பேச்சு:கள்ளிக்குயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Sirkeer Malkoha அல்லது Sirkeer Cuckoo என்று அழைக்கப்படும் (Phaenicophaeus leschenaultii) இப்பறவை கள்ளிக்குயில் அல்லவா? ( பார்க்க: தமிழில் பறவைப் பெயர்கள் - முனைவர் க. ரத்னம் - பக். 44 )--பரிதிமதி (பேச்சு) 16:57, 10 மே 2012 (UTC)

இப்பறவை தென்னிந்தியாவிற் காணப்படுவதில்லையே. அப்படியிருக்க இதற்குச் சரியான தமிழ்ப் பெயர் இதுதானென மேற்படி நூலிற் கூறப்பட்டிருந்தாலும் அப்பெயர் அவரே இட்ட பெயரா அல்லது பொது வழக்கில் எங்கேனும் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்றறிய வேண்டுமல்லவா? பொது வழக்கில் கள்ளிக்குயில் எனும் பெயர் இதற்குப் பயன்படுத்தப்பட்டிருப்பின் தலைப்பை மாற்றுவதில் எனக்கு எந்த ஆட்சேபனையுமில்லை. மாறாக, அப்பெயர் அவரே இட்ட பெயராக இருப்பின், நாம் மாற்றத் தேவையில்லை.--பாஹிம் (பேச்சு) 17:03, 10 மே 2012 (UTC)

கள்ளிக்குயில் இந்தியா முழுவதிலும் இலங்கையிலும் காணப்படும் ஒரு வகைக்குயில். (The Book of Indian Birds - Salim Ali (Reprint Nov. 2005 - OUP) - p. 171 - ISBN 0195665236). முனைவர் க. ரத்னம் தமிழில் பறவைப் பெயர்கள் பலவற்றையும் பலரால் இடப்பட்ட வெவ்வேறு பெயர்களையும் வழக்கிலுள்ள பெயர்களையும் தொகுத்து அவற்றுள் பொருத்தமானவையையும் தெரிவு செய்துள்ளமையால் அவர் கூறுவதை ஏற்கலாம். நாம் தன்னிச்சையாக இடுவதை விடவும் அவர் கூறுவது பெரும்பாலும் சரியாகவே இருக்கும் என்பது என் துணிபு. --பரிதிமதி (பேச்சு) 17:22, 10 மே 2012 (UTC)