பேச்சு:குவி வில்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வில்லை என்பதற்குள்ள விக்கியிடை இணைப்புகளே இதற்கும் தரலாமா? ஆ.வி-யில் அவ்விதமே உள்ளது.07:18, 9 சூலை 2011 (UTC)உழவன்+உரை..

வில்லை (lens) வேறு. ஆடி (mirror) வேறு. ஆங்கில விக்கியில் குவிவாடி, குழிவாடி இரண்டுமே en:Curved mirror என்பதையே சுட்டுகின்றன. வெவ்வேறு கட்டுரைகள் இல்லை. இக்கட்டுரையின் தலைப்பு குவிவில்லை என மாற்றப்பட வேண்டும். மேலும், இரண்டு வெவ்வேறு தமிழ் விக்கிக் கட்டுரைகளில் ஒரு ஆங்கில விக்கிக் கட்டுரைக்கு விக்கியிடை இணைப்புத் தருவது விரும்பத்தக்கதல்ல.--Kanags \உரையாடுக 07:35, 9 சூலை 2011 (UTC)

குவியாடி=convexmirror(or)lens. நான் படித்தது இப்படித் தான்.

மிளகாய் தாவரத்தை தமிழர் பயன்படுத்துவதற்கு முன் மிளகு என்பதே காரத்திற்கு பயன்படுத்துவரென்றும், அக்காயை அறிமுகப்படுத்தும் போது, மிளகுக்காய் என்று பெயரிட்டனரென்றும், நாளடைவில் மிளகாய் என மாறியது என்றும் அதனை ஆய்ந்தவர் கூறுவர். அது போல, வில்லை=வில் போன்று வளைந்ததால் வில்லை என்றனரா?அதுவும் நன்றாகவே இருக்கிறது.

தமிழில் சொற்திரிபு என்ற விதி குவிவாடி என்பதற்கு பொருந்தும். குவியாடியின் சொற்திரிபு குவிவாடி.மற்றொன்று ஒரு பொருட் பன்மொழி, பல்பொருள் ஓர் மொழி என்ற இலக்கணப்பதங்களைப் பற்றியும் இப்பெயரிடுதலில் நாம் எண்ண வேண்டும். தமிழகத்தில் பெரும்பாலோர் லென்சு என்றே பயன்படுத்துகின்றனர். அதனால் நாம் குவிலென்சு என்று தலைப்பிடலாமா?

en:Curved mirror என்பதற்கு விக்கியிடை இணைப்புகளை ஏற்படுத்திவிடுகிறேன்.00:40, 10 சூலை 2011 (UTC)உழவன்+உரை..


இது குறித்து ஏற்கனவே உரையாடியுள்ளோம். எனவே அவ்வுரையாடலின் படி தலைப்பை மாற்ற வேண்டும். கட்டுரையிலும் மாற்றம் தேவை.--Kanags \உரையாடுக 00:49, 10 சூலை 2011 (UTC)

அவ்வுரையாடலைக் கவனித்து விட்டு தான் எழுதினேன்.அறிவியல் கட்டுரைகளில் ஒன்றிற்கும் மேற்பட்ட பெயர்ச்சொற்கள் இருக்க வேண்டும். நிலைப்பவை நிலைக்கட்டும். கிரியா பற்றி உங்கள் கருத்தை எதிர்பாரத்தேன்.குவிலென்சு என்று மாற்றுவதில் தான் எனக்கு உடன்பாடு. பொருத்தமெனில் மாற்றிவிடுங்கள். கட்டுரையில் என்ன மாற்றம் தேவை? ஏற்படுத்துங்கள். எனக்காக உரையாடியமைக்கு நன்றி. வணக்கம்01:44, 10 சூலை 2011 (UTC)உழவன்+உரை..

கிரியாவைப் பற்றி எனக்குத் தெரியாது. பாட நூல்களில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறதோ அவ்வாறே இங்கு தருதல் நல்லது. லென்சு போன்ற சொற்கள் பாவிக்க முடியாது. எனது பரிந்துரைகள்:

--Kanags \உரையாடுக 04:15, 10 சூலை 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:குவி_வில்லை&oldid=949535" இருந்து மீள்விக்கப்பட்டது