பேச்சு:கூகுள் நிகழ்படங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூகுள் வீடியோஸ் என்பதை குறைந்தபட்சமாக கூகுள் வீடியோக்கள் என்று எழுதலாமே? மற்ற இடங்களில் வீடியோ என்பதை காணொளி என்று மாற்றுங்களேன். --மாஹிர் 19:14, 14 ஜூலை 2010 (UTC)

காணொளி என்பது பொருந்தாத சொல். இதே போல கேட்பொலி என்பது audio என்பதற்குப் பொருந்தாத சொல். ஒளியைக் காணாமல் பின் என் செய்வது. காணொளி என்பது புற ஊதாக் கதிர்கள் அல்ல, அகச்சிவப்புக் கதிர்கள் அல்ல மாந்தர் காணும் அலைவரிகளில் உள்ள ஒளி என்று வேண்டுமானால் பொருள் கொள்ளும். எனவே காணொளி என்பது visible spectrum என்னும் கலைச்சொல் தொடருக்கு இணையாகப் பயன்படுத்தலாம். நிகழ்படம் என்பது வீடியோ என்பதற்குப் பொருத்தமான சொல். நிக்ழச்சியை, நிகழ்வது போலவே இயல்பான அசைவுடனும் ஒலியொளியுடனும் இருப்பதால் நிகழ்படம் என்பது பொருந்தும். திரைப்படம் என்பது போல இது நிகழ்படம். எனவே காணொளி என்பதைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். --செல்வா 20:06, 14 ஜூலை 2010 (UTC)