பேச்சு:காவலூர் முருகன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

@பா.ஜம்புலிங்கம்: 882 ஆம் திருப்புகழில் காவளூர் என்று ஊரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ([1]). மேலும் இந்தக் காவளூர் திட்டை ரயில் நிலையத்திலிருந்து 6 கிமீ தொலைவில் உள்ளதாகவும் அந்த இணைப்பில் காணப்படுகிறது.

காவலூர், காவளூர் இரண்டும் வேறுவேறு ஊர்களா? இதனையும் பார்க்கவும்-அருள்மிகு குமாரசாமி திருக்கோயில், (திருப்புகழ் தலம்)--Booradleyp1 (பேச்சு) 14:20, 23 சூன் 2015 (UTC)

வணக்கம் Booradleyp1 20.6.2015 அன்று கோயில் உலாவின்போது இவ்வூருக்குச் சென்றிருந்தோம். காவளூரைத் தான் காவலூர் என்று குறிப்பிடுவதாகக் கூறினர். நீங்கள் கூறியிருந்த திட்டை ரயில் நிலையத்திலிருந்து 6 கிமீ என்பதும், நீங்கள் தந்திருந்த இணைப்பும் சரியே. உள்ளே தள்ளியிருப்பதால் இக்கோயில் அமைவிடம் சற்று குழப்பமாக எங்களுக்குத் தெரிந்தது. கோயிலுக்குச் செல்லவே சிரமப்பட்டோம். காவலூருக்கு திட்டை அன்னப்பன்பேட்டை வழியாகவும், அய்யம்பேட்டை அகரமாங்குடி வழியாகவும், திருக்கருக்காவூர் வழியாகவும், அய்யம்பேட்டை வையச்சேரி வழியாகவும் செல்லலாம் என்று கூறினர். மேலும் உறுதி செய்துவிட்டு விரைவில் தொடர்பு கொள்வேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:31, 24 சூன் 2015 (UTC)