பேச்சு:குக்கீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எண்ணெயில் பொரிக்கும் வடை போல இது வெதுப்பகத்தில் வெதுப்பியில் வேகவைக்கும் வேவடை அல்லது வேதட்டை. குக்கீ என்பதை இனிப்பான வேவடை அல்லது இனி வேதட்டை. இதனைக் குக்கீ என்றே அழைக்கலாம், ஆனால் இப்படியான தமிழ்ப்பெயர்களையும் வைத்திருப்பதில் தவறில்லை. அதனால், அண்ணே எனக்கு இரண்டு வேவடை கொண்டாங்க என்று எல்லோரும் பேசவேண்டும் என்றும் சொல்லவில்லை. தமிழில் வெப்பம் , வெம்மை. வெய்யில், வெதுவெதுப்பு, வேகுதல், வேக்காடு, வென்னீர், வெஞ்சினம் வெய்யோன், வேது, வேது கொடுத்தல் என்று பல சொற்கள் வே, வெம் என்று தொடங்கி வெப்பத்தொடர்பான கருத்துகளைச் சுட்டுவதால், வெதுப்பகம், வெதுப்பி என்பன இயலானவை. தமிழில் வே என்பது ஓரெழுத்து ஒரு மொழி. அது ஒரு வினை. சூடாக்கு,, சூட வை, வேக வை போன்ற பொருள்களில் பயன்படுவது. வேகுது என்பதில் உள்ள வினை வே என்பதுதான். வேக வைத்தல் என்பது நீராவி அல்லது நீர்மத்தில் இட்டு வெப்பம் ஏற்றிப் பதப்படுத்துதல், ஆனால் வெய்யில் போல வெறும் சூழ்நிலைக் காற்றில் சூடேற்றுதலும் வேதல்தான். கோடைக்காலங்களில் வெப்பநிலை ஏறிவிட்டால் என்னமா வேகுது, வேக்காடு தாங்கல என்று கூறுவது பேச்சு வழக்கில் இன்றும் உள்ளதே. ஆகவே வேகுதல், வேதல் என்பது வெப்பம் ஏறுதல்/ஏற்றுதல் பற்றிய பொருளில் மிகப்பொருத்தானதே. வெதுப்பியில் வேதலால் இனிப்பான வெதுவடை வெதுதட்டை என்றும் கூறலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:குக்கீ&oldid=564491" இருந்து மீள்விக்கப்பட்டது