பேச்சு:குமரிக்கண்டத்தின் ஆதாரங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒன்றினைக்கும் முறைகள் கடினமாக இருக்கிறது? இருகட்டுரை தலைப்பொன்றாயினும் நோக்கம் வேறு. ஏன் இணைக்க வேண்டும்?--−முன்நிற்கும் கருத்து தென்காசி சுப்பிரமணியன் (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

சுப்பிரமணியன், குமரிக்கண்டம் என்ற குறுங்கட்டுரையிலும் சில ஆதாரங்கள் தரப்பட்டுள்ளன. நீங்கள் தந்துள்ள ஆதாரங்களையும் அக்கட்டுரையில் தகுந்த இடத்தில் சேர்க்க வேண்டும். ஒரே தகவல் இரு கட்டுரைகளில் இருக்க முடியாது. எனவே இணைப்பது தான் நல்லது. உங்களால் முடியாவிட்டால் கூறுங்கள். நானே இணைத்து விடுகிறேன். பேச்சுப் பக்கங்களில் உங்கள் கையெழுத்தையிட ~~~~ என்பதை இறுதியில் சேருங்கள்.--Kanags \உரையாடுக 23:44, 16 சூலை 2011 (UTC)
விக்கிப்பீடியா கட்டுரைகளுக்கு ”நோக்கம்” கிடையாது. ஒரு விசயத்தைக் குறித்த அனைத்து தகவல்களை நடுநிலையுடன் சொல்லும்படி கட்டுரை அமைய வேண்டும். எ.கா. ”குமரிக்கண்டம்” இருந்தது என்பதை நிறுவும் நோக்குடன் கட்டுரை எழுத இயலாது. மேலும் இங்கு புதிய ஆய்வுகளையும் செய்ய இயலாது. ஒரு விசயம் குறித்த அனைத்து தகவல்களையும் சொல்லும் ஒரு கட்டுரையில், குமரிக்கண்டம் இருந்தது என்று கருதுவோர் முன்வைக்கும் சான்றுகள் என்ற பகுதியில் இக்கட்டுரையில் உள்ளன இடம் பெறலாம். --சோடாபாட்டில்உரையாடுக 05:06, 17 சூலை 2011 (UTC)

குமரிக்கண்டம் என்ற தலைப்பின் பேச்சுப் பக்கத்திலும் இவர் இதே செய்திகளைத் தந்துள்ளார். குமரிக்கண்டம் என்பதற்கு எந்த விதமான அறிவியல் ஆதாரத்தையும் தராமல் வெறுமனே ஊகங்களையும் கற்பனைகளையும் திறந்துவிட்டிருக்கிறார். எனவே, இத்தலைப்பை நீக்கிவிடப் பரிந்துரைக்கிறேன்.--பாஹிம் 07:28, 17 சூலை 2011 (UTC)

பாஹிம்,ISIAC (INTERNATIONAL SOCIETY FOR THE INVESTIGATION OF ANCIENT CIVILIZATIONS), என்பது ஆராய்ச்சி நிறுவனமாகும். எனவே குமரிக்கண்டத்தின் ஆதாரங்கள் கட்டுரை ஊகங்களல்ல. எனவே, இத்தலைப்பை நீக்கும் பரிந்துரையை திரும்ப பெற வேண்டுகிறேன்.தென்காசி சுப்பிரமணியன் 09:09, 17 சூலை 2011 (UTC)

கட்டுரையில் இராமாயணம் போன்ற கற்பனைக் கதைகளிலிருந்து அறிவியல் ஆதாரங்கள் சுட்டப்பட்டிருக்கிறது. அவ்வாறானவற்றுக்கு ISIAC என்னும் நிறுவனத்தின் நூலையும் ஆதாரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து, அமெரிக்க, பிரான்சிய ஆராய்ச்சிகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை எந்த அறிவியல் தளம், நூல், சஞ்சிகை மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது என்பது இங்கு தரப்படவில்லை. அத்துடன், மேற்படி ISIAC எனும் அமைப்பு எந்த நாட்டில், எந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தெளிவற்றது என்பதுடன் அதற்கான அறிவியல் உலகின் அத்தாட்சிப்படுத்தல் ஏதும் இருக்கிறதா என்பதிலும் ஆழ்ந்த சந்தேகம் உள்ளது. முதலில் அதனை நிரூபிப்பதுடன், வெறுமனே அந்த நாட்டு விஞ்ஞானிகள், இந்த நாட்டு விஞ்ஞானிகள் எல்லோரும் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தனர் என்று கூறாமல், முதலில் அது பற்றிய அறிவியல் ஆதாரத்தைத் தாருங்கள்.--பாஹிம் 09:18, 17 சூலை 2011 (UTC)

ISIAC எனும் அமைப்பு சென்னை கிண்டியில் செயல்படுகிறது. மற்ற விவரங்கள் தரப்படும்.தென்காசி சுப்பிரமணியன்

சோடாபாட்டில்,குமரிக்கண்டம் இருந்தது என்று கருதுவோர் முன்வைக்கும் சான்றுகள் என்ற பகுதியில் இக்கட்டுரையை உள்ளன இடம் பெற வைப்பதெப்படி?தென்காசி சுப்பிரமணியன்

வணக்கம். குமரிக்கண்டம் இருந்தது என்று கருதுவோர் சான்றுகள் என்று குமரிக்கண்டம் கட்டுரையில் ஒரு புதிய பகுதியை உருவாக்கி, அதன் கீழ் இந்தச் சான்றுகளைத் தரலாம். உங்கள் பேச்சுப் பக்கத்தில் இருப்பது போல் மேற்கோள்களைத் தரவும். இந்த தகவல்களில் பல தகுந்த முறையில் கட்டுரையில் சேர்க்கப்படதக்கவையே. சமயங்கள் தொடர்பான கட்டுரைகளைப் பார்த்தால், அந்த அந்த சமயங்களின் நம்பிக்கைகள் எனக் கூறி பல தகவல்கள் இணைக்கப்பட்டு இருப்பதை எ.கா கொள்ளலாம். --Natkeeran 17:09, 17 சூலை 2011 (UTC)

வணக்கம் Natkeeran, நீங்கள் கூறியபடியே செய்துள்ளேன். வேரேதும் மாற்றம் தேவை என்றால் சொல்லவும். தென்காசி சுப்பிரமணியன்