பேச்சு:கிளாவேசீன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

--92.39.200.17 12:54, 11 ஜூன் 2009 (UTC)கீளாவேசீன் என்பது ஃப்ரெஞ்சுப் பெயர். ஹார்ப்சிகார்ட் என்றுதான் ஆங்கிலம் பேசும் உலகத்தில் அழைக்கப் படுகிறது. திடீரென்று ஆங்கில மூலத்திலிருந்து ஃப்ரெஞ்சு மூலத்திற்கு மாற்றுவது சரியில்லை. see http://en.wikipedia.org/wiki/Harpsichord --92.39.200.17 11:14, 11 ஜூன் 2009 (UTC)

harpsichord என்றாலும் கிளாவேசீன் என்றாலும் தமிழரில் எத்தனை விழுக்காட்டு ஆட்களுக்குப் புரியும் என்று தெரியவில்லை. ஏன் எப்போதும் ஆங்கில மூல சொற்களையே பயன்படுத்த வேண்டும்? ஏன் மூல மொழி சொற்களைப் பயன்படுத்தக்கூடாது?--ரவி 11:57, 11 ஜூன் 2009 (UTC)
பிறமொழி விக்கியிடை இணைப்புகளைப் பார்த்தீர்களானால், ஹார்ப்சிகார்ட் என்பது ஆங்கிலத்தில் மட்டும் தான் பாவிக்கப்பட்டுள்ளது. உருசிய மொழி உட்படப் பல ஐரோப்பிய மொழிகளில் இது கிளாவேசீன் எனவே அழைக்கப்படுகிறது. இதன் மூலம் பிரெஞ்சு, மற்றும் இத்தாலியம். எனவே இது உலகளாவிய சொல் என எடுத்துக் கொள்ளலாம்.--Kanags \பேச்சு 12:00, 11 ஜூன் 2009 (UTC)
"ஏன் எப்போதும் ஆங்கில மூல சொற்களையே பயன்படுத்த வேண்டும்" என கேட்பது ஒரு தேவயற்ற கேள்வியாகும். இந்தியாவில் ஹார்ப்சிகார்ட் என்றுதான் இசையில் விருப்பமுள்ளவர்கள் அறிகின்றார்கள். எ.கா. http://www.hinduonnet.com/thehindu/mp/2007/09/03/stories/2007090350690700.htm http://www.amarchitrakatha.com/culture_beat/event_detail_page.php?event_id=MzQzMw== . அதனால் படிப்பவர்களுக்கு ஹார்ப்சிகார்ட் உடனே புரியுமே தவிற க்ளாவிசீன் என்ற வார்த்தை தமிழ் மக்களுக்கு புரியப் போவதில்லை. ஏன் படிப்பவர்களை சித்திரவ்தை செய்கிறீர்கள்?--92.39.200.17 12:35, 11 ஜூன் 2009 (UTC)

நீங்கள் தருவது ஆங்கில மொழி ஆதாரம். ஆங்கிலம் தெரிந்தவர்கள் ஆங்கில விக்கிப்பீடியா போய் படித்துக் கொள்ளலாமே?

தமிழ் விக்கிப்பீடியா தமிழ் மட்டுமே அறிந்த தமிழர்களை முதன்மை இலக்காக வைத்து எழுதப்படுவது.

ஹார்ப்சிகார்ட் என்று தமிழில் எழுதப்பெற்ற சொல்லே ஒரே ஒரு முறை தான் கூகுள் முடிவில் வருகிறது. http://www.google.com/search?q=ஹார்ப்சிகார்ட்&ie=utf-8&oe=utf-8&aq=t

ஏன் ஆங்கிலத்தில் எழுதவில்லை என்று நீங்கள் கேட்பது தேவையான கேள்வி என்றால், ஏன் ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்று கேட்பதும் தேவையான கேள்வி தான்.--ரவி 12:45, 11 ஜூன் 2009 (UTC)

அதெல்லம் இந்திய ஆங்கில தளங்கள் . அதனால் அவை இந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் தெரிந்த சொற்கள்.தெரிந்த சொற்களை - எந்த மொழி ‘மூலமானாலும்’- பயன்படுத்துவது உசிதம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கிளாவேசீன்&oldid=389298" இலிருந்து மீள்விக்கப்பட்டது