பேச்சு:காலம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குறிப்புகள்[தொகு]

"இந் நூலில் விலை 100 இந்திய உரூபாய். கிடைக்கும் இடம்: முனைவர் தமிழப்பன், எச்.138/2, 15ஆவது குறுக்குத் தெரு, பெசந்த் நகர், சென்னை 600 090. தொலைபேசி 91-44-4466927."

மேற்கண்ட விற்பனைத் தகவல்கள் த.வி பொதுவாக சேற்கப்படுவதில்லை. --Natkeeran 11:40, 8 செப்டெம்பர் 2007 (UTC)

நற்கீரன், நான் கொடுத்துள்ள குறிப்புகள் அப்புத்தகத்தில் இருந்தே எடுத்தது. நூல் எங்கு கிடைக்கும், என்ன விலை என்பது பயனுடைய செய்தி. அதனை நீங்கள் நீக்கி இருக்க வேண்டாம் என்பது என் கருத்து. இத்தகு பயனுடைய செய்திகள், நூலில் குறிப்பிட்டு இருந்தால் தரவேண்டும் என்பது என் கருத்து. ஒரு நூலின் பதிப்பாளரின் பெயரும், எந்த இடத்தில் இருக்கும் பதிப்பாளர் (எ. கா. Ney York) என்று குறிப்பதும் நூலை தெளிவாக அடையாளப்படுத்துவதற்கே. மேற்குலகில், பதிப்பாளர் பெயரை தெரிந்துகொண்டு பல செய்திகள் அந்நூலைப் பற்றி திரட்ட முடியும். தமிழ்ப் பதிப்பாளர்களைப் பற்றிய இவ்வகை செய்திகள் ஒரு தமிழர்க்கு இல்லாதது வருந்தத்தக்க நிலை. எங்கு ஒரு நூல் கிடைக்கும் என்னும் செய்தி இருப்பது மிகவும் நல்லது என்பது என் கருத்து. அருள்கூர்ந்து, இவ்வகையான பயனுடைய செய்திகளை நீக்காதீர்கள்.--செல்வா 13:47, 8 செப்டெம்பர் 2007 (UTC)


செல்வா, பொதுவாக தொலைபேசி எண்ணைச் சேர்ப்பது விக்கிபீடியாவில் விரும்பப்படுவதில்லை. விலை இட்டாலும், விற்பனை இடத்தைக் குறிப்பது அவ்வளவு நல்லதல்ல. காரணம் த.வி பலர் விளம்பரப் பலகையாக பயன்படுத்திவிடும் அபாயம் உண்டு. இதுவரை அப்படியான ஒரு வழக்கம் இருக்கின்றது. பிறர் கருத்து அறிய ஆவல். --Natkeeran 13:53, 8 செப்டெம்பர் 2007 (UTC)

நற்கீரனுடைய கருத்தே என்னுடையதும். தகவல்கள் பயனுள்ளதாக இருப்பினும் பலர் விளம்பரப்படுத்தல்களுக்கு த.வியைப் பயன்படுத்தத் தொடங்கிவிடுவர். இத்தகைய தகவல்கள் உள்ள வெளி இணைப்புக்களே பொருத்தமானவை. --கோபி 14:58, 8 செப்டெம்பர் 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காலம்_(நூல்)&oldid=162759" இருந்து மீள்விக்கப்பட்டது