பேச்சு:காடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg காடி என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

அமிலம் என்பது புளிப்புத்தன்மை உடையது. இதனை புளிமம் அல்லது காடி என்று சொல்வர். காடி என்பது தமிழ்நாட்டிலும் அகராதிகளிலும் கொடுக்கப்பட்டுள்ளது. துவர்ப்பு என்று சுவை இங்கே கூறியுள்ளது சரியில்லை என்று நினைக்கிறேன். ஒருக்கால் சில துவர்ப்புச் சுவையும் கொண்டிருக்குமோ அறியேன். இருக்காது என்றே எண்ணுகிறேன். ஏன் எனில், துவர்ப்பு என்பது பாக்கு, மற்றும் மிகமிகப் பிஞ்சாக இருக்கும் சில காய்கள் போன்றவையே துவர்ப்பாக இருக்கு. துவர்ப்பு என்னும் சுவையும், நம் தமிழர்களின் அறிவும் சொல்லும் ஆகும். அறிவியல் உலகில் இதற்குப் பெயர் இல்லாதது மட்டுமில்லாமல், இதனை ஒரு சுவையாகவும் ஏற்க மறுக்கின்றனர். அறிவியல் உலகில் உப்பு (உவர்ப்பு), புளிப்பு, இனிப்பு, கசப்பு ஆகிய நான்கையே ஒப்புக்கொள்கின்றனர். மிக அண்மையில் ஐந்தாவதாக ஒரு சுவை உமாமி என்பதைக் கூறுகின்றனர். காரம், துவர்ப்பு இது இரண்டும் தமிழர்கள் (பிற தென்னிந்தியர்களும் இந்தியர்களும்) உணர்வதை இன்னும் அறிவியல் உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை. அமிலம் என்பது புளிப்பாக இருக்கும், துவர்ப்பாக இருக்காது என்பது என் எண்ணம். கட்டுரையில் மாற்றலாமா?--செல்வா 19:04, 25 பெப்ரவரி 2007 (UTC)[பதில் அளி]

செல்வா சொல்வது போல அமிலம் புளிப்பானதென்பதே எனது கருத்தும். --கோபி 19:25, 25 பெப்ரவரி 2007 (UTC)[பதில் அளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காடி&oldid=2284641" இருந்து மீள்விக்கப்பட்டது