பேச்சு:கரந்தை ஜெயக்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜம்புலிங்கம், இந்த கட்டுரைக்கு கலைக்களஞ்சிய தகுதி இருப்பதாக தெரியவில்லை. இவர் குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்திருக்கிறாரா? விருதுகளை, பாராட்டுகளை பெற்றிருக்கிறாரா? இப்படி ஏதாவது இருந்தால் எழுதுங்கள். இவர் எழுதிய நூலின் அட்டை படத்தையும், இதழில் வெளியாகும் கட்டுரை பற்றிய குறிப்பையும் தருவது நல்லது. மேலும் சில குறிப்புகள் தேவைப்படுகின்றன. கண்டிப்பாக ஏதோ ஒரு விதத்தில் ஆதாரம் தேவைப்படுகிறது. இல்லாவிடில் கட்டுரை நீக்கப்படலாம். உங்கள் கருத்தை வேண்டுகிறேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:09, 30 சூலை 2014 (UTC)

தங்களின் அறிமுகம் கிடைத்ததறிந்து மகிழ்ச்சி. தற்போதுதான் கட்டுரைகளை எழுத ஆரம்பித்துள்ளேன். மேலும் தகவலைத் தொகுத்துவருகிறேன். சற்று பொறுத்தருள்க. கண்டிப்பாக ஆதாரம் தர முயற்சி செய்கிறேன். இல்லாவிடில் தாங்கள் கூறியபடி செய்யலாம். தங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி. --117.202.75.253 16:16, 30 சூலை 2014 (UTC)

நன்றி! விரைந்து ஆதாரத்தை சேர்த்து உதவுக. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:35, 30 சூலை 2014 (UTC)

உமாமகேசுவர மேனிலைப் பள்ளியும், தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரியும் தோற்றம் பெற்று ஆண்டுகள் 75 நிறைவடைந்தை ஒட்டி 22.7.2016 மற்றும் 24.7.2016 நாள்களில் நடைபெற்ற விழாவில் இவருக்கு இரர்தாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்ட விவரம் தற்போது சேர்க்கப்பட்டது.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:10, 27 சூலை 2016 (UTC)

இராமநாதம் நூல்[தொகு]

2016இல் இவர், திரு கரந்தை சரவணன் அவர்களுடன் இணைந்து வெளியிட்ட இராமநாதம் என்னும் நூல் பற்றிய பதிவு தற்போது இணைக்கப்படுகிறது. மேலதிக விவரங்கள் பெறப்படும்போது பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 12:40, 1 சூன் 2017 (UTC)