பேச்சு:கிரந்த எழுத்துமுறை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீன எழுத்து "புத்தகம்" கிரந்த எழுத்துமுறை எழுத்துமுறைகள் தொடர்பான கருத்துகளை கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் எழுத்துமுறைகள் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


இந்த கட்டுரையை குறித்து தங்களின் கருத்துக்களை இங்கே குறிப்பிடவும் நன்றி


கட்டுரை விரிவாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். ஆனால் ஏற்கெனவே கிரந்த எழுத்துக்கள் என்ற பெயரில் ஒரு கட்டுரை உள்ளது. இரண்டையும் இணைத்துவிடலாம். Mayooranathan 10:13, 9 டிசம்பர் 2006 (UTC)

கட்டுரைகள் இணைப்பு[தொகு]

இக்கட்டுரையை இயற்றிய பிறகே, அக்கட்டுரையை கண்டேன். எனவே இரண்டையும் இணைத்து விடலாம் என்ற உங்களது கருத்து சரியே. நானும் அவ்வாறே நினைத்தேன். ஆனால் விக்கீபிடியே இன்னும் சரியாக தெரியாததால் எப்படி இரண்டு கட்டுரைகைளை எப்படி இணைப்பது என்பது எனக்கு தெரியவில்லை. எனவே கிரந்த எழுத்துக்கள் என்ற கட்டுரையையும், கிரந்தம் என்ற கட்டுரையயும் யாரேனும் இணைக்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கிறேன்.

இராம.கி. கருத்துக்கள்[தொகு]

"இங்கும் வரலாறு தெரியாமல் பேசுகிறீர்கள். ஸ்,ஷ்,ஜ்,ஹ் போன்ற எழுத்துக்கள் தமிழில் பயன்படுத்த அமைக்கப் பட்டவை அல்ல. கிரந்தம் என்ற எழுத்து (வடமொழியைக் கல்வெட்டில் கீர்வதற்காகத் தமிழ்நாட்டில் உருவாக்கப் பட்டது கிரந்தம். கீர்ந்தம்>கிரந்தம்) எப்படி இந்துசுத்தானி என்ற மொழி நகரி எழுத்திலும், அரபி எழுத்திலும் ஒரே நேரத்தில் எழுதப்பட்டதோ, எப்படி பாகத மொழி பெருமி எழுத்திலும், காரோத்தி எழுத்திலும் ஒரே நேரத்தில் எழுதப் பட்டதோ, அதே போல வடமொழி (அதை வளர்த்ததில் தமிழருக்கு பெரும்பங்கு உண்டு என்பதை நான் மறவாதவன். இன்றைக்கு அறியப்படும் வேதங்களுக்கான உரைகளில் பலவும் நம் பக்கத்தில் இருந்து எழுதப் பட்டவை தான்.) எழுதுவதற்கு இரண்டு எழுத்துக்கள் இருந்தன. ஒன்று நகரி, இன்னொன்று கிரந்தம். கிரந்தம் பிறந்தது தமிழ்நாட்டில் தான் (குறிப்பாக காஞ்சிக்கு அருகிலும், தென் சேரலமும் ஆகும்.) கிரந்தத்தின் அடித்தளம் தமிழ் எழுத்தே. செருமானிய எழுத்து உரோமன் எழுத்தில் இருந்து பிறந்தது தான்; ஆனாலும் சிறிது வேறுபட்டது. ருமேனிய எழுத்து உரோமன் எழுத்தில் இருந்து பிறந்தது தான். ஆனால் யாரும் செருமானிய எழுத்தையோ, ருமேனிய எழுத்தையோ ஆங்கிலம், பிரஞ்சு, இத்தாலியன் எழுதப் பயன்படுத்துங்கள் என்று சொல்லுவதில்லை."

"அதே போல தமிழில் இருந்து கிரந்தம் பிறந்ததனால் கிரந்த எழுத்தைத் தமிழ் எழுதப் பயன் படுத்துங்கள் என்று சொல்லாதீர்கள் என்று சொல்லுகிறோம். இது தவறா? அப்படி எழுதப் புகுந்து தான் மலையாளம் பிறந்தது. மலையாள எழுத்திற்கும், கிரந்த எழுத்திற்கும் மிக மிகக் குறுகிய வேறுபாடே உண்டு. மலையாளம் தமிழில் இருந்து பிரிந்து நிலைத்துப் போனதற்கு கிரந்த எழுத்தில் நம்பூதிரிகள் எழுதத் தொடங்கியதே பெருங் காரணம். இந்த எழுத்து மாற்றத்தை மட்டும் சேரமான் பெருமாள்கள் ஆதரித்து இல்லாது இருப்பின், சேரலப் பேச்சு ஒரு வட்டாரத் தமிழாகவே இருந்திருக்கும். நம்முடைய இரா.முருகன் ஒரு மலையாளக் கவிதையைத் தமிழெழுத்தில் எழுதி இடும் போது நமக்கு அது ஏதோ நெருங்கியது போல் தோற்றி ஒரு வட்டாரத் தமிழாய்ப் பாதி புரிவதை எண்ணிப் பார்த்தால் நான் சொல்லுவதை உணர முடியும்."

http://valavu.blogspot.com/2006/12/4.html

--Natkeeran 19:28, 20 ஜனவரி 2007 (UTC)

இராம.கி. கருத்துக்கள்[தொகு]

"இந்தப் பெருமி எழுத்து நாளடைவில் திரியத் தொடங்கி குத்தர்கள் காலத்தில் நகரி எழுத்தாக மாறியது. அதே பொழுது, தென்னகத் தமிழி எழுத்து இரண்டாய்த் திரிந்து ஒன்று வட்டெழுத்தாயும், இன்னொன்று பல்லவர் எழுத்தாயும் மாறியது. பல்லவர் எழுத்தைச் சோழர் ஆதரித்தனர். பாண்டியர் எழுத்தான வட்டெழுத்து சேரலத்திற்கும் போனது. சேரலத்திலும், காஞ்சியிலுமாய் பண்டிதரால் தமிழெழுத்தின் நீட்சியாய் உருவாக்கப் பட்ட எழுத்து கிரந்த எழுத்து. தமிழை எழுதுவதற்கு அல்லாமல், சங்கதம் என்ற மொழியை எழுதுவதற்காவே, கிரந்தம் என்னும் தமிழெழுத்து நீட்சி உருவாக்கப் பட்டது; பெருமை கொள்ளத் தக்க கிரந்த எழுத்து நம் தமிழனின் படைப்பே. வடமொழியில் பல முதல் நூல்களும், உரை நூல்களும் கிரந்த எழுத்திலேயே முதலில் எழுதப் பட்டன. "வடமொழி ஆக்கங்களில் பலவும் நம்மூரில் எழுதப் பட்டவையே"."

http://valavu.blogspot.com/2007/02/2_21.html

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:15, 14 மே 2007 (UTC)[பதிலளி]

நடுநிலை[தொகு]

//தமிழ் நாட்டில் சில தசாப்தங்களுக்கு முன் ஆரம்பித்த சமஸ்கிருதத்துக்கு எதிரான இயக்கங்களால், பொதுவான சமஸ்கிருதத்தின் பயன்பாடு வெகுவாகக் குறைந்ததும் இதற்கு ஒரு காரணமெனலாம்.// இது போன்ற கருத்துகள் நடுநிலைத் தன்மையை கேள்விக்கு உட்படுத்துகின்றன. சமஸ்கிருதத்திற்கு எதிரான இயக்கங்கள் இருந்தனவா? கவனிக்க: User:Kanags, User:Ravidreams, பயனர்:செல்வா, பயனர்:தென்காசி சுப்பிரமணியன் -தமிழ்க்குரிசில் (பேச்சு)