பேச்சு:குன்னக்குடி வெங்கடராம ஐயர்

  கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  1. இந்தக் கட்டுரையில் ஏன் உசாத்துணை, வெளியிணைப்பு என மாற்றப்பட்டது? இணைக்கப்பட்டுள்ள ஆதாரம், நம்பகத்தன்மை வாய்ந்த இணையத்தளத்திலிருந்துதான் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. குன்னகுடி வெங்கட்ராம ஐயர் அல்லது அவரின் குடும்பத்தாருக்கு சொந்தமான இணையத்தளத்தை சுட்டிக்காட்டவில்லை.
  2. பழங்காலத்துத் தகவல்களை ஒரு கலைக்களஞ்சியத்துக்கு கொண்டுவந்து ஆவணப்படுத்தும் நோக்கில்தான் இந்தக் கட்டுரையும் எழுதப்பட்டது. போதிய தகவல்கள் இல்லையெனில் இப்போதே நீக்கிவிடுங்கள். கால அவகாசம் தேவையில்லை.
  3. கட்டுரையின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் இந்தக் கட்டுரை எழுதப்படவில்லை. பழங்காலத்துத் தமிழ்த் திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளில் முன்னேற்றங்கள் செய்யும் முயற்சிகளில் ஒன்றே இக்கட்டுரையும்.
  4. தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவது குறித்து ஒரு தெளிவான அறிவு எனக்குக் கிட்டும்வரை சில காலத்திற்கு இங்கு புதிய கட்டுரைகள் எழுதுவதை நிறுத்துகிறேன்.
  5. ஒரு பங்களிப்பாளர் எனும் வகையிலேயே மேற்கண்டவைகளை எழுதியுள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:45, 9 செப்டம்பர் 2016 (UTC)Reply[பதில் அளி]


  அங்கு வெளியிணைப்புத்தானே கொடுக்கப்பட்டிருந்தது. (பார்க்கவும் en:Wikipedia:External links#How_to_link). உசாத்துணையாக (en:Wikipedia:Citing sources) அது இருக்கவில்லை. 3 வரிக் குறைவான கட்டுரைகளை நீக்கி வருகிறோம். நான் உருவாக்கிய 3 வரிக் குறைவான கட்டுரைகளை நீக்க பரிந்துரைக்கப்பட்டபோதும் அதை விரிவாக்கியுள்ளேன். --~AntanO4task (பேச்சு) 02:18, 9 செப்டம்பர் 2016 (UTC)Reply[பதில் அளி]

  பயனர் வேண்டுகோள்...[தொகு]

  இப்போதைக்கு, நீக்க வேண்டுகிறேன். தமிழ் விக்கிக்குத் தகுந்தாற்போல என்னை மேலும் சீர்படுத்திக்கொண்டு, இக்கட்டுரையை முழுமையாக மீண்டும் எழுதிக் கொள்கிறேன். என்னைத் தற்காக்கும் முயற்சியில் (defensive) இப்போது நான் ஈடுபட்டால், அது அனைவருக்கும் நேர விரயம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:33, 9 செப்டம்பர் 2016 (UTC)Reply[பதில் அளி]

  இப்போதைக்கு நீக்க வேண்டுமென்றில்லை. 1 மாத காலத்தில் விரிவாக்கினாலே போதும். 3 வரிக்கு குறைவான கட்டுரைகளை த.வி.யில் ஏற்கலாம் என்ற ஒருமித்த கருத்து உண்டெனில் எனக்கும் மறுப்பில்லை. --~AntanO4task (பேச்சு) 02:40, 9 செப்டம்பர் 2016 (UTC)Reply[பதில் அளி]
  கட்டுரையில் கூடுதல் தகவல்களை இணைக்கிறேன்.--Kanags \உரையாடுக 09:51, 9 செப்டம்பர் 2016 (UTC)Reply[பதில் அளி]

  சான்றுகள் தரும் முறை சரியில்லை என்று வார்ப்புரு இடுவதற்கும் சான்றுகள் இல்லை என்று வார்ப்புரு இடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. விக்கி நடைப்படி (citation style) சான்றினைக் குறிப்பிடாதது எனது தவறுதான், நான் மறுக்கவில்லை. ஆனால் சான்றே இல்லாத ஒரு கட்டுரையை நான் எழுதவில்லை. சான்றுகள் இல்லை எனும் அறிவிப்பு என்னை மிகவும் பாதித்தது. மூன்று வரிகளுக்குக் குறைவாக ஒரு கட்டுரையை எழுதியதும் எனது தவறு. கொஞ்சம் கொஞ்சமாக விரிவுபடுத்தலாம் என் நினைத்திருந்தேன்; இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்.

  விக்கியில் தொடர்பங்களிப்பாளர்களாக இருப்பவர்களிடம் கொஞ்சம் இலகுவாக நடந்துகொள்வது நன்மை பயக்கும். தவறுகளை அனுமதியுங்கள் எனக் கூறவில்லை; தவறை ஒரு முறையாவது அவரின் பேச்சுப் பக்கத்தில் சுட்டிக்காட்டுங்கள். சுட்டிக்காட்டியும் தவறு தொடருமானால் உரியன செய்யுங்கள். மற்றவர்களைப் போன்றே நானும் பல்வேறு பணிச்சுமைகளுக்கு நடுவே, விக்கிப்பீடியா மூலமாக தமிழ் மொழிக்கு என்னால் இயன்றதைச் செய்துவருகிறேன்.

  இந்தக் கட்டுரையை இப்போது விரிவாக்கம் செய்ய எனது எண்ணம் இசையவில்லை. இக்கட்டுரையை வளர்த்தெடுப்பவர்களை தடுக்கும் உரிமையும் எனக்கில்லை; அவர்களுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

  மனது அவமானமாகக் கருதினாலும், எனது அறிவு இதனை நல்லதொருப் பாடமாகவே கருதுகிறது. பெரிய படைப்பாளிகளே சிலமுறை சறுக்கும்போது, அடியேன்... தமிழில் எழுதுபவன்; அவ்வளவே! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:03, 9 செப்டம்பர் 2016 (UTC)Reply[பதில் அளி]

  பிற விடயம் தவிர்த்த என் பதில். வெளியிணைப்பும் உசாத்துணையும் ஒன்றல்ல. வெளியிணைப்பு சாற்றாகா, மாறாக அது பொதுவான தகவலுக்காக தரப்படுபவை. ஏற்கெனவே அங்கு இருந்ததும் வெளியிணைப்பே. சான்றுகள் தரும் முறை சரியில்லை என்பது இவ்வாறான சான்று இணைப்புக்குப் மிகவும் பொருந்தும். எ.கா: <ref>[http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/gone-but-not-forgotten/article818658.ece Gone, but not forgotten]</ref> நான் வெளியிணைப்பு உள்ள கட்டுரை ஒன்றுக்கு சான்று கேட்டுள்ளதை இங்கும் காணலாம். ஆ.வி வெளியணைப்பை அல்லது "மேலதிக வாசிப்பை" உசாத்துணையாக அல்லது மேற்கோளகக் கருதுவதில்லை. உசாத்துணை என்ற தலைப்பின் கீழ் த.வியில் வெளியிணைப்பை இணைத்து சான்றாகக் கருதலாம் என்றால் எனக்கும் மறுப்பில்லை. --~~AntanO4task (பேச்சு) 08:49, 10 செப்டம்பர் 2016 (UTC)Reply[பதில் அளி]
  எ.கா: en:2MAX 4 வெளியிணைப்பு இருந்தும் சான்றில்லை என்றுள்ளது. --~AntanO4task (பேச்சு) 08:53, 10 செப்டம்பர் 2016 (UTC)Reply[பதில் அளி]

  ஒரு கட்டுரையானது ஒரு இணையத்தளத்திலுள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டால், அந்த இணையத்தளம்தானே உசாத்துணை? நான் உசாத்துணையாக குறிப்பிட்டிருந்தது நடுநிலையான, நம்பகத்தன்மைக் கொண்ட இணையத்தளம். வெங்கட்ராம ஐயருக்கோ, அவரின் குடும்பத்தாரருக்கோ இந்த இணையத்தளத்துடன் எவ்வித சம்பந்தமும் இல்லை. அப்படியிருக்கையில் ஏன் இதனை மேற்கோளாக கருதக் கூடாது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:44, 10 செப்டம்பர் 2016 (UTC)Reply[பதில் அளி]

  இங்கு நடுநிலை பற்றிய யாரும் கேள்வி எழுப்பவில்லை. நீஙகள் இணைத்தது வெளியிணைப்பு. நீங்கள் மேற்கோளாகத் தந்திருக்கவில்லை. --~AntanO4task (பேச்சு) 09:50, 10 செப்டம்பர் 2016 (UTC)Reply[பதில் அளி]

  அன்டன், அதைத்தான் நானும் ஒப்புக் கொண்டேனே! கட்டுரை எழுதுவதற்கு உதவிய ஆதாரத்தை முறைப்படியாக மேற்கோள் எனும் தலைப்பின்கீழ் தராமல், உசாத்துணை எனும் தலைப்பின்கீழ் தந்திருந்தேன்; இது எனது வடிவமைப்புப் பிழை. ஆதாரமே இல்லாமல் எழுதப்பட்ட கட்டுரை அன்று என்பதுவே நான் முன்வைக்கும் கருத்து. மூன்றாமவர் எவராவது இங்கு அவரின் கருத்தையும் தெரிவித்தால் நலம். இந்தப் பேச்சுப் பக்கத்தில் நான் மீண்டும் எழுதுவதற்குக் காரணம் - தெளிவு பெற்று, எதிர்காலத்தில் தவறிழைக்காது பங்களிக்க வேண்டும் என்பதற்காகவே. வாதிடுவது எனது நோக்கமன்று. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:10, 11 செப்டம்பர் 2016 (UTC)Reply[பதில் அளி]

  கட்டுரை முழுவதும் ஒரே உசாத்துணை மூலம் எடுக்கப்பட்டிருந்தபடியால், செல்வா தந்த இணைப்பு சரியானதே. அது general reference (A general reference is a citation that supports content, but is not linked to any particular piece of material in the article through an inline citation. General references are usually listed at the end of the article in a References section. They are usually found in underdeveloped articles, especially when all article content is supported by a single source. They may also be listed in more developed articles as a supplement to inline citations.) என்ற வகைக்குள் அடங்கும்.--Kanags \உரையாடுக 07:11, 11 செப்டம்பர் 2016 (UTC)Reply[பதில் அளி]
  en:Dodge கட்டுரையில் References என்பதில் உள்ளது Notes என்பதில் பயன்படுத்துவதைத்தான் இம்முறை குறிப்பிடுகின்றது. 7, 8 உசாத்துணைகள் இவ்விதம் கையாளப்பட்டுள்ளன. ஆனால் செல்வசிவகுருநாதன் இணைத்தது வெளியிணைப்பு மட்டுமே. வேறுபாடு --~AntanO4task (பேச்சு) 04:06, 8 அக்டோபர் 2016 (UTC)Reply[பதில் அளி]
  வெளியிணைப்பை உசாத்துணை அல்லது மேற்கோள் எனும் தலைப்புகளில் கீழ் வழங்குவதால் அது மேற்கோள் ஆகிவிடாது. இது சரியென்றால் பல கட்டுரைகளுக்கு வெளியிணைப்பை உசாத்துணை அல்லது மேற்கோள் என்று இணணத்து விடலாம். --~AntanO4task (பேச்சு) 04:10, 8 அக்டோபர் 2016 (UTC)Reply[பதில் அளி]
  en:2MAX 4 வெளியிணைப்பு இருந்தும் சான்றில்லை. இந்த அமைப்பயே இந்த வேறுபாடு கொண்டிருந்தது. --~AntanO4task (பேச்சு) 04:16, 8 அக்டோபர் 2016 (UTC)Reply[பதில் அளி]

  பெயர்[தொகு]

  @Kanags: @Selvasivagurunathan m:இந்தப் பக்கத்தை குன்னக்குடி வெங்கட்ராம ஐயர் என்பதிலிருந்து குன்னக்குடி வெங்கடராம ஐயர் என நகர்த்தியிருப்பதாகக் கண்டேன். வெங்கட்ராமன் என எழுதுவது தவறு. அது ஆங்கிலத்தை அப்படியே தமிழில் எழுதுவதாகும். வெங்கடராமன் என்றே பலரும் எழுதுகிறார்கள். அது கூட தவறு. வேங்கடராமன் என்றே தமிழில் எழுதவேண்டும். திருவேங்கடம் என்ற சொல்லைக் கவனிக்கவும். வேங்கடராமன் என்று எழுதவேண்டிய பெயரை வெங்கடராமன் ... (http://www.yarl.com/forum3/profile/7453-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D/content/?type=forums_topic_post&page=2) - Uksharma3 06:56, 8 அக்டோபர் 2016 (UTC)