பேச்சு:காந்தப்பாயம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது காந்தப்பாய்வு என்று இருப்பது நன்றாக இருக்கும். பாயம் என்ற சொல் சரியான பொருள் தரும் சொல்லாக இருப்பதாகத் தோன்றவில்லை. பாய் என்னும் வினைச் சொல்லிலிருந்து பாய்வு, பாய்தல் (பாய்தல் > பாய்ச்சல் > பாசனம்), பாய்கை முதலிய சொற்களைப் பெறலாம். இதே போல தேய், தேய்வு, தேய்தல். பாயம் என்று ஒரு சொல் ஆக்கலாம், ஆயின் அது பாய்வு என்னும் பொருள் தருமா என நினைக்க வேண்டும். ஆய்>ஆய்வு, தோய் >தோய்வு, சாய்>சாய்வு என்று. ஆயம், சாயம், தோயம் ஆகிய சொற்கள் உள்ளன ஆனால் பொருள் கிளைப்பது வேறாக உள்ளது. எனவே பாய்வதைக் குறிக்கவேண்டுமெனில் பாய்வு என்று குறிப்பது நலம்.--C.R.Selvakumar 23:25, 17 ஜூலை 2006 (UTC)செல்வா

இலங்கைப் பாடநூல்களில் நீண்டகாலமாக காந்தப்பாயம் என்ற சொல்லே பயன்பட்டபோதிலும் செல்வாவின் கருத்தே சரி எனப்படுகின்றது. காந்தப்பாய்வு என மாற்றுவதே சரி. கருத்துக் கூறவும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 05:59, 25 ஏப்ரல் 2014 (UTC)

காந்தபாயம்[தொகு]

ஒரு காந்தப்பாயத்தை உருவாக்க முடியுமா 2409:408D:4E42:1133:0:0:C589:1C08 06:23, 30 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காந்தப்பாயம்&oldid=3918378" இலிருந்து மீள்விக்கப்பட்டது