பேச்சு:கல்வெட்டில் மெய்யெழுத்துக்குப் புள்ளி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கழசர்கோடு கல்வெட்டுக்கு முன்னரே நெகனூர்பட்டிக் கல்வெட்டு இன்னும் சில கல்வெட்டுகளிலும் மெய்யெழுத்துக்குப் புள்ளி உள்ளது. இக்கட்டுரைப் பெயர் கல்வெட்டில் மெய்யெழுத்துக்குப் புள்ளி என்று இருப்பதை விட கடை நிலைத் தமிழி என வைக்கலாம்.ஐராவதம் மகாதேவன் புள்ளி உள்ள பிராமி எழுத்தை மூன்றாவது நிலையாகவும் நடனகாசிநாதன் நான்காவது நிலையாகவும் வைக்கின்ரனர். ஆனால் இருவருமே எழுத்து வளர்ச்சியில் தமிழி புள்ளி மெய்களைக் கொண்ட எழுத்துப் பொறிப்புகளை கடைசியாகவே வைக்கின்றனர்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:30, 24 மார்ச் 2014 (UTC)

  • நன்று
  • அவர்களை கருத்துக்களைக் காட்டும் பகுதிகளுக்கு இணைப்பு இருப்பின் தாருங்கள்
  • தக்க செய்திக் குறிப்புகளோடு பொருத்தமான தலைப்பு தந்து மாற்றிவிடுகிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 01:04, 25 மார்ச் 2014 (UTC)

நீங்கள் குறிப்பிட்ட நடமகாசிநாதன் கட்டுரையில் ஐந்தாம் வகையில் புள்ளி உள்ளது குறிப்பிடப்பட்டிருக்கிறது. கீழே பாருங்கள்.

//ஐந்தாம் வகை 1. மெய்யெழுத்துப் புள்ளி வைத்துக் தெளிவாகக் காட்டப்பட்டிருக்கும்.//

அதாவது பட்டிப்போருலு பிராகிருதக் கல்வெட்டையும் சேர்த்து ஐந்து நிலை. அதை நீக்கி விட்டு தமிழகம் மட்டும் வைத்துப் பார்த்தால் தமிழியின் நான்காவது நிலையில் புள்ளி வருகிறது. ஐராவதம் மகாதேவன் நிலை வளர்ச்சி முறைப்படி மொத்தமே தமிழிக்கு மூன்று நிலைகள் தான். அதனால் இர்ய்வருமெ கடசி நிலையில் புள்ளி வருவதை ஒருமித்துக் கூறுவதால் கடை நிலைத் தமிழி என்பது பொதுத் தலைப்பாக இருக்கும்.

ஐராவதம் மகாதேவன் எழுத்து வளர்ச்சி பற்றிய நூல் இணையத்தில் கிடைக்காது என்பதையும் நினைவுறுத்துகிறேன். அகரமேறிய மெய் முறைமை பாருங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:25, 25 மார்ச் 2014 (UTC)

தங்கள் கருத்துக்கள் அனைத்தும் செவ்விதின் எண்ணிப் பார்த்துத் தக்க இடத்தில் தக்கவாறு இணைக்கப்பட்டுள்ளன. தலைப்பு மாற்றம் பொருத்தமாய் இராது. நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 21:24, 26 மார்ச் 2014 (UTC)