பேச்சு:கிலோவாட் மணி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிலோவாட் மணி என்பது மின்சக்தியை மட்டும் அளக்கப் பயன்படும் அலகா அல்லது பொதுவாக சக்தியை (energy) அளக்கப் பயன்படும் அலகா?--Booradleyp1 (பேச்சு) 16:29, 17 செப்டம்பர் 2013 (UTC)

இது மின் சக்தியை (electrical energy consumption )மட்டும் கணக்கிடும் அலகு.BALA.R,Sankaranputhoor. (பேச்சு) 04:44, 18 செப்டம்பர் 2013 (UTC)

ஆனால் ஆங்கில விக்கியிலுள்ள கட்டுரையில், கிலோவாட் மணி என்பது சக்தியின் அலகு என்றும், இது பொதுவாக மின்சக்தியின் பயன்பாட்டு அளவிற்கு பணம் கணக்கிடப் பயன்படுகிறது என்றுதானே உள்ளது.(The kilowatt hour, or kilowatt-hour, (symbol kW·h, kW h or kWh) is a unit of energy.....The kilowatt hour is most commonly known as a billing unit for energy delivered to consumers by electric utilities.). உங்கள் விளக்கத்தை இங்கேயே தரலாம்.--Booradleyp1 (பேச்சு) 05:11, 18 செப்டம்பர் 2013 (UTC)

மின் சக்தி தவிர்து வேறு எங்கும் இந்தச் சொல் பயன்படுத்துவதாய் தெரியவில்லை . மின்பயன்பாட்டைக் கணக்கிடும் 1 யூனிட் 1 கிலோவாட் மணி.BALA.R,Sankaranputhoor. (பேச்சு) 05:21, 18 செப்டம்பர் 2013 (UTC)

வேறு எங்கும் பயன்படுத்தப் படாததால் இது சக்திக்கான பொது அலகில்லை என்று சொல்ல முடியாது தானே. அதுவுமில்லாமல் கட்டுரையிலுள்ள அட்டவணை இந்த அலகினை சக்தியின் பிற அலகுகளுக்கு (ஜூல், வாட்டு) மாற்றும் வாய்ப்பாட்டினைத் தருவதால் இது மின்சக்திக்கான தனிப்பட்ட அலகல்ல, இது சக்திகளுக்கான பொதுஅலகு என்பதுதான் சரியென்றுதான் படுகிறது. --Booradleyp1 (பேச்சு) 05:36, 18 செப்டம்பர் 2013 (UTC)

கிலோவாட்-மணி என்பது ஆற்றலின் ஓர் அலகு என்றே தரப்பட வேண்டும். மின்னாற்றலில் இதன் பயன்பாட்டை பின்னர் விபரமாக எழுதலாம்.--Kanags \உரையாடுக 11:30, 18 செப்டம்பர் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கிலோவாட்_மணி&oldid=1499677" இலிருந்து மீள்விக்கப்பட்டது