பேச்சு:கனேடியத் தமிழ் இலக்கியம்
ராஜா, கனடாவில் உள்ள தமிழர்கள் கனேடிய என்றும் பெரும்பாலும் குறிப்பிடுகிறார்கள். அதனால், அதை மாற்றத் தேவையில்லை. இது குறித்து ஏற்கனவே நற்கீரன் எங்கோ உரையாடி இருக்கிறார். அந்த இணைப்பைத் தேடித் தருகிறேன். இலங்கையை பொறுத்தவரை தமிழர்கள் வேறு முஸ்லீம்கள் வேறு (அவர்கள் தமிழைத் தாய் மொழியாக கொண்டிருந்தாலும்). அதனால், அரசியல் ரீதியாக, இலங்கை முஸ்லீம்களை தமிழர்கள் என்று கூறுவது தவறு. --ரவி 13:58, 28 அக்டோபர் 2006 (UTC)
கனேடியத் தமிழர் என்று சொல்லாடல்
[தொகு]கனேடியர் என்பது ஆங்கில வழக்கைப் பின்பற்றி மொழிவதாகும். இது அறிந்தே இங்கு தமிழர்கள் பலர் கனேடியத் தமிழர் என்ற சொல்லாடலை பரவலாக பயன்படுத்துகின்றார்கள். இது ஒருவித புகலிட மருவல் எனலாம். இந்த மருவலை ஏற்று நான் இங்கு பயன்படுத்துகின்றேன். தமிழ் சார்ந்த அல்லது தமிழர் சார்ந்த விடயங்களுக்கு கனேடிய என்பது பொருந்தும் என்பது இங்கு வழக்கத்தில் இருக்கும் சில சொல்லாடல்கனின் வழக்கமாகவும் எனது தனிப்பட்ட கருத்தாகவும் அமைகின்றது. --Natkeeran 20:16, 11 நவம்பர் 2006 (UTC)