பேச்சு:குருதியியல் புற்றுநோய்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
DNA-structure-and-bases.png குருதியியல் புற்றுநோய்கள் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

சிகிச்சை[தொகு]

சிகிச்சை என்பது வடமொழிச் சொல். அதனை மருத்துவம், மருந்திடல், மருந்து செய்தல் என்றவாறு தமிழ்ப்படுத்தலாம் அல்லவா?--பாஹிம் 10:34, 15 ஏப்ரல் 2011 (UTC)

இடத்துக்கேற்றாற்போல கட்டாயம் செய்யலாம், பாகிம். -- சுந்தர் \பேச்சு 11:14, 15 ஏப்ரல் 2011 (UTC)

டமொழிச் சொல் என்பது எவ்வாறு அறிவது? எங்கேனும் தமிழ் ஆய்வாளர்களால் கொடுக்கப்பட்டுள்ளதா? அல்லது உச்சரிப்பை வைத்துக் குறிப்பிடப்படுகின்றதா? (siHichchai எனும் உச்சரிப்பு பிழை என்று நான் கருதுகின்றேன், siKichchai என்பதே சரி.)

  • எனது கருத்தைக் கூறுகின்றேன்:

சிகிச்சை என்பதை பாஹிம் கூறியவாறு மாற்ற முயற்பட்டால் மருத்துவக் கட்டுரைகளில் குழப்பம் ஏற்படலாம். மருத்துவச் சிகிச்சை என்றும் குறிப்பிடும் வழக்கம் உண்டு, இதனை எவ்வாறு அழைப்பது? ஏனெனில் மருத்துவம் அல்லாத சிகிச்சை முறைகளும் உண்டு என்பதைக் கவனத்தில் எடுக்கவேண்டுகின்றேன். மருத்துவம் என்பது பொதுவாக மருத்துவத்துறையைக் குறிக்கப்பயன்பட்டாலும், மருத்துவசிகிச்சையைக் குறிக்கவும் பயன்படுத்தலாம்தான், ஆனால் மருத்துவ சம்பந்தமான தகவல்கள், கட்டுரைகள் எழுதும்போது சிக்கல்கள் ஏற்படலாம். மருந்திடல்: காயத்துக்கு மருந்திடல் என்று அழைப்பதுண்டு, ஆனால் சிகிச்சை என்பது மருந்து இடுதல் மட்டும் அல்ல, சிகிச்சையில் பலவகை உண்டு. மருந்து செய்தல் என்பது மருந்து உருவாக்குதல் எனும் பொருள்பட வருகின்றது, மேலும் சிகிச்சை எனும் சொல் மிக்கப் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒன்று என்பதையும் கவனத்திற் கொள்ளல் நன்று. --சி. செந்தி 11:53, 15 ஏப்ரல் 2011 (UTC)

செந்தி, சிகித்சா என்ற வடமொழிச்சொல் வழி வந்ததாக இருக்கும் வாய்ப்பு மிகுதி. ஏனெனில் சிகிச்சையின் கிளைச்சொற்கள் எவற்றையும் தமிழில் காணவில்லை. அடுத்ததாக, சிகிச்சை என்ற சொல் பொதுவழக்கில் இருப்பதால் எல்லா இடங்களிலும் நீக்க வேண்டியதில்லை. பொருந்தும் இடங்களில் இணையான தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தலாம். சில இடங்களில் அடைப்புக்குள் இணையான சொற்களைத் தரலாம். மேலே பாகிம் பரிந்துரைத்த மாற்றுச் சொற்களில் பொருந்துபவற்றை மட்டும் ஏற்றுக் கொள்ளலாம். தீர்வு, மருத்துவம் போன்ற சொற்களைப் பொருந்தும் இடங்களில் பயன்படுத்தலாம். அறுவைமுறைத்தீர்வு, குழந்தைகள் நல மருத்துவம் என்று பயன்படுத்திப் பார்த்துவிட்டுச் சரியாக வரும் இடங்களில் மட்டும் பயன்படுத்தலாமே? -- சுந்தர் \பேச்சு 12:18, 15 ஏப்ரல் 2011 (UTC)
ஆம், சுந்தர், நீங்கள் கூறியது போன்றே இடத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்தலாம்.--சி. செந்தி 12:34, 15 ஏப்ரல் 2011 (UTC)

சிகிச்சை என்ற சொல் இங்கே treatment என்பதற்குப் பதிலாக பயன்படுத்தப் பட்டுள்ளது. எனவே Medical treatment என்னும்போது, அதனை 'மருத்துவம்' தொடர்பான சொல் கொண்டு சொல்வது கடினம். சுந்தர் கூறியிருப்பதுபோல பொருத்தமான இடங்களில், பொருத்தமான சொல்லைப் பயன்படுத்தலாம்.
--கலை 12:52, 15 ஏப்ரல் 2011 (UTC)

வடமொழியில் சிகித்சா (चिकित्सा), சிங்கள ஆயுர்வேத மருத்துவத்தில் சிகித்சா (චිකිත්සා), எனினும் தனிச் சிங்களத்தில் ப்ரதிகார (ප්‍රතිකාර), தமிழில் ஏன்?--பாஹிம் 13:01, 15 ஏப்ரல் 2011 (UTC)

அப்படியானால் தமிழில் எவ்வாறு சொல்லலாம்? Medical treatment என்பதை எவ்வாறு கூறலாம்? Treatment என்பதற்கு 'மருத்துவ' என்பதல்லாமல் வேறு ஏதாவது பொருத்தமான சொல் உண்டா?--கலை 13:05, 15 ஏப்ரல் 2011 (UTC)

மருத்துவப் பரிகாரம்[தொகு]

Medical treatment என்பதை மருத்துவப் பரிகாரம் என்று சொல்வது பொருத்தமல்லவா?--பாஹிம் 13:10, 15 ஏப்ரல் 2011 (UTC)

மூலிகை மருந்து செய்யும் தமிழ் மருத்துவரை பரிகாரி என்றே தென்னிலங்கையில் அழைக்கின்றனர். பரிகாரம் என்பது தூய தமிழ்ச் சொல். அதைப் பயன்படுத்துவது தகும் என நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?--பாஹிம் 13:14, 15 ஏப்ரல் 2011 (UTC)

அருமையான சொல் பாகிம், உங்கள் சொல்லுக்கு ஆதரவு சேர்க்குமாறு சில ஆதாரங்கள்:

பரிகாரம் சிறந்த சொற்பயன்பாடு, தேடியதில் பின்வருவன கிடைத்தது: இங்கு treatment என்பதற்கு பரிகாரம் என்றும் கொடுக்கப்பட்டுள்ளது. fabricius அகரமுதலி தொடுப்பு சிகிச்சை வடமொழிச்சொல் என்பதற்குச் சான்று: தமிழ் லேக்சிகோன்

* பாஹிம் கருத்துக்கேற்ப Medical treatment என்பதை மருத்துவப் பரிகாரம் என்று சொல்லலாம்.--சி. செந்தி 13:55, 15 ஏப்ரல் 2011 (UTC)

நன்றி, செந்தி. பரிகாரம் என்பது பொதுப் பயன்பாட்டுச் சொல். பாவத்துக்குப் பரிகாரம் என்பது போல காயத்துக்கும் பரிகாரம் சரிதானே? நீங்கள் வழங்கிய தொடுப்புக்கள் இதனை நன்கு விளக்குகின்றன.--பாஹிம் 14:38, 15 ஏப்ரல் 2011 (UTC)

பரிந்துரைக்கு நன்றி, பாகிம். பரிகாரம் என்ற சொல்லும் வடமொழி வந்ததாகவே இருக்கும் என அஞ்சுகிறேன். தவிர, பரிகாரம் என்ற சொல் பொதுவழக்கில் சமய நம்பிக்கைகளின் படியான தீர்வுமுறையாகத்தானே வழங்கி வருகிறது? நோய்க்கூறுகளை அறிந்து தக்க தீர்வைச் செய்வதை அச்சொல் சரியாகக் குறிக்குமா தெரியவில்லை. பிணித்தீர்வுமுறை போன்ற ஏதாவது ஒன்றை ஆளலாமோ? கழகப் பேரகரமுதலியில் பரிகாரமும் தரப்பட்டுள்ளது, பண்டுவம் என்ற இன்னொரு சொல்லும் தரப்பட்டுள்ளது. அது நல்ல தமிழ்ச்சொல்லாக இருப்பின் அடைப்புக்குறிகளுக்கிடையேயாவது தந்து அறிமுகப்படுத்தலாம். -- சுந்தர் \பேச்சு 05:51, 18 ஏப்ரல் 2011 (UTC)

பரிகாரம் என்பது தூய தமிழச் சொல். வடமொழிக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பரிகாரம் என்பதன் சரியான பொருள் மருத்துவம். இலங்கையில் எங்களுடைய ஊரிலும் சுற்றுவட்டாரத்திலும் பரிகாரம் என்பதை மருத்துவம் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இதனை என்று வேண்டுமானாலும் யாரிடத்திலும் விசாரித்துப் பார்க்கலாம். இச்சொல்லுக்குச் சமய நம்பிக்கைகள் தொடர்பான பொருளும் இருப்பது உண்மைதான். எனினும், பரிகாரி என்பதன் பொருள் மருத்துவரையே குறிக்கிறது.--பாஹிம் 06:03, 18 ஏப்ரல் 2011 (UTC)

"பரியாரி" என்று மருத்துவரைக் குறிப்பது அறிந்துள்ளேன். ஆனால் அது தூய தமிழ்ச்சொல்லா என்பது பற்றி தெரியாது. "பரிகாரம்" என்பது செல்வா கூறியிருந்ததுபோல், பாவத்துக்கு பரிகாரம் செய்தல் என்ற அர்த்தத்திலேயே நான் அறிந்திருந்தேன். --கலை 15:16, 18 ஏப்ரல் 2011 (UTC)
பாஃகிம், பரிகாரம் என்ற சொல் வடமொழிவழி வந்திருக்க வாய்ப்பு இருந்தாலும், தொல்காப்பியத்தில்கூடப் பயன்பட்டிருப்பதாலும், இலங்கையில் பொதுவழக்கில் இருப்பதாலும், அச்சொல்லை ஆள்வதில் எனக்கு மறுப்பேதும் இல்லை. இதைப் பார்க்கையில் பரிகாரம் தமிழ்வழிச் சொல்லாகவும் இருக்கக்கூடும் எனத்தோன்றுகிறது. -- சுந்தர் \பேச்சு 08:00, 19 ஏப்ரல் 2011 (UTC)

தலைப்பு மாற்றம்[தொகு]

    • இரத்தப்புற்றுநோய் எனும் தலைப்பில் ஏற்கனவே ஒரு கட்டுரை உள்ளது. இதனை குருதியியற் புற்றுநோய்(வகை)கள் என்று மாற்ற்றுதல் சரியாகுமா? --சி. செந்தி 11:53, 15 ஏப்ரல் 2011 (UTC)

செந்தி! நீங்கள் கூறியுள்ளபடி கட்டுரையின் தலைப்பை மாற்றுகின்றேன். நானும் Leukemia, Hematological malignancy தொடர்பாக இதையே எழுதியிருந்தேன். இருந்தாலும் வேறும் சில சொற்கள் தமிழாக்கம் கலந்துரையாட வேண்டியுள்ளது. இதற்காகவே ஒரு விக்கிப்பீடியா பக்கம் உருவாக்கலாமோ? :). இவற்றையும் எப்படி தமிழாக்கம் செய்யலாம் எனக் கூறுங்கள்.

  • Cancer = Malignancy - புற்றுநோய்?
  • Blood cancer = Leukemia - இரத்தப் புற்றுநோய்?
  • Neoplasm - மிகைப்பெருக்க இழையம்?
  • Neoplasia - இழைய மிகைப்பெருக்கம்
  • Hematological Neoplasm - இரத்தவியல்/குருதியியல் மிகைப்பெருக்க இழையம்
  • Hematological malignancy - இரத்தவியல்/குருதியியல் புற்றுநோய் வகைகள்

நான் இப்போது எழுதி Kanags எழுதியதால் மீண்டும் அதே பிரச்சனை வந்தது. நல்லவேளையாக Copy செய்திருந்தேன் :). Kanags! நான் மேலே கூறியபடி ஏற்கனவே back போய்ப் பார்த்தேன். ஆனால் அங்கே சேமிக்கப்பட்டிருக்கவில்லை :(. ஆஆ. மீண்டும் இப்போது செந்தியா? என்னால் இப்போதும் பதிவேற்ற முடியவில்லை. :). என்னை இன்றைக்கு இங்கே எதையும் எழுத விடுவதில்லை என்று முடிவா எல்லோரும்? :). இப்போ பார்க்கலாம்.

--கலை 12:52, 15 ஏப்ரல் 2011 (UTC)

நீங்கள் தந்துள்ள சொற்களை புற்றுநோய் உரையாடலில் ஆராய்வோம்.--சி. செந்தி 14:02, 15 ஏப்ரல் 2011 (UTC)

பதிவிடுதலில் சிக்கல்[தொகு]

நானும் நிறைய இது தொடர்பாக எழுதிவிட்டு 'பக்கத்தை சேமிக்கவும்' அழுத்தினேன். அதே நேரம் செந்தி, சுந்தரின் வேறு தொகுப்புக்களும் நிகழ்ந்ததால், நான் எழுதியது அத்தனையும் அழிந்து போனது. மீண்டும் எனது கருத்தை மாற்றங்களுக்கேற்ப எழுதுகின்றேன் :). --கலை 12:22, 15 ஏப்ரல் 2011 (UTC)

ஆம், சுந்தர், நீங்கள் கூறியது போன்றே இடத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்தலாம்.
கலை, இவ்வாறு எனக்கும் முன்பொருமுறை நிகழ்ந்துள்ளது, அதன்பின்னர் நிறைய எழுதுவதேனில் கணினியில் எழுதியபின்னரே இங்கு எழுதுவதுண்டு. இதனைத் தடுக்க வேறு ஏதேனும் வழிகள் இருக்கலாம்.--சி. செந்தி 12:34, 15 ஏப்ரல் 2011 (UTC)
இவ்வாறான குழப்ப நிலைகளில் செய்ய வேண்டியது (எனது அனுபவப்படி): back அழுத்தியை அழுத்தினால் நீங்கள் புதிதாக எழுதிய பகுதிகள் தெரியும். அவற்றை copy பண்ணி, மீண்டும் புதிதாகத் தொகுக்க ஆரம்பிக்கலாம். அப்போது நீங்கள் சேமித்தவற்றை விரும்பினால் ஒட்டலாம்.--Kanags \உரையாடுக 12:42, 15 ஏப்ரல் 2011 (UTC)
நன்றி, அவ்வாறும் செய்துள்ளேன்; சரிவந்துள்ளது, ஆனால் சிலவேளைகளில் ஏனோ back அழுத்தியை அழுத்தினால் அங்கு ஒன்றுமே இருப்பதில்லை.:)--சி. செந்தி 12:49, 15 ஏப்ரல் 2011 (UTC)

முதலில் ஒரு கேள்வி. நாம் தொகுக்கும் அதே நேரத்தில் வேறொருவர் அதே பக்கத்தைத் தொகுத்தால், நாம் எழுதுவது சேமிக்க முடியாமல் போகின்றது. உடனே நான் back போய்ப் பார்த்தேன். ஆனால் அங்கேயும் காணவில்லை. அவற்றைத் தக்க வைத்துக் கொள்ள ஏதாவது முறை உண்டா? நிறைய எழுதி அழிந்து போனதால் இந்தக் கேள்வி :).
--கலை 12:52, 15 ஏப்ரல் 2011 (UTC)

மீண்டும் ஒரு சொல்[தொகு]

இரத்தம் என்பது வடமொழி. ரக்த रक्थ என்பது இரத்தம் எனத் திரிபடைந்துள்ளது. இலங்கையில் குருதிக் கலம் என்பதை இங்கு குருதியணு எனப் பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால், செங்குருதிக் கலம் என்பதைச் செங்குருதியணு என்றும் வெண்குருதிக் கலம் என்பதை வெண்குருதியணு என்றும் பயன்படுத்துவதே சரி. இது சரியா?--பாஹிம் 14:38, 15 ஏப்ரல் 2011 (UTC)

நானும் ஆரம்பத்தில் குருதி என்றே எழுதி வந்தேன். பின்னர் ஒருவேளை நாம் இலங்கையில் பாடப்புத்தகத்தில் அப்படி இருப்பதால்தான், இரத்தம் என்பதை தவிர்த்து விட்டோமோ என்று தோன்றியது. எனவேதான் இரத்தம் என்பதையே நானும் தொடர்ந்தேன். த.வி. யில் நிறைய இடங்களில் இரத்தம் என்றே பயன்படுத்தப்பட்டுள்ளது. அவற்றை காணும்போது மாற்றலாம் என நினைக்கின்றேன். --கலை 23:59, 15 ஏப்ரல் 2011 (UTC)
இரத்தம் என்பதும் தமிழ்ச்சொல்லே ஆனால் சமசுக்கிருத ரக்த என்பதோடு தொடர்புடையதாகக் கருதப் படுகின்றது. தூயத் தமிழ்ச்சொல் வடிவம் அரத்தம் என்பர் (இரா. இளங்குமரன்). அரக்கு, அரளி போன்ற சிவப்பைக் குறிக்கும் சொற்களை எடுத்துக்காட்டுவர். இரத்தம், அரத்தம், குருதி ஆகிய சொற்கள் யாவற்றையும் பயன்படுத்தலாம் என்பது என் தனிக்கருத்து. சீர்மை கருதி ஒரு சொல்லை முதன்மைப்படுத்தலாம். இது குருதியாக இருக்கலாம். ஆனால் இரத்தம் என்பதும் பரவலாகப் பயன்படும் சொல்லே (இது பொதுவாக சமசுக்கிருதத்தில் இருந்து வருவதாகக் கருத்து நிலவுகின்றது... ஆனால் உறுதி இல்லை). --செல்வா 01:40, 16 ஏப்ரல் 2011 (UTC)