பேச்சு:கருணைக்கிழங்கு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆனைத்தண்டு என்பது Elephant foot yam என்ற ஆங்கில சொல்லின் நேரடி மொழிப்பெயர்ப்பு. இதன் தமிழ்ப்பெயர் கருனைக்கிழங்கு ஆகும். எனவே இப்பக்கத்திற்கு கருனைக்கிழங்கு என்பதே சரியான தலைப்பாக இருக்கும். தவிர ஏற்கனவே உள்ள கரனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு போன்ற பக்கங்களை இப்பக்கத்திற்கு வழிமாற்றி விடலாம் என்பது என் கருத்து. Varunkumar19 (பேச்சு) 13:56, 28 பெப்ரவரி 2019 (UTC)

  • கரனைக்கிழங்கு என்ற தலைப்பை பிடிகருணை எனப்பெயரிட்டு wild yam என்ற (File:Edible root KARANAI.jpg) ஆங்கில விக்கியுடனும்

கருணைக்கிழங்கு என்ற தலைப்புள்ள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள படத்தை (File:Yam of Salem.jpg) எடுத்துவிட்டு (File:Elephant foot yam.jpg) என்ற இந்தப் படத்தைச் சேர்க்க வேண்டும். Amorphophallus paeoniifolius என்ற தாவரவியல் பெயரில் மட்டுமே இக்கட்டுரை ஆங்கிலத்தில் உள்ளதால் ஆனைத்தண்டு என்று பெயரிட வேண்டியதாகிவிட்டது. இக்கட்டுரைகளைச் சரிசெய்ய சம்மதிக்கிறேன். --Muthuppandy pandian (பேச்சு) 14:36, 28 பெப்ரவரி 2019 (UTC)

தங்களுக்கு நன்றி. Varunkumar19 (பேச்சு) 14:40, 28 பெப்ரவரி 2019 (UTC)
இலக்கிய ஆளுமைச் சொல்லுக்கு முதலிடம் தந்து வழிமாற்றம் செய்துள்ள பெருந்தகைக்கு நன்றி --Sengai Podhuvan (பேச்சு) 21:47, 4 சூன் 2019 (UTC)[பதிலளி]

கருணை என்னும் சொல் இரக்க உணர்வைக் குறிக்கும்
கருனைக் கிழங்கு நாக்கை அரிக்கும் நொணநொணப்புச் சுவை கொண்டது
இதனைக் கருணை எனல் சாலாது
கருனை எனலே பொருந்தும் --Sengai Podhuvan (பேச்சு) 21:41, 23 சூன் 2019 (UTC)[பதிலளி]

இலக்கியப் பயன்பாடு[தொகு]

நற்றிணை: கரு கண் கருனை செந்நெல் வெள் சோறு
பொருநராற்றுப்படை: பரல் வறை கருனை காடியின் மிதப்ப
புறநானூறு: பசு கண் கருனை சூட்டொடு மாந்தி
சீவகசிந்தாமணி: கலம் கழும் அரவமும் கருனை ஆக்குவார்
கந்தபுராணம்: பொருந்துகின்றன நிரல் அமை கருனை அம் புழுக்கல்
நாலடியார்: கருனைச் சோறு ஆர்வர் கயவர் கருனையைப்
திருவாசகம்: அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின் கருனையின் சூரியன் எழவெழ நயனக்
திருவிளையாடற்புராணம்: முரவை போகிய முரிவில் வான் முரல் பால் வறையல் கருனை தீம் பயறு அடு துவையல் பல் வகைக் கறிகள்

பெயர்ச்சொல் பயன்பாட்டில், எனக்கு மயக்கம் இருப்பதால், மேற்கூறிய பயன்பாட்டினையும் கருத்திற் கொண்டு விளக்குக.--உழவன் (உரை) 08:03, 26 சூன் 2019 (UTC)[பதிலளி]

சான்றுகளுக்கு நன்றி, தகவலுழவன். தலைப்பை மாற்றிவிடலாம். சுந்தர் \பேச்சு 06:18, 1 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கருணைக்கிழங்கு&oldid=3801194" இலிருந்து மீள்விக்கப்பட்டது