பேச்சு:கல்பற்றா நாராயணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இவரது நூல்களில் கல்பட்டா நாராயணன் என குறிப்பிடப்பட்டுள்ளது 1. எனவே அவ்வாறே பெயரை மாற்றவும். நன்றி--ஸ்ரீ (✉) 17:01, 21 திசம்பர் 2019 (UTC)[பதில் அளி]

மலையாளத்தில் கல்பற்றா என்றே உச்சரிக்கப்படுகிறது என நினைக்கிறேன். கட்டுரையை எழுதியவர் மலையாளத்தை நன்கு அறிந்தவர் என நம்புகிறேன். கல்பற்றா கட்டுரையையும் பாருங்கள். உறுதிப்படுத்தி விட்டு வேண்டுமானால் மாற்றலாம். @தமிழ்க்குரிசில்:.--Kanags \உரையாடுக 22:05, 21 திசம்பர் 2019 (UTC)[பதில் அளி]
@பயனர்:Sridhar G, மலையாளச் சொற்களை ஆங்கிலத்தில்(லத்தீன் எழுத்துகளில்) எழுதும் முறை சற்றே வித்தியாசமானது. மலையாளிகள் 'காற்று' என்பதை kattu என்று குறிப்பிடுவார்கள். நாம் தவறுதலாக 'காட்டு' என்று நினைத்துவிடக் கூடாது. 'ற்ற', 'ட்ட' ஆகிய இரண்டையும் 'tta' என்றே குறிப்பிடுவார்கள். ஆற்றுக்கால் என்ற ஊர் aattukal என்றும், நெய்யாற்றிங்கரா (நெய் ஆற்றின் கரை) neyyatinkara என்றும் எழுதப்படுகின்றன. நாம் ஆட்டுக்கால், நெய்யாட்டிங்கரா என்று தவறாக பெயர்த்து எழுதக் கூடாது. தமிழ் ஊடகங்களில் தவறாக எழுதப்படுவதும் உண்டு. (எ.கா: Edavaleth Kakkat Janaki Ammal: எடவலேத் கக்கட் ஜானகி [தவறு] ; இடவலத்து கக்காட்டு ஜானகி [சரி] ). பற்றை என்ற தமிழ்ச் சொல்லுக்கு தொகுதி/கூட்டம் என்று பொருள் உள்ளதாக அகராதி குறிப்பிடுகிறது. கல்பற்றா கட்டுரையின் ஆங்கில பக்கத்திலும் 'கல் பற்றா' என்றால் சிறிய/பெரிய கல் கூட்டம்' என்றே குறிப்பிட்டிருக்கின்றனர். ஐ என்று தமிழில் முடியும் சொற்கள் மலையாளத்தில் ஆ என்று முடிவதால், பற்றை என்பது மலையாளத்தில் பற்றா என்றே அழைக்கப்படும். எனவே, உறுதியாக கல்பற்றா என்ற தலைப்பு சரியானதே. தவறான எழுத்துக்கூட்டல் எழுத்துலகில் பிரபலமாய் இருந்தால் வழிமாற்று ஏற்படுத்திக் கொள்ளலாம். நன்றி :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:36, 22 திசம்பர் 2019 (UTC)[பதில் அளி]
தமிழ்க்குரிசில் சொல்லியது போல கல்பற்றா என்பதே சரி. -CXPathi (பேச்சு)