பேச்சு:கி. வி. வி. கன்னங்கரா
Untitled
[தொகு]இப்படித்தான் பரவலாக அறியப்படுகிறார். எம்.ஜி.ஆர் போல--சங்கீர்த்தன் (பேச்சு) 14:42, 21 அக்டோபர் 2012 (UTC)
கோதண்டராமன் கிருஷ்னன் என்னும் பெயரை K.krishnan என்று சுருக்கி எழுதுகிறார்கள். தமிழ் தலைப்பெழுத்து கிடைக்காதபோது கே. கிருஷ்னன் என்று தமிழிலும் எழுதுகிறோம். இதுவே பெரிய பிரச்சனையாக உள்ளது. இதில் ஆங்கிலத் தலைப்பை அதுவும் சி. ””டபிள்யூ”” என்று நீட்டி வேறு எழுதியிருக்கிறீர்கள். என்னக் கொடுமையிது? டபிள்யு தேவைதானா? இருப்பினும் வழிமாற்றாகக் கொள்ளலாமே!! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:46, 21 அக்டோபர் 2012 (UTC)
இப்பெயரை உச்சரிக்கவே அரை நிமிடம் ஆகுமே! நகைச்சுவையாக உள்ளது. :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:51, 21 அக்டோபர் 2012 (UTC)
- பரவலாக அறியப்படும் பெயர்கள் ஆங்கில முன்னெழுத்துகளைக் கொண்டிருந்தாலும் வழிமாற்றாக இருப்பதில் தவறில்லை.
- //இப்பெயரை உச்சரிக்கவே அரை நிமிடம் ஆகுமே! நகைச்சுவையாக உள்ளது. :)//
- தமிழ்க்குரிசில், இவர் இலங்கையின் கல்வித் தந்தையாக அறியப்படுபவர். இவரைப் பற்றி மட்டுமன்று, எவரைப் பற்றியும் இது போன்ற கருத்துகளைத் தெரிவிப்பது மற்றவர் உணர்வுகளைப் புண்படுத்தலாம் என்பதுடன் விக்கிப்பீடியா பணிக்கு உட்பட்டதும் அன்று என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 15:07, 21 அக்டோபர் 2012 (UTC)
தவறிருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன் இரவி. மற்றபடி, அவரைப் பற்றி(எவரைப் பற்றியும்) அவதூறாகக் கூற நினைக்கவில்லை. டபிள்யூ என்ற எழுத்திற்கு தான் அரை நிமிடம் ஆகுமென்றேன். தலைப்பெழுத்துத் உரையாடலாக அமையுமென்று நினைத்தேன் தவறுதலாக நபரைப் பற்றிய கருத்தாக அமைந்துவிட்டது. இனிமேல் உரையாடலை கவனமாகக் கையாள முனைகிறேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:41, 21 அக்டோபர் 2012 (UTC)
- வணக்கம் தமிழ்க்குரிசில், நீங்கள் வழிமாற்றில் நீக்கல் வார்ப்புரு இட்டிருந்தீர்கள் அதற்காகத்தான் கூறினேன். வழிமாற்று கட்டாயம் தேவை மற்றப்படி தாங்கள் செய்த பெயர் மாற்றம் சரியானது. நான் உங்கள் கருத்துக்களை நகைச்சுவையாகவே எடுத்துக்கொண்டேன்..;)--சங்கீர்த்தன் (பேச்சு) 15:57, 21 அக்டோபர் 2012 (UTC)
தமிழ்க்குரிசில், உங்கள் நோக்கம் அறிவேன். எனினும், இது போன்ற போக்கு மற்றொரு இடத்தில் தவறாகப் புரிந்து கொள்ளப்படக்கூடிய வாய்ப்பு உண்டு என்றே உங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்தேன். புரிதலுக்கு நன்றி--இரவி (பேச்சு) 17:32, 25 அக்டோபர் 2012 (UTC)
- இவ்வாறு டபிள்யூ, மற்றும் நீண்ட முன்னொட்டுள்ள பெயர்கள் சிங்களரிடையே அனேகம் உள்ளன. இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா குறிப்பிடத்தக்கவர்.--Kanags \உரையாடுக 20:42, 25 அக்டோபர் 2012 (UTC)