பேச்சு:குறள் வாசிப்பு (நூல்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாடுகள் வாரியாகத் தமிழ் நூல்கள் பகுப்பதைப் பற்றி சில கருத்துகள்[தொகு]

நற்கீரன், குறள் வாசிப்பு என்னும் நூலை "இந்தியத் தமிழ் நூல்கள்" என்னும் பகுப்பில் கொணர்ந்துள்ளதைப் பார்த்தேன். இந்தப் பகுப்பை இந்தியாவில் வெளியிடப்படுகின்ற அனைத்து தமிழ் நூல்களுக்கும் பொருந்தும் வகையில் தானியங்கி மூலம் இடமுடியுமா?

அடுத்த கேள்வி, இந்தியாவில் பெரும்பான்மையான தமிழ் நூல்கள் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டாலும் சில நூல்கள் புதுச்சேரி, பெங்களூரு போன்ற இடங்களிலிருந்தும் இந்தியாவின் வேறு மாநிலங்களிலிருந்தும் வெளியிடப்படுவது உண்டு. எனவே, "தமிழ்நாட்டுத் தமிழ் நூல்கள்", "புதுச்சேரித் தமிழ் நூல்கள்", "கருநாடகத் தமிழ் நூல்கள்" என்னும் துணைப் பகுப்புகளையாவது உருவாக்க வேண்டும் என்று கருதுகிறேன். இலங்கையில் வெளியாகும் தமிழ் நூல்களுக்குத் துணைப் பகுப்புகள் இருப்பதையும் கவனித்தேன். ஆனால், தமிழ்நாட்டில் வெவ்வேறு நகரங்களிலும் (எ.டு.: சென்னை, மதுரை, சிதம்பரம், நெல்லை, கன்னியாகுமரி, திருச்சி...) மாவட்டங்களிலும் நூல்கள் வெளியாவதால் அந்த அளவுக்குத் துணைப் பகுப்புகள் தேவையில்லை என்றாலும் ஒருசில தேவைப்படலாம். பயனர்களின் கருத்துகளை அறிய அவா.--பவுல்-Paul (பேச்சு) 17:58, 15 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]