பேச்சு:கபிலன் பதிப்பகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையில் 2010 ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல் விருது என்று குறிப்பிடப்பட்டுள்ளது தவறு என நினைக்கிறேன். 2010 ஆம் ஆண்டிற்கான விருதுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லையே.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:02, 29 சனவரி 2012 (UTC)[பதிலளி]

தங்களின் அறிவுறுத்தலுக்கு நன்றி. 2009 ஆம் ஆண்டிற்கான விருது அது. தவறுதலாக 2010 என வந்துள்ளது. உடன் திருத்தி விட்டேன். நன்றி. அருணன் கபிலன்

கேள்வி[தொகு]

இதற்கு

"அருணன் கபிலன்" 13:44, 2 திசம்பர் 2016 (UTC)

இதற்கு மேல் எவ்வாறு உசாத்துணை தருவது? "அருணன் கபிலன்" 13:45, 2 திசம்பர் 2016 (UTC)

அருணன் கபிலன் உங்களின் கேள்விக்கு பதிலளிக்க முயற்சி செய்கிறேன்:
  1. வழங்கப்பட்ட விருதுகளுக்கு ஆதாரம் வேண்டும். அதற்கு பதிப்பகத்தின் இணையத்தள பக்கத்தை உசாத்துணையாக காட்ட இயலாது.
  2. காட்டப்பட்டுள்ள உசாத்துணைகள் விக்கி நடைமுறைப்படி காட்டப்படவில்லை. இதற்கு என்னால் உதவ இயலும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:34, 5 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

அன்பிற்குரிய ஐயா, கூடுதலான படங்களையும் அல்லது நூலின் முகப்பு அட்டையையும் இந்தப் பக்கத்தில் இணைக்க வேண்டாம் என்கிற நோக்கிலேயே இணையதளப்பக்கத்தின் தொடுப்பினை தந்துள்ளேன். அதுவும் கூட இலவச இணையதளமே. கூடுமானவரை நூல் வெளியீட்டுப் புகைப்படங்களை (அளவுடனே) விருது பெரும் புகைப்படங்களைச் சான்றாகத் தந்துள்ளேன். இயன்றால் சான்றிதழ்களையும் புகைப்படங்களாகத் தருவதற்கு முயற்சிக்கிறேன். விக்கியின் நெறிமுறைகளுக்கு முழுமையும் கட்டுப்பட்டவன் நான். ஆதலால் தங்களின் மேலான அறிவுரையையும் உதவியையும் வேண்டுகிறேன்... அருணன் கபிலன்.

எனது கருத்து...[தொகு]

நடுநிலைக் கண்ணோட்டத்துடன் நோக்கும்போது, விளம்பரம் போன்றுதான் தெரிகிறது. நல்லெண்ண அடிப்படையில் கட்டுரையில் உரிய மாற்றங்களை செய்ய முயற்சி செய்கிறேன்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:21, 5 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

இந்தக் கருத்துக்கும் பதில் சொல்லி விடுகிறேன். நான் விக்கியில் எழுதிய கட்டுரை இது ஒன்று மட்டும் இல்லை என்பதையும் தாங்கள் அறிந்து கொள்ள வேண்டும். நான் நிர்வகிக்கிற பதிப்பகம் என்று எந்த இடத்திலும் பதிவிட்டுக் கொள்ளவில்லை. வியாபார நோக்கம் அல்லது விளம்பர முயற்சி என்கிற காரணமும் பொருத்தமுடையதுதானா என்பதையும் ஒருமுறை சிந்தித்துப் பார்த்து விடுங்கள். நூலின் பெயர் நூலாசிரியர் பெயர் தவிர வேறு எந்தச் செய்திகளும் இல்லை. விருதுகளும் கூட நூலாசிரியர்களுக்கான சிறப்பே தவிரப் பதிப்பகத்துக்கன்று. இன்றைய ஆய்வுலகில் எந்த நூலை யார் எழுதியுள்ளார்கள்? அது எந்தப் பதிப்பகத்தினரால் வெளியிடப் பெற்றிருக்கிறது என்கிற தரவுகளின் அடிப்படையிலான சிறு கட்டுரை அளவிலேயே இது இயற்றப் பெற்றிருக்கிறது. தூய உள்ளத்தோடு விக்கிக்குப் பணியாற்றும் என்னை இந்தக் கேள்விகள் சற்று உள்ளாக்குகின்றன. எவ்வாறாயினும் விக்கியின் முடிந்த முடிவுகளுக்கு எந்நாளும் தலைவணங்குவேன் என்று உறுதி கூறிக் கொள்கிறேன்.

👍 விருப்பம்--Kanags \உரையாடுக 08:48, 5 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கபிலன்_பதிப்பகம்&oldid=2151994" இலிருந்து மீள்விக்கப்பட்டது