பேச்சு:கலப்பினம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையில் சிறு குழப்பம் உள்ளது. இரு வேறு இனங்கள் தம்முள் பொதுவாக இனக்கருக்கட்டல் செய்யமாட்டாதன. ஆயினும் கழுதை, குதிரை போன்ற நெருங்கிய இனங்கள் (நிறமூர்த்த எண்ணிக்கையில் ஒத்திருத்தல் அல்லது குறித்த அளவு நிறமூர்த்த ஒழுங்கு ஒத்திருத்தல்) இனக்கருக்கட்டல் செய்கின்றன. ஆயினும் பெறப்படும் எச்சங்கள் மலட்டு எச்சங்களாகும். மலட்டு எச்சங்களை வீரியமான எச்சங்கள் என முழுமையான உயிரியல் நோக்கில் கூறிவிட முடியாது. அவற்றில் இனக்கலப்பு தூண்டல் குறைவாயிருப்பதால் கடின உழைப்பு முதலான தேவைகளுக்கு அதிக உடல்பலமுள்ள விலங்காக இருக்கலாம். ஆயினும் கலப்பினம் அல்லது கலப்புலப் பிறப்பாக்கம் (Cross Breeding) என்பது பின்னடைவான இயல்புகளை குறைத்து ஆட்சியான இயல்புகளை அதிகரிப்பதை அதிகம் இலக்குப் படுத்துகிறது. நெருங்கிய குடும்ப உறவுள்ள இருவருக்கிடையிலான திருமணம் வீரியமில்லாத குழந்தைகளுக்கு வழிவகுக்கும் என்பதும் Cross Breeding இல்லாத inbreeding க்கு வழிவகுக்கும் என்பதலாகும். அறிவியலில் இனம் (Genus) என்பது கூறும் வரையரைகளையும் மனங்கொள்ள வேண்டும். மனிதர் எல்லாருமே Homo sapient sapient எனும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களே ஆவர். --சஞ்சீவி சிவகுமார் 16:41, 11 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

சஞ்சீவி சிவகுமார், கலப்பினம் பற்றிய உங்களது கருத்து சரியானதே. அதற்கேற்றவாறு கட்டுரையைத் திருத்துங்களேன்.--பாஹிம் 17:30, 11 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

திருத்தியுள்ளேன்.--சஞ்சீவி சிவகுமார் 23:07, 12 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கலப்பினம்&oldid=950848" இலிருந்து மீள்விக்கப்பட்டது