பேச்சு:கல்பதுக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக்கட்டுரையிலிருந்து பிறமொழிக் கட்டுரைகளுக்கு இணைப்பினை ஏற்படுத்த WIKIDATA தளத்தில் முயன்றேன். (ஆங்கிலத்தில் Cist). ஏதோ பிரச்சினை; முடியவில்லை! யாராவது உதவுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:12, 30 ஆகத்து 2013 (UTC)

Yes check.svgY ஆயிற்று
பார்க்கவும்.:) --ஆதவன் (பேச்சு) 09:38, 30 ஆகத்து 2013 (UTC)

சொல் பற்றிய உரையாடல்[தொகு]

மயூரநாதன் ஐயாவுக்கு வணக்கம். கல்பதுக்கை கட்டுரையில் உள்ள உள்ளடக்கங்கள் எந்நூலில் இருந்து எடுத்தீர்கள் என்று கூறினால் நன்றாக இருக்கும். ஏனென்றால் சங்க இலக்கியத்தில் பதுக்கை பற்றி வரும் பாடல்கள் இதை வேறு மாதிரி குறிக்கின்றன. இது முக்கியமானது என்பதால் உங்கள் பதிலை விரைவில் எதிர்பார்க்கிறேன். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:05, 29 ஆகத்து 2013 (UTC)

கல்பதுக்கை கட்டுரையில் உள்ள உள்ளடக்கங்களின் மூலம் குறித்த தகவல்கள் தரப்படாமையைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. இது குறித்த உசாத்துணைகளையும், குறிப்புக்களையும் கட்டுரையில் சேர்த்துள்ளேன் பார்க்கவும். இக்கட்டுரையை நீங்கள் கவனத்துக்குக் கொண்டுவந்திருப்பதனால், மேலும் தகவல்களுடன் விரிவாக்கலாம் என எண்ணியுள்ளேன். "கல்பதுக்கை" என்றால் என்ன என்பது குறித்துப் பல்வேறுபட்ட வரைவிலக்கணங்களோ அல்லது இச்சொல் பல வகையான அடக்கச் சின்ன வகைகளை உட்படுத்துவதாகவோ இருக்கக்கூடும் எனவே இது குறித்து வேறுபட்ட தகவல்கள் உங்களிடம் இருக்குமானால் அவற்றையும் உரிய முறையில் கட்டுரையில் சேர்த்துக்கொள்ள முடியும். --- மயூரநாதன் (பேச்சு) 07:04, 30 ஆகத்து 2013 (UTC)

மிக்க நன்றி. கா. ராஜன் எழுதிய தொல்லியல் நோக்கில் சங்ககாலம் நூல் பெருங்கற்காலச் சின்னங்கள் எப்படி கற்பதுக்கையில் இருந்து எழுத்துடை நடுகல் வரை படிப்படியாக வளர்ச்சி அடைந்தன என்றும் அவற்றுக்கு இணையான ஆங்கிலச் சொற்களையும் தந்து விளக்கும். அது தவிர இன்னும் சில சங்ககாலச் சான்றுகளும் தேடிப்பார்த்ததில் கிடைத்தது. நான் அந்நூலை நூலகத்தில் இருந்து எடுத்து அனைத்து பெருங்கற்காலச் சின்னங்கள் கட்டுரையிலும் தகவல்களை சேர்க்கிறேன். பேச்சுப் பக்கம் வந்து நினைவுப்படுத்தியமைக்கு நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:33, 30 ஆகத்து 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கல்பதுக்கை&oldid=1487842" இருந்து மீள்விக்கப்பட்டது