பேச்சு:கத்தானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png கத்தானா எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

யப்பானிய மொழியில் கட்டம் என்பதில் வரும் டகரம் போன்ற ஒலி கிடையவே கிடையாது. மூல மொழியில் இல்லாதது ஆங்கிலத்தைப் பார்த்துப் புகுத்தப்படுவது ஏற்புடையதன்று. இது கத்தானா என்றிருக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 04:51, 30 ஏப்ரல் 2016 (UTC)

கத்தானா என்பதால் விடயம் தெரிந்த யாருக்கும் விளங்கப்போவதில்லை. ஆனால் கட்டானா என்பதால் இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும். பல சொற்கள் ஆங்கில தாக்கத்துக்கு உட்படுவது தவிர்க்க முடியாது. எனவே பெயர் மாற்றக் கோரிக்கை இங்கு ஏற்புடையதல்ல. --AntanO 05:03, 30 ஏப்ரல் 2016 (UTC)

டோக்கியோ என்றிருந்தது தோக்கியோ என்று மாற்றப்பட்டதும் நான் மேற்கூறிய அடிப்படையிலேயே.--பாஹிம் (பேச்சு) 05:07, 30 ஏப்ரல் 2016 (UTC)

அது ஒரு பிழையான மாற்றம். அதற்கான இங்கும் மாற்ற வேண்டும் என்றில்லை. கட்டானா என்பது இலக்கணத்தை மீறாத வரை, எளிதில் விளங்கிக் கொள்ளும் வரை மாற்றம் தேவையற்றது. வேண்டுமானால் வழிமாற்று, கட்டுரையில் குறிபிபடுதல் என்பவை தக்கனவாகவிருக்கும். --AntanO 05:13, 30 ஏப்ரல் 2016 (UTC)

அது பிழையென்று எப்படிக் கூறுகிறீர்கள்? சும்மா கூறுவது சரியன்று. தமிழில் மூல மொழியை ஒத்து ஒலிக்கலாமாயின் அதற்கே முதலிடம் வழங்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 05:16, 30 ஏப்ரல் 2016 (UTC)

நான் சும்மா கூறுவதாக நீங்கள் கருதுவது கூடாது. இத்தலைப்பு மாற்றம் பற்றிய பேசுவது நல்லது. அங்கு நான் மாற்றுக் கருத்து தெரிவித்திருந்தால், சரியா பிழையா என்பதைத் தெரிவித்திருப்பேன். ஜெர்மனி என்பது மூல மொழியை ஒத்துக் காணப்படவில்லை. ஆங்கிலத்தை ஒத்தே பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதற்காக அங்கு பெயர் மாற்றக் கேட்பது ஏற்புடையதல்ல. இதுபோன்று பல கட்டுரைகள் ஆங்கில ஒலிப்புக்கு ஏற்ப பெயர் வைக்கப்பட்டுள்ளது. மூல மொழி என்று தெரியாத ஒன்றை புகுத்தத் தேவையில்லை. --AntanO 06:11, 30 ஏப்ரல் 2016 (UTC)

டோக்கியோ என்பதில் சொல்லும் பிழை இலக்கணமும் பிழை. பின்னர் மூல மொழிக்குத் தாவி அம்மாற்றம் செய்யப்பட்டது. இங்கேயும் மூல மொழிக்குப் பிழைக்கிறது.--பாஹிம் (பேச்சு) 06:29, 30 ஏப்ரல் 2016 (UTC)

katana அல்லது 刀 என்பதை தமிழ் வழக்கில் எவ்வாறு உச்சரிக்கிறார்கள்? எனக்கு இது தொடர்பில் பல வருடங்களாக உள்ள அனுபவத்தில் கத்தானா என்பதைக் கேள்விப்படவில்லை. ஜெர்மனி என்பது மூல மொழி உச்சரிப் பற்றி எதுவும் கூறவில்லையே. --AntanO 06:47, 30 ஏப்ரல் 2016 (UTC)

நீங்கள் கேள்விப்பட வேண்டியதில்லை. சட்டம் என்பதில் வருவது போன்ற டகர ஒலி யப்பானிய மொழியில் கிடையவே கிடையாது. மேற்படி சொல் கத்தானா என்று மட்டுமே யப்பானில் உச்சரிக்கப்படுகிறது.--பாஹிம் (பேச்சு) 06:54, 30 ஏப்ரல் 2016 (UTC)

கட்டானா என்பதால் எப்பிழையும் நேரவில்லை என்பதால் பெயர் மாற்றம் அவசியமற்றது. --AntanO 06:56, 30 ஏப்ரல் 2016 (UTC)

பிழை நேர்கிறதே. அங்கு இல்லாததை இங்கு புதிதாகக் கூறிக் குழப்பமேற்படுத்தப்படுகிறது.--பாஹிம் (பேச்சு) 07:00, 30 ஏப்ரல் 2016 (UTC)

How to pronounce Japanese Sword in Japanese 刀 katana かたな pronunciation Japan.--Kanags \உரையாடுக 08:41, 30 ஏப்ரல் 2016 (UTC)
தமிழ் சூழலில் சண்டைக் கலை பயில்வோர் கட்டானா என்ற சொல்லையே பாவிக்கின்றனர். அதனால்தான் நான் தெளிவாக இருக்கிறேன். மேலும், உங்கள் வாதத்தின்படி, ஜெர்மனி என்பதை டொய்ச்லாண்ட் என்று மாற்றினால் இதனையும் மாற்றலாம். --AntanO 09:09, 30 ஏப்ரல் 2016 (UTC)

ஆங்கிலத்தைப் பின்பற்றுவதாயின், இதனைக் கெட்டான (kəˈtänə) என்று உச்சரிக்க வேண்டுமென்கின்றன merriam-websters அகராதியும் ஒக்ஸ்போர்டு அகராதிகளும்.--பாஹிம் (பேச்சு) 12:10, 9 மே 2016 (UTC)

ஆங்கில உச்சரிப்பு கெட்டான என்றில்லை. நிற்க, தற்போதுள்ள பெயர் தமிழ் சூழலில் இருப்பதால் அப்பெயரையே வைத்தேன். தமிழ் சூழலில் இது பற்றிய அனுபவம் உங்களுக்கு இருக்கிறதோ தெரியாது. மூல மொழியில் உள்ளது போன்று கத்தானா என்றிருக்க வேண்டும் என்றால் அவ்வாறே மாற்றிவிடுங்கள். நன்றி. --AntanO 18:41, 15 மே 2016 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கத்தானா&oldid=2064747" இருந்து மீள்விக்கப்பட்டது