும் நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். பேச்சுப் பக்கத்தை வைத்திருக்கலாம்.--Kanags \உரையாடுக 21:03, 21 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

@Kanags and மதனாஹரன்: நன்றி. வேறொரு கட்டுரைக்கு முயற்சி செய்தேன். வலப்பக்கத்தில் இயந்திர மொழிபெயர்ப்பு தமிழுக்கு இல்லை என்றுள்ளது (அதே இடத்தில் மூலப்பக்கம்... என்று மற்றொரு தேர்வும் வருகிறது). ஆனால் தலைப்பைத் தமிழில் தரமுடிகிறது, பகுப்புகளைச் சரியாக மொழிபெயர்க்கிறது. நானாகவே இதனைப் பயன்படுத்தப் பழகுவது சற்று சிரமம் என நினைக்கிறேன். அதனால் மேலும் முயற்சிப்பதை இப்போதைக்கு நிறுத்தி விடுகிறேன்.

உருவாக்கிய கட்டுரையின் அருகில் ’குப்பைத் தொட்டி’ அடையாளம் ஒன்றுள்ளது. அது ’’நீங்கள் கண்டிப்பாக இந்த மொழிபெயர்ப்பை நிரந்தரமாக அழிக்க விரும்புகிறீர்களா?’’ என்ற அறிவிப்புடன் ‘’மொழிபெயர்ப்பை நீக்கவும்’’ என்ற தேர்வைத் தருகிறது. அதன் மூலம் கட்டுரையை நீக்க முயற்சித்தேன். கட்டுரையை நீக்க முடியவில்லை. அதனால் இக்கட்டுரையை நீக்கி விடுங்கள். வழக்கமான முறையில் கட்டுரையை உருவாக்கி விடுகிறேன்.--Booradleyp1 (பேச்சு) 05:25, 22 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]