பேச்சு:காகிதம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காகிதம் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

கடதாசியா அல்லது கடுதாசியா? . கடுதாசி என்றே கேள்விப்பட்டுள்ளேன். --குறும்பன் 17:10, 15 டிசம்பர் 2008 (UTC)

நான் "தாள்" என்று ஒரு கட்டுரையை அரைகுறையாக எழுதி வைத்திருந்தேன். காகிதம் என்று மாற்றுவழி தரலாம் என்றும் எண்ணியிருந்தேன். கடுதாசி என்பது மடல் (letter) என்னும் பொருள் தருவது. இலங்கையில் கடதாசி என்று கூறுகிறார்கள் போல் தெரிகின்றது. தாள்/காகிதம் என்னும் இத் தலைப்பு முதன்மையான்வற்றுள் ஒன்றாகும். விரிவாகவும் விளக்கமாகவும் எழுதவேண்டிய கட்டுரை. தொடங்கிய மயூரநாதனுக்கு நன்றி. அதாவது உலகில் அறிவுப் புரட்சிக்கும், தற்கால வாழ்வின் ஏற்றத்திற்கும் அடிப்படையானவற்றுள் ஒரு கண்டுபிடிப்பு; பயன்பாடுகளில் ஒன்று. தாள்களில் பற்பல வகைகள் உள்ளன, பல்வேறு தடிப்புள்ள அட்டைகள், பல்வேறு பயன்பாடுகளுக்கான தாள்வகைகள், பல்வகை தொழிநுட்ப வளர்ச்சிகள், நாடுகளின் பொருளாதாரத்தில் இதன் பங்கு என்று பற்பல கோணங்களில் பல கட்டுரைகளாக எழுத வேண்டிய ஒன்று. --செல்வா 17:32, 15 டிசம்பர் 2008 (UTC)

தலைப்பு[தொகு]

கடதாசி என்பது கிர்தாஸ் என்ற அரபுச் சொல்லின் மருவல். எனவே இதன் தலைப்பைத் தமிழ்ச் சொல்லாகிய தாள் என மாற்றுவதே பொருத்தம். எனினும் தாள் என்ற சொல் (வெங்காயத் தாள் என்பது போன்று) புல் இனங்களின் இலையையும் குறிக்கும்.--பாஹிம் (பேச்சு) 03:45, 3 சனவரி 2013 (UTC)[பதிலளி]

//கடதாசி என்பது கிர்தாஸ் என்ற அரபுச் சொல்லின் மருவல். //எந்த ஆதாரத்தின் அடிப்படையில் கூறுகிறீர்கள்? உங்கள் கூற்றை ஆதாரத்துடன் முன்வையுங்கள். நன்றி!--HK Arun (பேச்சு) 09:59, 3 சனவரி 2013 (UTC)[பதிலளி]

கடதாசி எனும் சொல் எவ்வாறு மருவியது?[தொகு]

கிர்தாஸ் என்பது அரபு மொழிச் சொல். இச்சொல்லே உருது, இந்தி, இந்தோனேசியம், மலாயு போன்ற மொழிகளிலும் பரவியுள்ளது. ஐரோப்பாவில் இஸ்லாமிய ஆட்சி நிலவியது இன்றைய போர்த்துக்கல், எசுப்பானியா, பிரான்சு, இத்தாலி போன்ற நாடுகளில் நிலவியது. ஐரோப்பாவுக்குக் கடதாசியை அறிமுகம் செய்தோர் அரபியரே. ஆங்கில விக்கிப்பீடியாவில் இது Paper was invented by the Cai Lun by 105 AD during the Han Dynasty and spread slowly to the west via the middle east. Papermaking and manufacturing in Europe started in the Iberian Peninsula, today's Portugal and Spain and Sicily in the 10th century by the Muslims living there at the time எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடதாசி உருவாக்கும் தொழினுட்பம் மத்திய ஆசியாவில் நடைபெற்ற ஒரு போரின் போது கைதிகளாகப் பிடிபட்ட இரு சீனர்களிடமிருந்தே அரபியருக்குக் கிடைத்தது. இது இவ்வாறிருக்க, cartaz என்ற போர்த்துக்கீசியச் சொல்லிலிருந்து உருவானது என்று விக்சனரி குறிப்பிடுகிறது. எனினும் அதன் அடிப்படைச் சொல் கிர்தாஸ் என்னும் அரபுச் சொல்லாகும்.--பாஹிம் (பேச்சு) 11:25, 3 சனவரி 2013 (UTC)[பதிலளி]

கிர்தாஸ் என்பது அரபு மொழிச் சொல் என்பதற்கு ஆதாரம், திருக்குர்ஆனில் இரண்டு இடங்களில் அச்சொல் குறிப்பிடப்படுகிறது என்பதாகும். وَلَوْ نَزَّلْنَا عَلَيْكَ كِتَابًا فِي قِرْطَاسٍ فَلَمَسُوهُ بِأَيْدِيهِمْ لَقَالَ الَّذِينَ كَفَرُوا إِنْ هَٰذَا إِلَّا سِحْرٌ مُبِينٌ காகிதத்தில் (எழுதப்பட்ட) ஒரு வேதத்தையே நாம் உம் மீது இறக்கி வைத்து, அதனை அவர்கள் தம் கைகளால் தொட்டுப் பார்த்தபோதிலும், இது பகிரங்கமான சூனியத்தைத்தவிர வேறில்லை என்று அந்நிராகரிப்போர் நிச்சயமாக சொல்வார்கள் என்ற 6:7 ஆவது வசனத்திலும், அதன் பின்னர் 6:91 ஆவது வசனத்திலும் கிர்தாஸ் என்னும் சொல் காணப்படுகிறது.--பாஹிம் (பேச்சு) 11:57, 3 சனவரி 2013 (UTC)[பதிலளி]
//கிர்தாஸ் என்பது அரபு மொழிச் சொல்.//இருக்கலாம். //Paper was invented by the Cai Lun by 105 AD during the Han Dynasty and spread slowly to the west via the middle east.//இது கடதாசி தொழில் நுட்பம் எவ்வாறு மத்திய கிழக்காசிய நாடுகள் ஊடாக ஐரோப்பா பரவியது என்பதற்கான கூற்று. //6:7 ஆவது வசனத்திலும், அதன் பின்னர் 6:91 ஆவது வசனத்திலும் கிர்தாஸ் என்னும் சொல் காணப்படுகிறது.// உங்களின் இந்த கூற்று திருக்குர் ஆன் கடதாசி தொழில் நுட்பம் தோன்றியதன் பின்னரே தோன்றியுள்ளது என்பதை காட்டுகிறது. எனவே திருக்குர் ஆனிலும் "கிர்தாஸ்" எனும் சொல் இருக்கலாம். ஆனால் இவை எதுவுமே கடதாசி எனும் சொல் கிர்தாஸ் எனும் அரபு மொழிச் சொல்லில் இருந்து தான் மருவியது என்பதற்கான சான்றுகள் அல்லவே.
//cartaz என்ற போர்த்துக்கீசியச் சொல்லிலிருந்து உருவானது.//என்று கூறும் நீங்கள் //எனினும் அதன் அடிப்படைச் சொல் கிர்தாஸ் என்னும் அரபுச் சொல்லாகும்.// என்று எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள் என்று புரியவில்லை; அதற்கான சான்றுகள் எதுவும் வழங்கப்படவும் இல்லை. இருப்பினும் இது இந்த உரையாடலுக்கு அவசிமில்லை என்பதால் விட்டுவிடுவோம். உங்கள் பதில்கள் கேள்விக்கான பதில்களாக அல்லாமல் சுற்றி வளைத்து செல்கிறது. இந்தப் போக்கு, உங்கள் அரபு மொழிப் பக்கசார்பை வெளிப்படுகிறதே தவிர நீங்கள் முன்வைத்த சான்றற்ற கூற்றுக்கான எந்த சான்றையும் தரவில்லை.
கேள்வி "எப்படி கடதாசி எனும் சொல் கிர்தாஸ் என்ற அரபுச் சொல்லில் இருந்து மருவியது?" என்பது மட்டுமே. நீங்கள் எந்த வேர்ச்சொல் அகரமுதலில் அல்லது வேர்ச்சொல்லாய்வாளரின் வெளியீட்டில் பார்த்தீர்கள் என்பதை எளிதாக அதற்கான இணைப்பை வழங்குவதன் மூலம் தந்துவிடலாம். இல்லையாயின் பக்கச்சார்பான வெற்றுக்கூற்றாகவே கொள்ளவேண்டியுள்ளது.--HK Arun (பேச்சு) 13:16, 3 சனவரி 2013 (UTC)[பதிலளி]
உங்களுக்கு நான் எதைக் கூறினாலும் வெற்றுக் கூற்றாகத் தோன்றுவது ஒன்றும் புதிதன்று. எனினும், கிர்தாஸ் என்ற அரபுச் சொல்லிலிருந்து போர்த்துக்கேயத்தில் CARTAS என்றாகியுள்ளது. போர்த்துக்கேயருக்குக் கடதாசியை அறிமுகப்படுத்தியதே அரபிகள் என்கிறது ஆங்கில விக்கிப்பீடியா. அச்சொல்லிலிருந்து தமிழ்ச் சொல் பிறந்தது என்கிறது விக்சனரி.--பாஹிம் (பேச்சு) 13:32, 3 சனவரி 2013 (UTC)[பதிலளி]
ஒரு மொழிச் சொல் எவ்வாறு இன்னொரு மொழியில் மருவியது என்பதை சொற்பிறப்பாய்வாளர்களே விளக்க வல்லவர்கள். அவர்களின் ஆய்வை சொற்பிறப்பாய்வு அகரமுதலிகளே தருகின்றன. எனவே உங்களின் கூற்றின் படி கடதாசி எனும் சொல் எப்படி மருவியது என்பற்கான சான்றுகள் எதுவும் உங்களிடம் இல்லை. இவ்வாறான சான்றுகளற்ற கூற்றுக்களை இதன்பிறகேனும் முன்வைக்காதீர்கள். நன்றி! --HK Arun (பேச்சு) 14:20, 3 சனவரி 2013 (UTC)[பதிலளி]

நீங்கள் கூறும் சொற்பிறப்பாய்வு அகரமுதலிகள் தமிழில் எத்தனை உள்ளன? அவை எவை?--பாஹிம் (பேச்சு) 14:22, 3 சனவரி 2013 (UTC)[பதிலளி]

உங்களின் இந்த கூற்று திருக்குர் ஆன் கடதாசி தொழில் நுட்பம் தோன்றியதன் பின்னரே தோன்றியுள்ளது என்பதை காட்டுகிறது என்கிறார் அருண். இது என்ன விதண்டாவாதம்! கிர்தாஸ் என்ற சொல்லின் அடிப் பொருள் தாள் அல்லது ஓலை என்பதாகும். தாள் என்பதைத் தான் நாம் கடதாசி என்கிறோம்.--பாஹிம் (பேச்சு) 13:34, 3 சனவரி 2013 (UTC)[பதிலளி]

//...தோன்றியுள்ளது என்பதை காட்டுகிறது// என்பது உங்களின் கூற்றின் ஊடாக வெளிப்படும் செய்தி. மேலும் Paper was invented by the Cai Lun by 105 AD during the Han Dynasty// எனும் தகவலும் நீங்கள் வழங்கிய செய்திதான். அது சில நூற்றாண்டுகளுக்கும் முன்னரே கடதாசி கண்டுபிடிக்கப்பட்டதை காட்டுகிறது. உங்கள் கூற்றை நீங்களே மீண்டும் ஒருமுறை பார்க்கவும். --HK Arun (பேச்சு) 14:20, 3 சனவரி 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காகிதம்&oldid=2292302" இலிருந்து மீள்விக்கப்பட்டது