உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:குறுவட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்புள்ள கனக்ஸ் இக்கட்டுரையை (குறு(உள்)வட்டம் வருவாய் கோட்டத்துடன் இணக்க வார்ப்புரு இட்டுள்ளீர்கள், வருவாய் கோட்டம் (Revenue Divisional) என்பது வேறு குறு(உள்)வட்டம் (Revenue firka) என்பது வேறு வருவாய் கோட்டத்தில் இரண்டுக்கு மேற்ப்பட்ட வருவாய் வட்டங்களை (Revenue Taluk) உள்ளடக்கியது. குறு(உள்)வட்டம் (Revenue firka) என்பது இரண்டுக்கு இரண்டுக்கு மேற்ப்பட்ட வருவாய் கிராமங்களை (Revenue Villages) உள்ளடக்கியது. வருவாய் கோட்டத்தின் அலுவலர் வருவாய் கோட்ட முதல்நிலை சார் நீதிபதி (Divisional first class magistrate) தகுதி உடையவர், குறு(உள்)வட்டம் (Revenue firka) அலுவலர் வருவாய் ஆய்வாளர், இவர் உதவியாளர் தகுதியுடைய அலுவலர் எனவே இரு கட்டுரைகளும், தனித்தனி அதிகாரவரம்புடையவை எனவே அருள் கூர்ந்து இணப்பை கைவிடவும்.--Yokishivam (பேச்சு) 11:20, 7 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

குறு(உள்) வட்டம் என்ற சொல் ஏற்கக் கூடியதாய் இல்லையே! எது சரியோ, அதற்கு ஏற்றார்போல, குறுவட்டம் என்றோ உள்வட்டம் என்றோ குறுவுள்வட்டம் என்றோ இடலாமே! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:22, 7 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
குறு(உள்) வட்டம் கட்டுரையில் இரு துறை சார்ந்த அலுவலர்கள் இருக்கிறார்கள். வருவாய்த் துறையில் வருவாய் ஆய்வாளர் என்றும், நில அளவைத் துறையில் குறுவட்ட அளவர் என்றும் முன்னவர் வருவாய் சார்ந்த பணிகளையும், இதர பணிகளையும், குறுவட்ட அளவர் நிலளவை சார்ந்த பணிகளை மட்டுமே செய்து வருகின்றனர், நான் நில அளவை துறையில் பணியாற்றியதால், குறுவட்டம் என எழுதத்தான் நினைத்தேன், நில அளவையில் குறுவட்டம் எனவும், வருவாய்த்துறையில் இதனை உள்வட்டம் எனவும் குறிப்பதால் உள் என்பதை அடைப்புக்குள் குறித்தேன்.--Yokishivam (பேச்சு) 11:32, 7 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
அதை குறுவட்டம் (உள்வட்டம்) என்றவாறு தந்திருக்கலாம்! ;) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:07, 7 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
நன்றி! குரிசில் தங்களின் ஆலோசனைப்படியே கட்டுரையின் தலைப்பை மாற்றிவிட்டேன் நன்றியுடன்--Yokishivam (பேச்சு) 14:03, 7 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:குறுவட்டம்&oldid=3003274" இலிருந்து மீள்விக்கப்பட்டது