பேச்சு:கும்பகோணம் நினைத்த காரியம் முடித்த விநாயகர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

150 கோயில்கள் களப்பணி[தொகு]

பயனர்:Mdmahir, விக்கிபீடியாவில் எழுதத்தொடங்கிய முதல் பல கோயில்களுக்கு நேரடியாகச் சென்று விவரங்களைத் தொகுத்து, புகைப்படங்களை இணைத்து வருகிறேன். இவ்வகையில் 20.9.2014இல் 27 கோயில்கள் விக்கிபீடியாவிற்காகச் சென்றேன். 2015இல் விக்கிபீடியாவிற்காக 96 கோயில்கள் சென்றுள்ளேன். இக்கோயில்களில் சில கோயில்களுக்கு மறுபடியும் கூடுதல் விவரங்கள் சேர்க்கவும் புகைப்படங்கள் எடுக்கவும் சென்றுள்ளேன். அவை 28.2.2015 (31 கோயில்கள்), 2.6.2015 (14 கோயில்கள்), 6.6.2015 (2 கோயில்கள்), 7.6.2015 (3 கோயில்கள்), 12.6.2015 (4 கோயில்கள்), 13.7.2015 (7 கோயில்கள்), 1.9.2015 (3 கோயில்கள்), 26.9.2015 (7 கோயில்கள்), 22.10.2015 (8 கோயில்கள்), 26.10.2015 (10 கோயில்கள்), 2.11.2015 (4 கோயில்கள்)ஆகியனவாகும். இவை தவிர கோயில் உலா என்ற நிலையில் நண்பர்களோடு 50க்கும் மேற்பட்ட கோயில்களுக்குச் சென்றுள்ளேன். நேரில் பார்த்த விவரங்களே இப்பதிவில் தரப்பட்டுள்ளன. புகைப்படங்கள் என்னால் எடுக்கப்பட்டவையாகும். கூடுதல் விவரங்கள் தேவைப்படும்போதோ, ஐயம் ஏற்படும்போதோ நேரில் மறுபடியும் சென்று வருகிறேன். இந்நிலையில் இக்கோயில் 7.6.2015இல் நான் சென்ற கோயில்களில் ஒன்றாகும்.விடுமுறை நாள்கள் என்ற நிலையில் முயற்சி எடுத்து எந்தச்செய்தியும் விடுபடக்கூடாது என்ற எண்ணத்தில் எழுதிவருகிறேன். பிற நிலைகளில் ஆதாரம் கிடைக்காத நிலையில் என்னால் எதுவும் செய்ய இயலா நிலை உள்ளது. விக்கிபீடியாவில் பதிவுகள் இணைக்கப்படவேண்டும், வாசகர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்ற நன்னோக்கில் இவ்வாறான களப்பணி மேற்கொண்டு வருகிறேன். ள இக்கட்டுரையினை நீக்காமல் இருக்க கருதிப்பார்க்க வேண்டுகிறேன். உங்களைப் போன்றோரின் கருத்துகள் என் எழுத்தை மேம்படுத்த உதவுகின்றன. இதற்கு மேலாக ஆதாரம் கிடைக்காத நிலையில் நான் எதுவும் செய்ய இயலா நிலையில் உள்ளேன். கிடைக்கும்போது அந்தந்த கட்டுரையில் சேர்ப்பேன். நன்றி.−முன்நிற்கும் கருத்து பா.ஜம்புலிங்கம் (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. --உழவன் (உரை) 06:03, 8 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

பிள்ளையார் கோவிலின் பெயர்கள், மிகுந்த வேறுபாடுகள் உடைய பெயர்களோடு இருப்பதை, தமிழகத்தின் பல இடங்களில் காணலாம். எடுத்துக்காட்டாக, கிரிக்கெட் பிள்ளையார் என்று சென்னையில் உள்ளது. நம்பிக்கையின் அடிப்படையில் இதுபோன்ற இந்து கோவில்கள் உருவாக்கப்படுகின்றன. எனவே, பெயரைக் கொண்டு, தவறு, சரி என்று ஆய்தல் பொருத்தமான நடைமுறைக் கொள்கையாக இருக்கமுடியாது. ஒரு பங்களிப்பாளர், உள்ளதை பதிவு செய்கிறார் என்ற அடிப்படையில் இந்த ஆவணத்தை நீக்காமல் இருக்கவும், தற்போதுள்ள வார்ப்புருவை நீக்கவும் பரிந்துரைக்கிறேன்.--உழவன் (உரை) 06:03, 8 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
பா. ஜம்புலிங்கம், விக்கிப்பீடியாவுக்காக முனைந்து தகவல் சேகரிப்பதற்கு நன்றி. இக்கோயில் கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததா என்றே வினவப்பட்டுள்ளது. பொதுவாக, பின்வரும் தகவலை இணைப்பதன் மூலம் ஒரு கோயிலின் குறிப்பிடத்தக்கமையை உறுதிப்படுத்த உதவலாம்:
  • கோயில் கட்டப்பட்ட ஆண்டு?
  • யார் கட்டினார்கள்?
  • கோயிலின் சிறப்பு (எ. கா. பாடல் பெற்ற தலம், பழங்காலச் சிற்பங்கள், கல்வெட்டுகள் இருத்தல்)?
  • அதிகம் பேர் கூடும் உள்ளூர் திருவிழாக்கள் நடக்கின்றனவா?
  • நூல்கள், செய்திகள், ஆய்வுகளில் கோயிலைப் பற்றிய குறிப்பு?

--இரவி (பேச்சு) 06:42, 8 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

பொதுவாக தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் அனைத்தும் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. அனைத்துக் கோயில்கள் பற்றியும் கட்டுரைகள் இருக்க வேண்டும். கோயில்களே ஊருக்கும் சிறப்புத் தருவன. சிறிதோ பெரிதோ, மக்கள் வாழ்கிறார்களோ இல்லையோ, அதிகாரபூர்வமான ஊர்கள் அனைத்தும் குறிப்பிடத்தக்கவையே. அதே போன்றே கோயில்களும்.--Kanags \உரையாடுக 06:47, 8 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
Kanags, சற்று முரண்படுகிறேன். ஊர்களைப் பொருத்தவரை கூட ஊராட்சி அளவில் நிருவாக அலகுகளுக்கே தனிக்கட்டுரைகள் எழுதுகிறோம். ஒவ்வொரு சிற்றூர் என்ற அடிப்படையில் பார்த்தால் நிச்சயம் குறிப்பிடத்தக்கமை கிடையாது. கோயில்களுக்கும் இது போன்ற பரந்துபட்ட குறிப்பிடத்தக்கமை வரையறை இருப்பது நன்று. தமிழகக் கோயில்களில் பல வகை உண்டு. மிக அண்மையில் கட்டப்பட்ட மரம் / குளம் அருகே உள்ள சிறிய, தனியார் கோயில்களைக் குறித்து எப்படி கலைக்களஞ்சிய முக்கியத்துவம் தந்து கட்டுரைகள் எழுத முடியும் என்று எனக்குத் தெளிவில்லை. இக்கருத்து அனைத்துச் சமய வழிபாட்டு இடங்களுக்கும் பொருந்தும். விக்கிப்பீடியா ஒரு தரவுத்தளம் இல்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.--இரவி (பேச்சு) 06:59, 8 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
//ஒவ்வொரு சிற்றூர் என்ற அடிப்படையில் பார்த்தால் நிச்சயம் குறிப்பிடத்தக்கமை கிடையாது.// உள்ளது.--Kanags \உரையாடுக 08:15, 8 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

//geographical features meeting Wikipedia's General notability guideline (GNG) are presumed, but not guaranteed, to be notable.// //A geographical area, location, place or other object is presumed to be notable if it has received significant coverage in reliable sources that are, in the case of artificial features, independent of the bodies which have a vested interest in them.// https://en.wikipedia.org/wiki/Wikipedia:Notability_%28geographic_features%29 --இரவி (பேச்சு) 08:36, 8 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

//Populated, legally recognized places are typically presumed to be notable, even if their population is very low. Even abandoned places can remain notable, because notability encompasses their entire history. One exception is that census tracts are usually not considered notable.// இதனை யாரும் மொழிபெயர்ப்பீர்களா?--Kanags \உரையாடுக 08:49, 8 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
@Kanags:, ஊர்களின் குறிப்பிடத்தக்கமை குறித்து தொடரும் உரையாடலை விக்கிப்பீடியா பேச்சு:குறிப்பிடத்தக்கமை (புவியியல் சிறப்புக்கூறுகள்) பக்கத்தில் மேற்கொள்வோம்.--இரவி (பேச்சு) 08:01, 20 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
தானியங்கி மூலமாக கோவில் கட்டுரைகளை கொண்டு வர இருக்கும் வேளையில் கோயில்கள் குறித்தான குறிப்பிடதக்கமை குறித்து வரையரை செய்தல் நலம். இப்பக்கத்தில் அதற்கான தொடக்கம் ஏற்பட்டு, பிறகு ஊர் நோக்கி சென்றுவிட்டது. இது போன்ற எண்ணற்ற கட்டுகளை வைத்துக்கொண்டு இக்கட்டுரை மட்டும், அழித்தல் ஜம்புலிங்கம் போன்ற முனைப்பான பயனரை இழக்க வழிவகை செய்யும். எனவே குறிப்பிடதக்கமை வாருப்புருவை நீக்கியுள்ளேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:26, 21 சூன் 2016 (UTC)[பதிலளி]
வணக்கம், சகோதரன் ஜெகதீஸ்வரன். எனது தொடர் பயணத்திற்கும், தேடலுக்கும், பதிவிற்கும் தங்களது எழுத்து ஊக்கம் தருகிறது. கும்பகோணத்தைப் பொறுத்தவரை சுமார் 80 விழுக்காடு கோயில்களை நேரில் சென்று பார்த்து விவரங்களையும் புகைப்படங்களையும் முடிந்தவரை இணைத்துப் பதிவிட உங்களைப் போன்றோரின் ஆதரவு உதவியாக இருந்து வருகிறது. நன்றி.−முன்நிற்கும் கருத்து பா.ஜம்புலிங்கம் (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. --உழவன் (உரை) 02:37, 25 சூன் 2016 (UTC)[பதிலளி]