பேச்சு:குமரி மாவட்டத் தமிழ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கீழ்க்கண்ட சொற்கள், நாஞ்சில் நாட்டு பகுதிகளில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் பொது வழக்கில் உள்ளமையால் இக்கட்டுரையில் இருந்து நீக்கியுள்ளேன்.

உறக்கம் || தூக்கம்
கமுகு (மரம்) || பாக்கு (மரம்)
பத்தாயம் || அரிசி சேமித்துவைக்குமிடம்
சடங்கு || பூப்புனித நீராடு விழா (எ.கா: என் பொன்னுக்கு சடங்கு சுத்துறோம்.)
சாணி || சாணம்
சீனி || சக்கரை
சொக்காய் || சட்டை
மத்தவன்/மத்தவ/மத்தவர்/மத்தது (மற்றது/வை/வன்/வள் என்பதன் பேச்சு வழக்கு)
சாயந்திரம் || சாயுங்காலம்
பிளசர் || கார் ||
மரு || மச்சம் ||

கீழே உள்ள சொற்களும் பொதுவானவை. எல்லோராலும் புரிந்து கொள்ளக் கூடியவை. ஆனால், நீக்கவில்லை.

1.ஏசுதல்
2.நிக்கா (நிற்கிறான்/ள் என்பதன் பேச்சு வழக்கு)
3.கழனி
4.கிறங்கு (மயங்குதல் என்று பொருள்)
5.குப்பி
6.கொப்பன் (உங்கொப்பன் - அப்பன், பேச்சுவழக்கில்)
7.மயினி (மதனி என்றும் கூறுவர். மனைவியின் அக்கா, அண்ணனின் மனைவி)
8. முத்தம் (முற்றம் என்பதன் மருவல்)
9. வெக்கை (வெப்பம் என்பதன் வேறு வழக்கு)
10. கறுக்கல் (முன்னிரவு)

-தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:36, 20 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

தமிழ்குரிசில் அவர்களே.. நீங்கள் இங்கு குறிப்பிட்டிருக்கும் சொற்கள் பொதுத்தமிழிலும் ஒருசில இடங்களிலோ பரவலாகவோ பழக்கத்திலுள்ளது என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால், இச்சொற்கள் குமரிமாவட்டத்தில் மிகச் சர்வசாதாரணமாகவோ மாறுபட்ட பொருளிலோ பயன்படுத்தப்படுகிறது. அதற்கான ஒரு சில விளக்கங்களை கீழே குறிப்பிட்டுள்ளேன், குறிப்பாக 'ஆப்பை' - பத்மாக்ஸி
ஆப்பை || அகப்பை (அல்லது கரண்டி) என்பதன் பேச்சு வழக்கு

பொதுத்தமிழில் இது 'ஆப்பு' என்ற பொருளிலேயே பயன்படுத்தபடுகிற்றது. பொதுவாக தமிழில் 'கரண்டி' என்ற சொல்லே பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. தென்மாவட்டங்களில், குமரி தவிர, இதன் பயன்பாடு தென்படுகிறது என்பது உண்மையே. - பத்மாக்ஸி.

தவறு அன்பரே! ஆப்பை என்பது வேறு. ஆப்பு என்பது வேறு. ஆப்பை வைக்கிறேன் என்று சொல்வதில்லை. ஆப்பு வைக்கிறேன் என்றே கூறுகின்றனர். தஞ்சாவூரிலும் கூட அகப்பையை ஆப்பை என்றே கூறுகிறோம். ஆப்பை என்பது பொதுத்தமிழிலும் இப்படியே உள்ளது. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:48, 1 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

'ஆப்பு'க்கும் 'ஆப்பை'க்கும் இடையே உள்ள பொருள் வேறுபாடு அறிந்தே இங்கு கூறியிருந்தேன். தந்சையிலும் 'ஆப்பை' என்ற சொல் பழக்கத்திலுள்ளது என்பது எனக்குப் புதிய செய்தி. உங்கள் கூற்றை ஒத்துக்கொள்கிறேன். விளக்கியமைக்கு நன்றி. - பத்மாக்ஸி

தலைப்பின் மாத்திரை அளவு[தொகு]

குமரிமாவட்டத் தமிழ் என்றே அமைய வேண்டும். மாத்திரைக் கணக்கை தவறு. --≈ உழவன் ( கூறுக ) 03:33, 24 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

சொற்களின் பட்டியல்[தொகு]

கட்டுரையில் இரண்டு வகை சொற்கள் உள்ளன,

1. தனித்துவமான சொல்வழக்கு (மலையாளத் தாக்கம் உடையன,) பிற வழக்குகள் பேசுவோரால் புரிந்துகொள்ள முடியாதவை.
2. நாஞ்சில் நாட்டில் (மட்டும்) புழங்கும் பழந்தமிழ்ச் சொற்கள் - பொதுத் தமிழில் இத்தகைய சொற்கள் பல காலமாக இருந்தாலும், பல்வேறு சொற்கள் வழக்கிழந்துவிட்டன. சில இதுபோன்ற வட்டார வழக்குகளில் காணப்படுகின்றன. இவை சில வட்டார வழக்குகளுக்கு பொதுவாகவும் அமைகின்றன.

எனவே, சொற்களை மேற்கண்டவாறு இரண்டாகப் பிரிக்கலாமா? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 02:56, 25 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

நிச்சயம் செய்யலாம், அந்த அட்டவணையிலேயே இன்னொரு நெடுவரிசைக்கட்டம் அமைத்து அதில் இந்த தகவலை குறிப்பிடலாம். - பத்மாக்ஸி

ஆதாரம், உசாத்துணை காட்ட வேண்டும்[தொகு]

இக்கட்டுரையில் தரப்படுகின்ற தகவல்களுக்கு ஆதாரங்களும் உசாத்துணையும் காட்டினால் அதன் உயரும். --பவுல்-Paul (பேச்சு) 03:31, 25 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

தென்னிலங்கையிற் பயன்படும் சொற்கள்[தொகு]

இதிலுள்ள அக்கானி, எரப்பாளி போன்றவையும் இன்னும் பல சொற்களும் தென்னிலங்கையில் பொதுவாக வழக்கத்திலுள்ளவையே.--பாஹிம் (பேச்சு) 12:05, 15 சூன் 2015 (UTC)[பதிலளி]