பேச்சு:கிராபீன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நான் இன்று இக்கட்டுரையைக் கட்டாயம் எழுத வேண்டும் என்று எண்னியிருந்தேன், ஆனால் பரிதிமதி நீங்கள் முந்திக்கொண்டீர்கள் :) நன்று, மகிழ்ச்சி :). கிராபீன் (கிராஃவீன், கிராஃபீன்) என்பதோடு கரியீன் என்றும் இதனைக் கூறலாம். கரிம அணுக்கள் sp2 பிணைப்பு கொண்டு அறுகோண வடிவில் 120° பிரிகையோடு முக்கோணப் பிணைப்பில் ஒரே தளத்தில் வலுவோடு அமைந்திருப்பதும், ஓரணுத் தடிமனே கொண்ட மென்மடலாய் ஈனுவதாலும் இதனை கரியீன் எனலாம். கரியீன் என்று தலைப்பிட்டு இக்கட்டுரையை எழுதவேண்டும் என்றே எண்னியிருந்தேன். பிறைக்குறிகளுக்குள் கிராபீன், கிராஃபீன், கிராஃவீன், graphene என்பனவற்றையும் குறிக்கலாம் என்பது என் கருத்து. கரியீனின் மின் கடத்துமையும், வெப்பக்கடத்துமையும் செப்பு/தாமிரத்தை விடவும் கூடுதலானது. நிட்சிமையும் வியப்பூட்டும் 20% கொண்டது. நம்புதற்கரிய இருதிரட்சிப் படிகம் இது. இருதிரட்சி = two-dimentsion(al). செப்டம்பர் 2010இல் சீனாவில் மிகுவேக திரிதடையம் (டிரான்சிசிட்டர்) கூட செய்துள்ளார்கள். --செல்வா 21:21, 6 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

நன்றி செல்வா! வெகு நாட்கள் முன்னரே நாம் கிராபீனைப் பற்றிய பக்கத்தை உருவாக்கியிருக்க வேண்டும். பல பிற மொழி விக்கிகளில் நன்கு செறிவூட்டப்பட்ட தகவல் பக்கங்கள் கிராபீனைப் பற்றி உள்ளதைக் கண்டேன். முழு மூச்சாக இதை நாம் செய்ய வேண்டும்.

கரியீன் -- மிக அழகான சொல்லை உருவாக்கியுள்ளீர்கள். இருப்பினும், கிராபீன் என்றே எழுதலாம் என்பது என் கருத்து. பல மொழிகளிலும் கிராபீன் என்றே எழுதப்பட்டுள்ளது. (Graphen - http://de.wikipedia.org/wiki/Graphen) , (Grafeno - http://es.wikipedia.org/wiki/Grafeno), (Graphène - http://fr.wikipedia.org/wiki/Graph%C3%A8ne) ஈத்தீன், எத்திலீன், புல்லரீன், கிராபைட்டு ... ஒவ்வொன்றையும் தமிழாக்கம் செய்து எழுதுவது சற்று குழப்பம் அளிக்கும். இது என் கருத்து. அனைவரது ஒருமித்த கருத்தையும் கேட்ட பின்னர் முடிவு செய்யலாம் அல்லவா? --பரிதிமதி 02:25, 7 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

ஆம் நாம் முன்பே உருவாக்கியிருக்க வேண்டிய பக்கங்களுள் ஒன்று. நான் கரியீன் என்று பரிந்துரைப்பதற்கு ஒரே காரணம், நாம் கரிமம் என்று கார்பனைக் கூறுகின்றோம். தமிழில் கார் என்றாலும் கறுப்பே. கரிமம் என்பதால் கரியீன் என்றும் கூறலாமே என்பதுதான். கார்பன்-டை-ஆக்சைடு என்றுதான் நான் எழுதுகின்றேன். கரிம ஈராக்சைடு என்று எழுதவில்லை. கரியீன் என்பது வைரம் போல் அதன் அணு அடுக்க அமைப்பால் பெற்ற பெயர் . தனிமத்தின் பெயர் அல்ல. அணுக்களின் அடுக்க அமைப்பை மாற்றினால் வேதியியல், இயற்பியல் பண்புகள் அனைத்தும் மாறுபடும். ஆகவே கரியீன் மிக வியப்பூட்டும் இயற்பியல் பண்புகள் கொண்டிருப்பது இயற்கையே. இருதிரட்சிப் படிகமாகிய இப்பொருளை, எத்திலீன், மெத்தேன் போன்று வேதியியல் பெயர்போல் எண்ணிக் கூறத்தேவை இல்லை. ஃவுல்லரீன் என்பது பக்மினிசிட்டர் ஃவுல்லர் என்னும் அறிஞரின் பெயர் பெயர் பெற்றது, ஆகையால் புல்லரீன் அல்லது ஃபுல்லரீன், ஃவுல்லரீன் என்றே அழைக்கவேண்டும். கிராபீன் அப்படியில்லை. கரியீன் என்பதைக்கூட நாம் பயன்படுத்துவதாயின், அவ்வபொழுது கிராபீன் (கிராஃவீன், கிராஃபீன்) என்று கூடவே சொல்லியேதான் வருவோம் என்பதே என் பரிந்துரையின் கருத்து. கரிமம் என்னும் தனிமம் தற்பொழுது வைரம், படல்கரி (கிராபைட்டு), புல்லரீன் என்னும் கரிமப் பந்துக்கூடு, கரிம நானோகுழல், கரியீன் ஆகிய வடிவங்களில் இருப்பதாகக் கொள்ளலாம். பிறருடைய கருத்தையும் கேட்போம். கிராபீன் என்றே இருக்க வேண்டும் எனினும் எனக்கு மறுப்பு இல்லை. எது எப்படியாயினும், இதுபற்றி விரிவாக எழுத வேண்டும், எழுதவும் நிறைய உள்ளன. --செல்வா 05:07, 7 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
மேலே பரிதிமதி கூறிய கருத்தின் படியும் Graphen என்று இடாய்ச்சிலும் (செருமன்), Grafeno என்று எசுப்பானியத்திலும் அவை graphene என்று என்று இல்லமல் இருப்பதைக் காட்டுகின்றது. எனவே கரியீன் என்பது போதிய அளவு நெருக்கமாகவே உள்ளது ஆனால் பொருள் கொண்டுள்ளது. கிராபீன் என்பதைப் புரிந்துகொள்ள கிராபைட்டு வேண்டும், பிறகு கார்பன் வேண்டும். தமிழில் கரிமம், கரி, படல்கரி, கரியீன் என்றால் சீராக இருக்கும் என்பது என் கருத்து. --செல்வா 13:37, 7 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
இது ஒரு தனிமம் அல்ல, அடுக்க அமைப்பு தான் என்பதாலும் கரிமம் ஏற்கனவே வழக்கில் இருப்பதாலும் கரியீன் என்பதில் எனக்கு உடன்பாடு உள்ளது. காராஃவீன், கிராஃபீன் ஆகியவற்றை மாற்றுப் பயன்பாடாகத் தரலாம். -- சுந்தர் \பேச்சு 05:08, 9 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
-ஈன் என்னும் ஆங்கில ஒட்டுக்கு இணையானத் தமிழ் ஒட்டு என்ன? கரி ஈனும் அடுக்கம் என்றும் பொருள் கொள்ளலாம் போல. :) -- சுந்தர் \பேச்சு 07:38, 12 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

வேதியியல் வாய்பாடு[தொகு]

கட்டுரையில் உள்ள வாய்பாடு ( C62H20)(அது சுட்டும் சான்றுகோளும்) சரியல்ல என்று நினைக்கின்றேன். முதலாவது இது கரிமப் பொருளின் மாற்றுரு (allotrope), வேதியியல் சேர்மம் அல்ல. அப்படியே கூறுவதாயினும் ஐதரசன் எண்ணிக்கை சரியல்ல என்று நினைக்கின்றேன். பென்சீனில் ஒன்றுவிட்டு ஒன்று கரிம அணுக்கள் இரட்டைப்பிணைப்பு கொண்டது. இந்தக் கரியீன் (கிராபீன்) என்பதில் ஒவ்வொரு கரிம அணுவும் மூன்று கரிம அணுக்களுடன் பிணைப்பு கொண்டுள்ளது (பென்சீனில் இரண்டு). sp2 பிணைப்பு முக்கோண வடிவில் சமதளத்தில் உள்ளது . pz திசையில் மெலிவான பிணைப்புடன் பல்லடுக்கு மடல்கள் அமையலாம் (பிற அணுக்களும் பிணைப்புறலாம்). C62H20 என்பதைச் சரிபார்க்க வேண்டும்.--செல்வா 22:31, 8 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

ஓரங்களில் ஒட்டியுள்ள ஐதரச அணுக்களைக் கணக்கில் கொண்டால் C62H20, அல்லது வேறு ஒட்டு இடுக்கு அணுக்களைக் கொண்டால் C63H20, C64H20 என்றும் கொள்ளும். --செல்வா 00:05, 9 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கிராபீன்&oldid=1537391" இலிருந்து மீள்விக்கப்பட்டது