பேச்சு:காப்பமைவியம் (கணிதம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

'காப்பமைவியம்' என்ற சொல் நான் உண்டாக்கிய சொல். அமைவியம் என்ற சொல் 'morphism' என்ற ஆங்கிலச்சொல்லுக்கு மொழிபெயர்ப்பாக அகராதிகளில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அமைப்புகளைக் காப்பதால் 'homomorphism' ஐ நான் காப்பமைவியம் என்று உண்டாக்கினேன். A morphism that preserves some particular structure is a homomorphism. 'preserve' என்ற கருத்தைக் கொடுக்கும் தமிழ்ச் சொற்கள்: காத்தல், அல்குதல், சேமித்தல் முதலியவை. 'காத்தல்' என்ற வினையை நான் பயன்படுத்தியிருப்பது சரியாயிருக்கும் என்று நம்புகிறேன்.

இக்கட்டுரை பள்ளி, இடைநிலைக்கல்லூரி, ஆகிய படிகளைத்தாண்டி முதுநிலைப்படிகளுக்குச்செல்கிறது. அதனால் homomorphism, epimorphism, monomorphism, endomorphism, automorphism என்ற சொற்களுக்கு நாம் இங்கு உண்டாக்குகிற கலைச்சொற்கள் பிற்காலத்தில்தான் உலகின் கண்ணில் படும். அதனால் தயவு செய்து பின்வரும் என் கேள்விக்கு யோசித்து தீர்வு சொல்லவும்:

Group homomorphism, Ring Homomorphism, Module Homomorphism என்ற சொற்களுக்கு

"குலம் காப்பமைவியம் ", "வளையம் காப்பமைவியம்", "கலம் காப்பமைவியம்"

versus

"குலக்காப்பமைவியம்", "வளையக்காப்பமைவியம்", "கலக்காப்பமைவியம்"

இவையிரண்டுவரிகளில் எதை பயன்படுத்தினால் சரியாயிருக்கும்? Remember, in advanced mathematics, these words will have to be used several several times on every page. இரண்டாவது வரியிலுள்ள சொற்றொடர்கள் என் காதுகளுக்கு இனிக்கவில்லை போல் தோன்றுகிறது! ஆனால் முதல் வரியிலுள்ள சொற்களை தமிழ்த்தாய் அங்கீகரிப்பாளா?

--Profvk 22:22, 1 ஆகஸ்ட் 2007 (UTC)

அமைவியம் சரியென்றால், காப்பமைவியம் சரியென்றால்,

"குலக்காப்பமைவியம்", "வளையக்காப்பமைவியம்", "கலக்காப்பமைவியம்" என்பன சரியாகும். அமைவியம், காப்பமைவியம் என்பன கணிதத்தில் இங்கு சரியாக இருக்கும் என்றே நினைக்கிறேன். பருப்பொருள்களின் இயற்பியலில் morphology என்று கூறுவது புறவடிவ அமைப்பியல் (பெரும்பாலும் படிவு முறையிலோ, பிற முறைகளிலோ பொருள் சேர்ந்து உருவாகும் பொழுது மேற்பரப்பில் தோன்றும் புறவடிவ அமைப்பியல் பற்றியது. பருமையாகக் கூறும்பொழுது சொரசொரப்பு, மழமழப்பு என்பதெல்லாம், நுண்ணோக்கியில் காணும்பொழுது பல்வேறு நுட்ப புறவடிவ அமைப்புகள் கொண்டிருக்கும். இவற்றை புறவடிவ அமைப்பியல் எனலாம்).--செல்வா 23:39, 1 ஆகஸ்ட் 2007 (UTC)