பேச்சு:காட்டு நாகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Varunkumar19: உயிரியல் கட்டுரை ஒன்றுக்கு அதன் உயிரியல் பெயரையும், பொதுவாக வழங்கப்படும் (அப்படி ஒன்றிருந்தால்) ஆங்கிலப் பெயரையும் கட்டாயம் கட்டுரையின் முதல் வரியில் தர வேண்டும். காட்டு நாகம் என்ற தமிழ்ப் பெயரை ஆப்பிரிக்காவில் வைத்திருக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன். அதற்கு ஆங்கிலப் பெயர் இருக்கும். அதே நேரம் உயிரியல் பெயரும் இருக்கும்.--Kanags (பேச்சு) 08:02, 27 பெப்ரவரி 2019 (UTC)

சந்தேகம்[தொகு]

@Varunkumar19: காட்டு நாகம் என்ற பெயர் தமிழில் ஒன்று இல்லவே இல்லை, அப்படி இருக்கும் போது இப்பெயரை எப்படி வைத்தீர்கள்?? விளக்கம் தேவை. --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 14:36, 27 பெப்ரவரி 2019 (UTC)

தமிழில் ஒரு பெயர் இல்லாத போது ஆங்கிலப் பெயரை மொழிப்பெயர்த்துக் கொள்வதில் தவறேதும் இல்லையே? Forest cobra= காட்டு நாகம் Varunkumar19 (பேச்சு) 14:53, 27 பெப்ரவரி 2019 (UTC)

@Varunkumar19: நம் விருப்பத்திற்கு பெயர் வைப்பதற்கு இது ஒன்னும் தனியார் வலைதளம் அல்ல, இது விக்கிப்பீடியா, இதற்கென்று தனி கொள்கைகளும், சிறப்புகளும் உள்ளன. நாம் அதை கடைப்பிடிக்க வேண்டும். முதலில் ஒரு கட்டுரைக்கு பெயர் எப்படி வைக்க வேண்டும் என விதிமுறைகளைத் தெரிந்துக் கொண்டு, அதன் பிறகு பேசுங்கள். --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:10, 27 பெப்ரவரி 2019 (UTC)

எனினும் நான் என் விருப்பத்தின் அடிப்படையிலோ பொருளற்ற வகையிலோ பெயர் வைக்கவில்லை. Forest cobra என்ற ஆங்கில பெயரையே தமிழில் மொழிப்பெயர்த்து வைத்துள்ளேன். இவ்வாறு செய்வது தவறு என்றால் தமிழ் விக்கிப்பீடியாவில் பல கட்டுரைகளை உருவாக்கவே இயலாது. நன்றி. Varunkumar19 (பேச்சு) 15:22, 27 பெப்ரவரி 2019 (UTC)

@கௌதம் 💓 சம்பத், காட்டில் வாழும் நாக இனங்கள் பல இருப்பினும் அவை பல்வேறு வகையான இடங்களிலும் வாழ்கின்றன. ஆனால் இந்த இனம் காட்டில் மட்டுமே வாழும் நாகம் ஆகும். எனவே காட்டு நாகம் என்ற தலைப்பு பொருத்தமானது தான் என்று கருதுகிறேன். நன்றி. Varunkumar19 (பேச்சு) 15:46, 27 பெப்ரவரி 2019 (UTC)

@Kanags, Nan, and AntanO: தங்களின் கருத்துக்களை தெரிவியுங்கள். --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:49, 27 பெப்ரவரி 2019 (UTC)

காட்டு நாகம் என்று மொழிபெயர்த்ததில் தவறில்லை. ஆனால், கட்டுரையில் கருநாகம் என்றொரு சொல்லிருப்பது பொருத்தமாகப் படவில்லை.--பாஹிம் (பேச்சு) 00:53, 28 பெப்ரவரி 2019 (UTC)

ஆம். கருப்பு நிறத்தில் பல நாக இனங்கள் உள்ளதால் கருநாகம் என்று குறிப்பிடுவது பொருத்தமற்றதே ஆகும். எனவே அதை நீக்கிவிடுகிறேன். நன்றி. Varunkumar19 (பேச்சு) 01:00, 28 பெப்ரவரி 2019 (UTC)
வருண்குமார், நீங்கள் Forest cobra என்ற ஆங்கிலப் பெயரில் இருந்து காட்டு நாகம் என மொழிபெயர்த்திருக்கிறீர்கள். ஆனால் கட்டுரையில் ஆங்கிலப் பெயரைக் குறிப்பிடவில்லை. அதனையும் குறிப்பிடுங்கள்.--Kanags (பேச்சு) 07:29, 28 பெப்ரவரி 2019 (UTC)
Y ஆயிற்று, நன்றி. Varunkumar19 (பேச்சு) 08:56, 1 மார்ச் 2019 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காட்டு_நாகம்&oldid=2666971" இலிருந்து மீள்விக்கப்பட்டது