பேச்சு:கார்ல் வில்லெம் ரெய்ன்முத்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்ல் வில்லெம் ரெய்ன்முத் என்னும் கட்டுரை வானியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வானியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

395 சிறுகோள்களின் ஆங்கிலப்பெயர்களை தமிழில் மொழிபெயர்த்துக்கொடுத்தால், நான் அதனை தமிழில் மொழியாக்கம் செய்கிறேன்.07:26, 6 சூலை 2011 (UTC)உழவன்+உரை..

இவை உலகெங்கும் ஒரே மாதிரியான பெயரிடலைக் கொண்டுள்ளதால், தமிழில் எழுத்துப்பெயர்த்தால் போதும். மொழி பெயர்க்கத் தேவையில்லை--சோடாபாட்டில்உரையாடுக 07:43, 6 சூலை 2011 (UTC)[பதிலளி]

அப்போலோ சிறுக்கோள் தொகுதி என்பது ஒரு கோளை மட்டுமே குறிக்கிறது. அப்போலோ சிறுக்கோள் தொகுதி என்பதே சரி. ஏனெனில், அதில் பல சிறுகோள்கள் அடங்குகின்றன.07:16, 8 சூலை 2011 (UTC)உழவன்+உரை..

தகவலுழவன், நீங்கள் எழுத்துப் பெயர்த்த சிறுகோள்கள் அனைத்தும் ஆங்கில விக்கிக்கே போகிறது. ஆங்கில விக்கி இணைப்புகளை நீக்குங்கள். சிவப்பு இணைப்பு இருந்தாலும் பரவாயில்லை. தமிழில் கட்டுரைகள் பின்னர் உருவாக்கலாம்.--Kanags \உரையாடுக 08:13, 8 சூலை 2011 (UTC)[பதிலளி]

அனைத்திலும் மாற்றிவிட்டு ஒவ்வொரு தமிழ் பெயரிலும் முன்னொட்டு இட வேண்டும் என்பதால் அப்படியே விட்டுள்ளேன். இனிவரும் கட்டுரைகளில் தமிழ் தலைப்புகளுடன் தவறாமல் பின்பற்றுவேன்.அவ்வப்போது எனக்கு வழிகாட்டுவதற்கு நன்றி. அச்சிறு கோள்களுக்கு இலக்கமிட்டால் படிப்பவருக்கு வசதியாக இருக்குமென எண்ணுகிறேன்.சில ஆங்கில சொற்களை தமிழில் மொழிபெயர்க்கும் போது, அவற்றின் மூலத்தை note என்ற சிறு குறிப்பால் இடுவது வாசிப்பவருக்கு தெளிவைத் தரும் என்றே எண்ணுகிறேன். 00:24, 9 சூலை 2011 (UTC)உழவன்+உரை..

தமிழ் விக்கிக் கட்டுரைகளில் ஆங்கில விக்கிப் பக்கங்களுக்கு note சேர்க்கும் வழக்கம் இல்லை. நீங்கள் கட்டுரையில் ref group=note கொண்டு சேர்த்த இணைப்புகளை நீக்கியிருக்கிறேன். கட்டுரையின் வலப்பக்கத்தில் உள்ள பட்டியலின் படி நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்க் கட்டுரைகளை உருவாக்க வாய்ப்புள்ளது. ஆங்கில விக்கி இணைப்புகளை நீக்கி விடுங்கள்.--Kanags \உரையாடுக 00:41, 9 சூலை 2011 (UTC)[பதிலளி]

ஆம்.ஆங்கிலக் கட்டுரைகளை விட, தகவலுள்ள கட்டுரைகளை உருவாக்குவேன். முன்கூட்டியே தங்கள் கருத்துக்களை, கவருமாறு தெரிவித்தமைக்கு நன்றி. மறவாமல் கவனத்தில் கொள்வேன். வணக்கம்.01:17, 9 சூலை 2011 (UTC)உழவன்+உரை..

இதில் சுசி, டாட்டா என்பன சிறுகோள்களுக்கானவை அல்ல. அனைத்து சிறுகோள்களின் பெயர்களுக்கும் பின்னால் சுசி (சிறுகோள்) என்று இணைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்களின் கருத்தறிய ஆவல்.01:46, 16 சூலை 2011 (UTC)உழவன்+உரை..


இவ்வாறான சில பொதுச் சொற்களுக்கு அடைப்புக்குறிகள் சேர்ப்பது அவசியம். அனைத்துக்கும் தேவைப்படாது. ஆனாலும், ஆங்கில விக்கிக் கட்டுரைகளில் எவ்வாறுள்ளதோ அவ்வாறே இங்கும் தலைப்பிடலாம். ஒரே தலைப்பில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கட்டுரைகள் இருந்தால் பக்கவழிமாற்றுப் பக்கங்களும் ஏற்படுத்தலாம். --Kanags \உரையாடுக 02:24, 16 சூலை 2011 (UTC)[பதிலளி]