பேச்சு:குடம்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
DNA-structure-and-bases.png குடம்பி உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


குடம்பி என்பது இலங்கைத் தமிழரிடையே வழக்கில் உள்ள சொல்லா? தமிழ்நாட்டில் நான் கேள்விப்பட்டதில்லை.--சிவக்குமார் \பேச்சு 09:22, 15 சூன் 2012 (UTC)

ஆம். இலங்கைப் பாடநூல்களில் இவ்வாறே உள்ளது. Larva விற்கு தமிழ்நாட்டில் என்ன சொல் பயன்படுத்தப்படுகின்றது?--கலை (பேச்சு) 09:48, 15 சூன் 2012 (UTC)

கூட்டுப் புழு என்று படித்ததாக நினைவு. சரியாகத் தெரியவில்லை. விக்சனரியில் புழு என்றே குறிப்பிடப்பட்டள்ளது.--சிவக்குமார் \பேச்சு 11:23, 15 சூன் 2012 (UTC)
கூட்டுப்புழு என்பது Pupa. புழுவானது கூட்டினுள்ளே இருப்பது. புழு என்பது ஒரு பொதுவான பெயர். பல்வேறு வகையான புழுக்களை உள்ளடக்கி இருக்கும். எனவே அது பொருத்தமற்றது. தமிழ்நாட்டில் குடம்பிக்கு வேறு ஏதாவது சொற்கள் பயன்படுத்தக்கூடும். அறிந்து சொன்னீர்கள் என்றால், அந்தப் பெயரையும் கொடுக்கலாம். --கலை (பேச்சு) 13:23, 15 சூன் 2012 (UTC)
கலை அவர்களே, விளக்கத்திற்கு நன்றி. தமிழ்நாடு அரசின் ஏழாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் (சமச்சீர் கல்வித்திட்டம், முதற்பதிப்பு 2011) லார்வா என்பதற்கு இளம் உயிரி என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர். கட்டுரையில் உரிய மாற்றங்களைச் செய்துவிடுகிறேன். --சிவக்குமார் \பேச்சு 06:35, 17 சூன் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:குடம்பி&oldid=1139213" இருந்து மீள்விக்கப்பட்டது