பேச்சு:கலைமகள் (சீனத்துத் தமிழ் எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சீனத் தமிழ் என்பது சிங்கைத் தமிழ், இலங்கைத் தமிழ் என்பது போல் வருகிறது. சீனத்துத் தமிழ் எழுத்தாளர் என்றால் இன்னும் தெளிவாக இருக்குமோ? சீனத்து வானொலி தமிழ்ப்பிரிவில் பணியாற்றுவோர் அனைவரும் தமிழில் புனைபெயர்கள் சூடிக் கொள்வது வழமை என்று நினைக்கிறேன். எனவே, தமிழ் பற்றின் காரணமாக பெயர் மாற்றினார் என்று சொல்வது சரியாக இருக்காது. (அவருக்குத் தமிழ்ப் பற்று இருக்கலாம். ஆனால், புனைபெயர் சூடுவதற்கு அது காரணம் இல்லை)--இரவி (பேச்சு) 11:58, 7 பெப்ரவரி 2013 (UTC)

//சீனத்துத் தமிழ் எழுத்தாளர்// - தங்களுடைய கருத்தும் சரியாகத்தான் இருக்கிறது. மாற்றம் செய்யலாம்.

//தமிழ் பற்றின் காரணமாக பெயர் மாற்றினார் என்று சொல்வது சரியாக இருக்காது. (அவருக்குத் தமிழ்ப் பற்று இருக்கலாம். ஆனால், புனைபெயர் சூடுவதற்கு அது காரணம் இல்லை)//

சீன வானொலியில் தமிழ்ப் பிரிவில் பணியாற்றுபவர்கள் தமிழ்ப் பெயர் வைத்துக் கொள்வது வழக்கம் என்பது உண்மைதான். இருப்பினும் இவர் தினமணி கொண்டாட்டம் பகுதியில் “உங்களுடைய பெயர் சாவோ சியாங் என்றிருப்பதைக் “கலைமகள்” என்று ஏன் மாற்றிக் கொண்டீர்கள்? என்கிற கடைசிக் கேள்விக்கு

”உலக அளவில் மிக பண்டைய மொழி தமிழ்மொழி. என் வேலை காரணமாக மட்டுமல்ல. இந்த மொழி மூலம் இந்தியாவை மேலும் நன்றாகப் புரிந்து கொண்டேன். தமிழ் மொழி மூலம், சீன - இந்திய மக்களுக்குமிடையே தொலைவைக் குறைத்து, மேலும் நெருங்கிய உறவு உருவாக்க முயற்சி செய்து வருகின்றேன். ஓர் உண்மையான தமிழரைப் போல தமிழகத்தை மேலும் புரிந்து கொள்ள விரும்பியதால், எனக்கு தமிழ்ப் பெயர் கொடுத்தேன்.” என்று அவர் பதிலளித்திருக்கிறார்.

எனவே அவர் தமிழ்ப்பற்று காரணமாக பெயர் மாற்றினார் என்பதையே எடுத்துக் கொள்வோம்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 12:16, 7 பெப்ரவரி 2013 (UTC)

இவரது பெயர் கலையரசி என்றே நினைக்கிறேன். சீனத்துத் தமிழ் வானொலியில் பணியாற்றி, தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டவர் இவர்தானே? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:26, 7 பெப்ரவரி 2013 (UTC)
தமிழ்க்குரிசில், குழப்பம் விளைவிக்க வேண்டாம். நூலில் அவரது பெயர் திருமதி கலைமகள் என்றுதான் இடம் பெற்றிருக்கிறது. நூல் குறித்த செய்திகள், தினமணி நேர்காணலிலும் கலைமகள் என்றுதான் இருக்கிறது. (பார்க்க வெளி இணைப்புகள்) எனவே வேண்டாம் குழப்பம். --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 14:27, 7 பெப்ரவரி 2013 (UTC)
கலையரசி (சீன அறிவிப்பாளர்) இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளவர் இவர் தானா?-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:35, 7 பெப்ரவரி 2013 (UTC)
அவர் வேறு, இவர் வேறு.--Kanags \உரையாடுக 21:01, 7 பெப்ரவரி 2013 (UTC)

சுப்பிரமணி, கலைமகளின் பெயர்க்காரணம் குறித்த உங்கள் விளக்கத்தை ஏற்றுக்கொள்கிறேன். நன்றி--இரவி (பேச்சு) 05:09, 8 பெப்ரவரி 2013 (UTC)