பேச்சு:குறியறி ஒழுகல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

stigmergy என்பது குறிப்பறிந்து இயங்குதல் அல்லது குறிப்பறிந்து ஒத்தியங்குதல் அல்லது குறிப்புணர்ந்து ஒத்துழைத்தல் என்பது போல் தெரிகின்றது. மேலேயிருந்து யாரும் திட்டம் தீட்டாமல் தானாக கிடைக்கப்பெறும் குறிப்பால் தூண்டப்பட்டு இயங்குதல் என்று உணர்கின்றோம். அது தானேயொழுங்குறும் (self-organizing thing) ஒன்றாகவும் அமையும். எனவே குறியறி ஒழுகல் எனலாம். குறியுணர்ந்தொழுகல் என்றும் கூறலாம். குறிப்பறிந்து ஒழுகல் என்பது போன்றதே. இப்போதைக்கு இதுவே தோன்றுகின்றது. ( @Sundar தனிமடலில் வேண்டியபடி). --செல்வா (பேச்சு) 21:30, 24 செப்டம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]

நன்றி செல்வா . குறியறி ஒழுகல் நன்றாகவுள்ளது. குறிப்பறிந்து செயல்படுவது திட்டமிட்ட தொடர்பாடலைக் குறிக்க வழக்கில் ஏற்கனவே பயன்படுவதால் தவிர்த்துவிடுகிறேன். -- சுந்தர் \பேச்சு 08:21, 25 செப்டம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]