பேச்சு:குறுக்குவிசாரணை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சான்றாளர் எனும் சொல் (சாட்சியை) குறிக்கும் சொல்லா? --HK Arun 17:36, 7 ஏப்ரல் 2011 (UTC)

பார்க்க:அகரமுதலி - சான்றுரைஞர் --மணியன் 17:43, 7 ஏப்ரல் 2011 (UTC)

"சான்றாளர்" எனும் சொல் "சான்றோர்" என்பதன் ஒருமைப் பயன்பாடு என்று சந்தேகமாக உள்ளது. இச்சொல்[1] - [2] இப்பக்கங்களில் வேறு பொருளில் கையாளப்பட்டுள்ளன. --HK Arun 17:50, 7 ஏப்ரல் 2011 (UTC)

சான்றுகளை முன்வைத்து உரையாடும் அறிஞரை = "சான்றுரைஞர்" எனலாம். சாட்சியாக முன்வரும் சாட்சியாளரை "சான்றாளர்" என்பது சரியானப் பொருளைத் தராது. --HK Arun 18:01, 7 ஏப்ரல் 2011 (UTC)

'தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகம் அருங்கலைச்சொல் அகரமுதலி ஆங்கிலம்-தமிழ்' நூல் பக்கம் 1203 இல் witness எனும் சொல்லுக்கு 1.சான்று, 2. சான்றாளர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், நீதிமன்ற நடைமுறையில் சாட்சி எனும் சொல்லே பயன்பட்டு வருகிறது. அதற்கு மாற்றாகவே சான்றாளர் எனும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளேன். சான்று என்ற சொல் நீதித்துறையில் புழக்கத்தில் உள்ள நிலையில் சான்றாளர் என்று சாட்சியைச் சுட்டுவது பொருத்தமானதாக, துலக்கமானதாக இருக்கும் என்பது என்கருத்து--இளங்கோவன் 10:19, 12 ஏப்ரல் 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:குறுக்குவிசாரணை&oldid=741502" இலிருந்து மீள்விக்கப்பட்டது