பேச்சு:கால்வினும் ஆபுசும்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கால்வினும் ஆபுசும் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

செல்வா, ஒலிப்பு உதவிக்கு சிறப்பு குறியீட்டில் அடைப்புக்குறிகளுக்கிடையே உசாவுரை சேருங்களேன். -- சுந்தர் \பேச்சு 16:26, 7 ஜூன் 2008 (UTC)

சுந்தர், இது பற்றி இன்னும் தெளிவாக சில எழுத உள்ளேன்.அவற்றுள் சில திருத்தங்களும் செய்ய வேண்டும்.அ́, அ̀, அ̂ , அ̑, ம͈ , ͋ச், ம̭ தி̧ ம ̧ ̻ப  ̥̥உ அ̆ ,  கு̌  அ̈ போன்ற வேறு சில பொருத்தமான குறியீடுகளுடனும், அவற்றை எப்படி எளிதாக விக்கியில் ஆளலாம் என்றும் சேர்த்து எழுதுகிறேன். இவற்றை வார்ப்புருக்களோடு அல்லது தொகுப்புப்பக்கத்தில் கீழே உள்ள எழுத்துவரிசையுடன் இணைத்தும் வைத்தால் யாரும் எளிதாகப் பயன்படுத்துவர். இப்படி, சீன மொழி முதலான பிறமொழி சொற்களையும் ஓரளவிற்கு எளிதாக தமிழில் குறிக்க இயலும். --செல்வா 18:05, 7 ஜூன் 2008 (UTC)

இதன் தலைப்பு கால்வினும் ஆப்புசும் என்று சொல்வது நன்றாக இருக்கும் என்று தோன்றுகின்றது. அனுமான், அரி, அரன் என்பதுபோல ஆபுசு அல்லது ஆப்புசு. ஒலித்துல்லியம் வேண்டும் எனில் (பொதுவழக்குக்கு அல்ல, ஒரு முறை சுட்டிக்காட்டவே), ஃஆ'ப் ͋ச் எனலாம். Calvin என்பதை கால்வின் என்று தமிழில் சொல்லுதலே பொருந்தும். அகர-ஏகார கலப்பொலியைக் குறிக்க மேற்குறிப்பிட்டவாறு ஒரு உயிரொலித்திரிபைக்காட்டும் ஒரு குறி இட்டுக்காட்டலாம். இது பற்றி எழுதுகிறேன்.--செல்வா 18:17, 7 ஜூன் 2008 (UTC)

நன்றி செல்வா. கனகு, உங்கள் திருத்தங்களுக்கும் மொழிபெயர்ப்புகளுக்கும் நன்றி. -- சுந்தர் \பேச்சு 03:22, 8 ஜூன் 2008 (UTC)
செல்வா, நீங்கள் ஆப்சுக்கு மாற்றாக ஆபுசுவை ஏன் பரிந்துரைத்தீர்கள் என்பதை தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரத்தின் முதல் பகுதியைப் படிக்கையில் தெரிந்து கொண்டேன். அதன்படி தலைப்பை மாற்றியுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 03:44, 7 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]

imaginative[தொகு]

புனைவாற்றல் மிக்க என்று சொல்லலாம். புனைவாளுமை மிக்க பாத்திரங்கள் என்றும் கூறலாம் என்று நினைக்கிறேன். கற்பனைத் துடிப்பு மிகுந்த பாத்திரங்கள், கற்பனைத்திறம் மிக்க பாத்திரங்கள் என்றெல்லாமும் கூறலாம் என்று நினைக்கிறேன்.--செல்வா 03:53, 8 ஜூன் 2008 (UTC)

நன்றி செல்வா. -- சுந்தர் \பேச்சு 04:10, 8 ஜூன் 2008 (UTC)

கட்டுரையை முடிக்க உதவுங்கள்[தொகு]

இந்தக்கட்டுரையின் எஞ்சிய பத்திகளை எழுதி முடித்துவிட்டால் முதல் பக்கத்தில் காட்சிப்படுத்த ஏதுவாகும். நண்பர்களே, உதவுங்கள். -- சுந்தர் \பேச்சு 18:16, 6 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]

முடித்துவிட்டேன். அறிவாளர்களின் கருத்துப் பத்தியை இடவில்லை.(கட்டுரை 83kb வந்து விட்டது. எனவே அதை சேற்கவில்லை)--சோடாபாட்டில் 21:38, 15 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
நல்லது, சோடாபாட்டில். எவ்வளவு தகவல்களைச் சேர்த்துள்ளீர்கள், வியக்கிறேன். ஓரிருமுறை மெய்ப்புப் பார்க்க வேண்டும். அதன்பின் இதனைச் சிறப்புக் கட்டுரையாக்க விண்ணப்பிக்கலாம். -- சுந்தர் \பேச்சு 02:34, 16 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
உரைதிருத்தும் போது. கால்வின்பந்து கருத்துப்பாடலை மாற்ற முடியுமா என்று பாருங்களேன். (எனக்கு சுட்டாலும் கவிதை வராது. :-) )--சோடாபாட்டில் 05:38, 16 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
சரி சோடா. -- சுந்தர் \பேச்சு 06:08, 16 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

கால்வின் பந்து கருத்துப்பாடல்[தொகு]

கால்வின்பந்து கருத்துப்பாடலை குதறி வைத்திருக்கிறேன். கவிதை எழுதும் பழக்கமுள்ளவர்கள் கொஞ்சம் சரி செய்து கொடுங்கள்--சோடாபாட்டில் 06:52, 15 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]