பேச்சு:குளிர்களி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குளிர்களி வன்னியில் புழக்கத்தில் உள்ள சொல்லா? இல்லை, இலங்கை முழுவதுமா? இது போல் இலங்கையில் புதிதாக வழக்கத்துக்கு வந்திருக்கும் சொற்களை ஒரு பட்டியலாகப் பொருத்தமான கட்டுரை அல்லது பேச்சுப்பக்கத்தில் இட்டு வைத்தால் பயனுள்ளதாக இருக்கும்--ரவி 15:39, 1 டிசம்பர் 2007 (UTC)

ஆம் ரவி வன்னியில் வழக்கில் உள்ள சொல்லே. இதை பாண்டியன் சுவையூற்றில் கண்டதுடன் குடித்ததும் உண்டு. நிற்க. icecream பொதுவாக உறைநிலையிலே விற்கப்படுகின்றது. Softdrink (மென்பானங்கள்) பொதுவாகக் குளிரூட்டப்பட்டே விற்கப்படுவதால் குளிர்பானம் என்றாலும் சரியே இங்கே ஐஸ்கிரீமிற்கு எவ்வளவு பொருந்தும் என்பது தெரியவில்லை. கிரீம் என்பதற்கு எனக்குச் சரியான தமிழ் தெரியவில்லை. ஐஸ்கிரீமிற்கு குளிர்களி என்பது இலங்கையின் சிலபாகங்களில் பாவனையில் இருந்தாலும் கூட எவ்வளவு சொற்பொருத்தம் என்பது தெரியவில்லை. --உமாபதி 15:43, 1 டிசம்பர் 2007 (UTC)

cream என்றால் பாலாடை, பாலேடு போன்ற சொகளும் தட்டுப்படுகின்றன. கீழே சுட்டப்பட்ட பனிக்கூழ்மம் நன்றாக இருக்கின்றது. --Natkeeran 00:53, 12 டிசம்பர் 2007 (UTC)

ஐஸ்கிறீம் குடிப்பம் என்றுசொல்கின்றோம். களி சாப்பிடுவம் என்று சொல்கின்றோம். ஆகவே ஐஸ்கிறீமைத் தமிழாக்கும் போது குளிர்களி என்றால் குளிர்களி சாப்பிட்டோம் என்றல்லாவா வரும்? உறைபதனம் என்பது சரியான தமிழாக இருக்கக்கூடும். இவ்வாறு சிக்கலான தமிழாக்கங்களை அப்படியே ஆங்கிலத்திலேயே விடலாம் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம். குளிர்களியை ஐஸ்கிரீமிற்கு வழிமாற்றிவிடலாம். --உமாபதி 15:48, 1 டிசம்பர் 2007 (UTC)

தமிழக நாளேடான தினமனி கதிரில் ஐஸ்கிரீம் என்பதை பனிக்கூழ் என்று ஒரு கட்டுரையில் பயன்படுத்தியதாக நினைவு. வேண்டுமென்றால் இதை பயன்படுத்தலாம். ஐஸ்-பனி கிரீம் - என்பது கூழ்மையாக உள்ளதால். பனிக்கூழ் என அழைக்கலாம் வினோத் 15:57, 1 டிசம்பர் 2007 (UTC)

பனிக்குழை என்பது 20 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள சொல். 1985களில் இருந்து கேள்விப்பட்டுள்ளேன். பனிக்குழை என்பதை ஆளலாம் என்பது என் பரிந்துரை. "அவனுக்குப் பனிக்குழைன்னா உசிரு" என்று பேச்சு வழக்கில் கூறவும் எளிதாக இருக்கும். எனக்கும் பனிக்குழைன்னா உசுருதான் :)--செல்வா 13:19, 11 டிசம்பர் 2007 (UTC)
குழைவாக இருப்பது கூழ்மம். அப்படித்தானே? -- Sundar \பேச்சு 14:56, 11 டிசம்பர் 2007 (UTC)
ஆமாம், கூழ்மம்தான், ஆனால் நீங்கள் கூழ்மம் என்பதை colloid என்பதற்குக் பயன்படுத்தியுள்ளதாக நினைவு. பனிக்கூழ்மம் என்பதும் நன்றாகப் பொருந்தும் சொல். பொதுவாக குழைவாக, கூழ் போல இருப்பதற்கு ஒரு 20-30 சொற்கள் தமிழில் கூறலாம். பின்னொரு முறை எழுதுகிறேன். --செல்வா 14:59, 11 டிசம்பர் 2007 (UTC) ஒன்றைச் சொல்ல மறந்து விட்டேன். பழக்களி என்பது (fruit) jam. இதுவும் பழைய சொல்லாட்சிட்தான். --செல்வா 15:01, 11 டிசம்பர் 2007 (UTC)

இலங்கையில் பனிக்களி என்று ஐஸ்கிறீமைக் குறிக்கின்றனர்.--பாஹிம் 16:38, 24 நவம்பர் 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:குளிர்களி&oldid=936255" இருந்து மீள்விக்கப்பட்டது