பேச்சு:கியூரியோசிட்டி தரையுளவி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உளவி என்றால் உளவு பார்க்கும் ஏதோவொன்று என்று பொருளா? இங்கே குறிப்பிடப்பட்டிருப்பது உலவி என்றிருக்க வேண்டுமா? உலவி என்றால் உலவுதல் (அங்கிங்கு நகர்தல்) என்னும் செயலைச் செய்யும் ஏதோவொன்று என்று பொருள். உளவி என்றால் என்னவென்று விளங்கவில்லை.--பாஹிம் (பேச்சு) 13:26, 4 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

தரையுளவி (rover) என்ற சொல்லை அறிவியல் எழுத்தாளர் சி. ஜெயபாரதன் தனது கட்டுரைகளில் கையாண்டுள்ளார். அது உலவி மட்டுமல்ல, அதற்கும் மேலாக நீங்கள் கூறியது போன்று உளவு அல்லது ஆய்வுப் பணிகளிலும் ஈடுபடுவது. அது சரியென்றே எனக்குத் தோன்றுகின்றது.--Kanags \உரையாடுக 13:38, 4 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

Rover என்ற சொல்லுக்கு உலவி என்பதே பொருந்துகிறது. அதனாற்றான் உளவி என்ற சொல்லைப் பற்றிச் சிறிது குழப்பம் தோன்றியது.--பாஹிம் (பேச்சு) 13:50, 4 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]