பேச்சு:களக்காடு தலையணை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

களக்காடு தலையணை என்கிற பகுதியில் அணை எதுவும் உள்ளதா? இக்கட்டுரைக்கு களக்காடு தலையணை என்ற பெயர் எப்படி வந்தது என்கிற குறிப்பிருந்தால் நல்லது. விசாரித்து எழுதலாமே...?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 10:17, 5 சூலை 2011 (UTC)[பதிலளி]

மணிமுத்தாறு அணைக்கு மேலே உள்ளது இந்த தலையணைப்பகுதி. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 16:00, 5 சூலை 2011 (UTC)[பதிலளி]
இங்கு தாங்கள் சொல்வதைப் பார்க்கும் போது இந்த ஆற்றுப் பகுதியில் அமைக்கப்பட்ட முதல் அணை இங்கு இருக்கும் அல்லது இருந்திருக்க வேண்டும். இதைத் தலைமை அணை என்று குறிப்பிட்டுப் பின்னால் அது தலையணை என்று மருவி பெயர் மாற்றமடைந்திருக்க வேண்டும். இது என்னுடைய கணிப்புதான்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:23, 5 சூலை 2011 (UTC)[பதிலளி]

தலைமை அணை என்ற பெயர் வைத்து மருவி இருக்கத் தேவை இல்லை. முதலிலேயே தலையணை என்று பெயர் வைத்திருக்கலாம். முதல் என்ற பொருள் வரும் இடங்களில் தலைமை என்ற சொல் அவ்வளவாகப் பயன்படுத்தப்படுவதில்லை. தலைத் தீபாவளி, தலைப்பிள்ளை....--இரவி 18:04, 5 சூலை 2011 (UTC)[பதிலளி]

  • உடலில் தலையை முதலாவதாகக் குறிப்பிடும் வழக்கத்தால் முதல் எனுமிடங்கள் சிலவற்றிற்கு தலை தொடக்கமாகி விட்டது. இங்கு தலையணை என்பது படுக்கையில் தலைக்கு வைத்துக் கொள்ளும் தலையணையைக் குறிப்பிட்டு விடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு முதன்மை அணை எனும் நிலையில் தலைமை அணை என்று குறிப்பிட்டேன். களக்காடு புலிகள் சரணாலயம் உள்ள பகுதி. தற்போது இந்தப் பகுதிக்குள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளதால் நாம் செல்ல இயலாது. இருப்பினும் தகவலை விசாரித்துக் கட்டுரையில் பெயர் விளக்கமளித்தால் நன்றாக இருக்கும். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 18:33, 5 சூலை 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:களக்காடு_தலையணை&oldid=1397991" இலிருந்து மீள்விக்கப்பட்டது