பேச்சு:கள்ளர் (இனக் குழுமம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கள்ளர் குல மக்களது வரலாறு தமிழ் நாட்டின் தொன்மைகாலம் முதல் அண்மைகாலம் வரை தொடர்புடையதாக இருக்கிறது. இவர்களுடைய வரலாற்றை உள்ள படி எழுதினால் அது தமிழ் நாடின் வரலாறாக இருக்கும் என்பதில் ஜயம் இல்லை.

கள்ளர் இனம் என்பது தமிழகத்தில் தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, பட்டுக்கோட்டை, சிவகங்கை போன்ற மாவட்டங்கலளில் அதிகமாகவும், பிற மாவட்டங்களில் சற்று குறைவாகவும் இருக்கும் ஒரு பெருங்குடி சமுதாயமாகும். இவர்களை பொதுவாக தஞ்சை கள்ளர் என்று அழைப்பார்கள். ஆங்கில ஆட்சி இந்தியாவிற்குள் வந்தவுடன் இவர்களின் செல்வாக்கு படிப்படியாக குறைய துவங்கி தற்பொது மிகவும் பிற்பட்ட நிலையில் உள்ளனர். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தொனெசியா, பர்மா, ஆகிய நாடுகளிளும் இவர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். இவர்களை இனம் கண்டு கொள்ள இவர்கள் பயன் படுத்தும் பட்டப் பெயர்கள் பெரிதும் உதவும்.

காவல் கோட்டம்[தொகு]

பல இலக்கிய ஆக்கங்களில் கள்ளர் இனம் பற்றிய குறிப்புகள் உண்டு. சமீபத்தில் சாகித்திய அகாடமி விருது பெற்ற காவல் கோட்டத்திலும் இதற்கான தரவுகள் நிறைய கிடைக்கின்றன. எழுத்தாளர் வெங்கடேசனின் பல கட்டுரைகளை ஆராய்ந்து பார்த்தால் கள்ளர் இனம் பற்றிய ஏகம் செய்திகள் கிடைக்கும். நன்றி. - சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:20, 4 ஏப்ரல் 2012 (UTC)[பதில் அளி]

மேற்கோள்[தொகு]

மேற்கோள் இணைப்புக்கள் தகவலை உறுதி செய்யவில்லை. --AntanO (பேச்சு) 02:29, 19 சூன் 2020 (UTC)[பதில் அளி]

இணைக்கவும்.[தொகு]

கௌதம் 💓 சம்பத் வணக்கம்,

செங்குந்தர், நாடார், வன்னியர் போன்ற சாதி வரலாற்றை பற்றிய பக்கங்களில் எப்படி உள்ளதோ, அதை போன்று தான் நான் பதிவு செய்த பகுதி உள்ளது. இதில் தேவையான உசாத்துணை நூல்கள் இணைக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்ட சாதிகளில் சோழ பாண்டிய மன்னர்களையெல்லாம் தொடர்பு படுத்தி எழுதப்பட்டுள்ளது, ஆனால் கள்ளர் பக்கம் எதார்த்த அளவோடு எழுதப்பட்டுள்ளது. நான் பதிவு செய்ததை மீண்டும் இணைக்க வேண்டுகிறேன். Thanjavr siva (பேச்சு) 14:32, 11 செப்டம்பர் 2020 (UTC)[பதில் அளி]

@Thanjavr siva: நீங்கள் செய்த பதிவு திருத்தம் செய்யப்பட்டது. தாங்கள் சேர்த்த நபர்கள், இந்த இனத்தை சேர்ந்தவர்கள் தான் என்பதற்கானா சான்றுகளை முடிந்த வரை கட்டுரையில் சேருங்கள், இல்லை என்றால் பிற பயனர்களாலோ அல்லது நிர்வாகியாலோ நீக்கப்படலாம், ஏற்கனவே சான்று இல்லை என்ற வார்ப்புரு இணைக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்க. நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:49, 11 செப்டம்பர் 2020 (UTC)[பதில் அளி]

கௌதம் 💓 சம்பத் நன்றி. Thanjavr siva (பேச்சு) 06:56, 18 செப்டம்பர் 2020 (UTC)[பதில் அளி]

கட்டுரையில் இணைக்க[தொகு]

கள்ளர் என்பதற்கு தமிழ் மொழியில் "திருடன்" என்று பொருள் ஆகும். இவர்கள் கொள்ளை அடிப்படெயே தொழிலாக வைத்துள்னர்.[1] ஆதாரம்.

இந்த தகவல்கலை கட்டுரையில் இணைங்கள். குறிப்பு இது en Wikipediaவில் இருந்து மொழிபெயர்த்தேன்.

@AntanO:@Kanags:@Nan:@Gowtham Sampath:, மற்ற கட்டுரையில் உள்ளது போல, இந்த கட்டுரையிலும் இந்த் சமுதாயத்திற்காக, மெளே நான் குறிப்பிட்ட பெயர் தோற்றம் குறித்த தகவலை கட்டுரையின் சேர்க உதவி செயுங்கள.

கள்ளர் என்பதற்கு தமிழ் மொழியில் "திருடன்" என்று பொருள் ஆகும். இவர்கள் கொள்ளை அடிப்படெயே தொழிலாக வைத்துள்னர்.

நன்றி ...−முன்நிற்கும் கருத்து Marudam (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

@Marudam: மேலே தாங்கள் கொடுத்த தகவல் ஆனது, காழ்ப்புணர்ச்சி நோக்கில் சேர்க்க சொல்வது போல தோன்றுகிறது.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 03:37, 27 செப்டம்பர் 2020 (UTC)[பதில் அளி]

@Gowtham Sampath: எனக்கு எந்த காள்புணர்சியும் இல்ல, மற்ற சமுதாயத்தின் கட்டுரையில் அந்த சாதிக்கான சொல்பிறப்பு பற்றி உள்ளது, ஆனால் இந்த கட்டுரையில் மட்டும் இல்லையே ஏன்?? En Wikipediaவில் Thief என்று உள்ளது ஆனால் இங்கு ஏன் அதை மொழிபெயர்த்து தகவல் சேர்க்கவில்லை. அதற்கான நோக்கம் என்ன, விக்கிப்பீடியா என்பது தகவல் கலஞ்சியம் தானே?? ...−முன்நிற்கும் கருத்து Marudam (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.


கௌதம் 💓 சம்பத் வணக்கம்,

தமிழறிஞர், சிறந்த ஆராய்ச்சியாளராகவும் திகழ்ந்த ந. மு. வேங்கடசாமி நாட்டார், தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்ட, 1923 ஆண்டில் எழுதிய கள்ளர் சரித்திரம் நூலில் கள்ளர் என்பதற்கான விளக்கமாக பக்கம் 60 ல் 'கரியவர், பகைவர் என்று கூறி, அதற்கான விளக்கங்கள் இலக்கியத்தில் இருந்தே தந்துள்ளார். [2]

ஆனால் 1993 ஆண்டு எழுதப்பட்ட The Hollow Crown: Ethnohistory of an Indian Kingdom - Nicholas B. நூலில், எந்த தரவுகளும் இல்லாமல் எழுதியதை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் கள்ளர் என்பதற்கு 1998 ஆம் ஆண்டு வெளிவந்த சைவ சித்தாந்த அகராதி கள்ளர் என்பதற்கு இறைவன் என்றும் பொருளை கூட தருகிறது.[3] கள்ளர் மரபினர் பற்றி 1985 ஆம் ஆண்டு வெளிவந்த செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி தரும் விளக்கம் பண்டையர் மற்றும் வெட்சியர் ஆகும். [4] நன்றி. Thanjavr siva

@Marudam: ஆங்கில விக்கியில் உள்ள தகவல் அனைத்தும், தமிழ் விக்கியில் இருக்க வேண்டும் என அவசியம் இல்லை. ஆங்கில விக்கியில் theft என உள்ளது தான், நான் அதை மறுக்கவில்லை, ஆனால் அதை தமிழ் விக்கியில் மொழி பெயர்த்து எழுதுவது முறையல்ல மற்றும் இச்சமூகத்தின் பெயரை கலங்கப்படுத்துவது போல அமையும், அதனால் தான் தற்போது வரை சொற்பிறப்பு பக்கத்தை ஆங்கில விக்கியில் இருந்து மொழிபெயர்த்து எழுதாமல் இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 12:09, 27 செப்டம்பர் 2020 (UTC)[பதில் அளி]

@Gowtham Sampath: (ஆங்கில விக்கியில் உள்ள தகவல் அனைத்தும், தமிழ் விக்கியில் இருக்க வேண்டும் என அவசியம் இல்லை) சரி. நான் தான் சான்றுடன் தகவல்களை சேர்க சொல்கிறேனே, பிறகு என் சேர்க்க மாட்டுகிறீர்கள்.

(ஆங்கில விக்கியில் theft என உள்ளது தான், நான் அதை மறுக்கவில்லை, ஆனால் அதை தமிழ் விக்கியில் மொழி பெயர்த்து எழுதுவது முறையல்ல மற்றும் இச்சமூகத்தின் பெயரை கலங்கப்படுத்துவது போல அமையும், அதனால் தான் தற்போது வரை சொற்பிறப்பு பக்கத்தை ஆங்கில விக்கியில் இருந்து மொழிபெயர்த்து எழுதாமல் இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.) விக்கிப்பீடியா என்பது ஒரு தகவல் கலஞ்சியம் தானே தவிற, ஒரு சாதியினருக்கு ஆதரவான இணையதளம் இல்லை.

(ந. மு. வேங்கடசாமி நாட்டார், எழுதிய கள்ளர் சரித்திரம் நூலில் கள்ளர் என்பதற்கான விளக்கமாக பக்கம் 60 ல் 'கரியவர், பகைவர் என்று கூறி, அதற்கான விளக்கங்கள் இலக்கியத்தில் இருந்தே தந்துள்ளார்.) இருக்கட்டும். ந. மு. வேங்கடசாமியே கள்ளர் சாதியை சேர்ந்தவர் தான், பிறகு எப்படி இவர் நடுநிலையாக எழுதியிருப்பார் என்று நம்புவது?

கௌதம் அவர்களே ஏன், இப்படி இந்த தகவலை சேர்க்க மாட்டேன் என வீம்பு புடுக்கிறீர்கள், நீங்கள் ஏன் இந்த சாதி சார்பாக செயல்படுகிறீர்கள்? நீங்கள் இந்த சாதியை சேர்ந்தவர என நினைக்கத்தோனுது? இறுதியாக கேட்கிறேன், தங்களால் நான் கொடுத்த ஆதாரத்துடன் கூடய தகவலை சேர்கிறீர்களா?இல்லையா??−முன்நிற்கும் கருத்து Marudam (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

@Marudam: நீங்கள் தேவையில்லாத உரையாடலை செய்துகொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் கொடுக்கும் தகவல்களை கட்டுரையில் சேர்க்க முடியாது, தங்களால் ஆனதை பார்த்துக் கொள்ளுங்கள்.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 01:54, 28 செப்டம்பர் 2020 (UTC)[பதில் அளி]

தவறான நடவடிக்கை[தொகு]

கௌதம் 💓 சம்பத் வணக்கம்,

@Marudam: இவர் தொடர்ச்சியாக தவறான முறையில் கள்ளர் பக்கத்தில், தொடர்ச்சியாக பதிவு செய்து வருகிறார். தாங்கள் இதற்கான நடவடிக்கை எடுக்க கேட்டுகொள்கிறேன். Thanjavr siva (பேச்சு) 06:16, 16 அக்டோபர் 2020 (UTC)[பதில் அளி]


இணைக்கவும்[தொகு]

கௌதம் 💓 சம்பத், Almighty34 வணக்கம்,

கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டபோது கீழ் உள்ள சொற்பிறப்பு நீக்கப்பட்டுள்ளதை மீண்டும் இணைக்கவேண்டும் மற்றும் தொண்டைமான் மன்னரின் படமும் நீக்கப்பட்டுள்ளதை இணைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


// கள்ளருக்கான பல சொற்பிறப்பியல் கருத்துக்கள் உள்ளன. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி தரும் விளக்கம் 'பண்டையர்' மற்றும் 'வெட்சியர்' ஆகும்.[5] 'கரியவர்' மற்றும் 'பகைவர்' என்று தமிழறிஞர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் விளக்கமளிக்கிறார்.[6] பணிக்கர் தன்னுடைய ஆய்வில் கள்ளர் என்பதற்கு 'குரு', 'நில உரிமையாளர்', 'கொற்றவர்' என்று குறிப்பிடுகிறார்.[7] மேலும் இறைவன்[8], திருடன் என்ற பொருளும் தமிழில் உள்ளன.//

Yes check.svgY ஆயிற்று-- கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 14:45, 26 மே 2021 (UTC)[பதில் அளி]

இணைக்கவும்[தொகு]

கௌதம் 💓 சம்பத், Almighty34 வணக்கம்,

கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டபோது கீழ் உள்ள சொற்பிறப்பு நீக்கப்பட்டுள்ளதை மீண்டும் இணைக்கவேண்டும் மற்றும் தொண்டைமான் மன்னரின் படமும் நீக்கப்பட்டுள்ளதை இணைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


// கள்ளருக்கான பல சொற்பிறப்பியல் கருத்துக்கள் உள்ளன. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி தரும் விளக்கம் 'பண்டையர்' மற்றும் 'வெட்சியர்' ஆகும்.[5] 'கரியவர்' மற்றும் 'பகைவர்' என்று தமிழறிஞர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் விளக்கமளிக்கிறார்.[9] பணிக்கர் தன்னுடைய ஆய்வில் கள்ளர் என்பதற்கு 'குரு', 'நில உரிமையாளர்', 'கொற்றவர்' என்று குறிப்பிடுகிறார்.[10] மேலும் இறைவன்[11], திருடன் என்ற பொருளும் தமிழில் உள்ளன.//

Yes check.svgY ஆயிற்று-- கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 14:45, 26 மே 2021 (UTC)[பதில் அளி]

கௌதம் 💓 சம்பத் நன்றி 🙏

சொற்பிறப்பு[தொகு]

கௌதம் 💓 சம்பத் அவர்களே உங்களிடம் ஒரு கேள்வி கேகுறேன். கள்ளர் என்றால் தமிழில் திருடன் என்று பொருள் அவளவ் தான் பிற கு என் இந்த கட்டுரையில் பண்டையர் 'வெட்சியர்' கரியவர்' 'பகைவர்' போன்ற பெய்ராகளேலாம் சேர்தீர்கள்?? இந்த பெயரெல்லம் அதே கள்ளர் சாதியை சேர்ந்த ந. மு. வேங்கடசாமி யால் குறிப்பிடப்பட்டது. அப்படி இருக்கும் போது அவர் சொல்வது எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?? பதில் கூறுங்கள்.. இல்லை என்றால் அதை நேகுங்கள் உங்களால் முதியது என்றால் எண்ணையவது நீக விடுங்கள்அரையர் முத்து (பேச்சு) 18:58, 26 மே 2021 (UTC)[பதில் அளி]

@அரையர் முத்து: இங்க பாருங்கள் ஒரே விடயத்தை திரும்ப திரும்ப பேசுவது எனக்கு பிடிக்காது. நீங்கள் சொல்லும் கருத்தை, இதற்கு முன்பே கலந்துரையாடல் செய்யப்பட்டது. இதற்கு மேலும் இதை பற்றி பேச எனக்கு விருப்பமில்லை.-- கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 07:08, 27 மே 2021 (UTC)[பதில் அளி]
 1. Nicholas Dirks (1993). The Hollow Crown: Ethnohistory of an Indian Kingdom (2nd ). University of Michigan Press. பக். 242. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780472081875. https://books.google.com/books?id=cegr6zH9PFEC&pg=PA242. 
 2. கள்ளர் சரித்திரம். சென்னை: Jegam & Co, Dodsin Press. 1923. பக். 60. https://archive.org/details/kallar-sarithiram/page/n67/mode/1up. 
 3. சைவ சித்தாந்த அகராதி. https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.pdf/95. 
 4. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி. http://www.tamilvu.org/node/127412. 
 5. 5.0 5.1 செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி. http://www.tamilvu.org/node/127412. 
 6. கள்ளர் சரித்திரம். சென்னை: Jegam & Co, Dodsin Press. 1923. பக். 60. https://archive.org/details/kallar-sarithiram/page/n67/mode/1up. 
 7. Journal Of Madras University Vol 81. 1990. பக். 84. https://archive.org/details/journalofmadrasuniversityvol81no1jan1990_202003_30/mode/1up?q=. 
 8. சைவ சித்தாந்த அகராதி. https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.pdf/95. 
 9. கள்ளர் சரித்திரம். சென்னை: Jegam & Co, Dodsin Press. 1923. பக். 60. https://archive.org/details/kallar-sarithiram/page/n67/mode/1up. 
 10. Journal Of Madras University Vol 81. 1990. பக். 84. https://archive.org/details/journalofmadrasuniversityvol81no1jan1990_202003_30/mode/1up?q=. 
 11. சைவ சித்தாந்த அகராதி. https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.pdf/95.