பேச்சு:கண்ணீர்விடும் ஒட்டகத்தின் கதை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் கண்ணீர்விடும் ஒட்டகத்தின் கதை எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

உருக்கும் கதைதான். எங்கள் தாத்தா வீட்டு மாடு ஒன்று இதேபோல் செய்ததில் கன்று இறந்தே விட்டது. :-( பிற விலங்குகளின் உணர்வுகளை உணர மாந்தர்நோக்கு தடையாகும். வால்ட்டு டிசுனியின் The Jungle Book காட்டுயிர்களின் பண்பாட்டைப் பற்றிய அரிய அசைபடம். சிறுவயதில் தவறாமல் தொலைக்காட்சியில் பார்த்த தொடர், அண்மையில் இந்தியில் வெளியிட்டுள்ளார்கள். தமிழில் வெளியிட்டால் நன்றாக இருக்கும். -- சுந்தர் \பேச்சு 05:30, 11 மே 2008 (UTC)[பதிலளி]

அந்த மங்கோலியர் எவ்வளவோ முயன்றார்கள். ஒட்டகத்தின் கால்களைக் கட்டிப்போட்டு, கன்றைப் பால் குடிக்க வைக்க முயன்றார்கள். (உதைக்கும் மாடுகளை இவ்வாறு கால்களைக் கட்டிப்போட்டு பால் கறப்பதைப் பார்த்திருக்கிறேன். அது போலவே). கொம்பு போன்ற கலத்தில் ஒட்டகத்தின் பாலைக் கறந்து, குட்டிக்கு ஊட்ட முனைந்தார்கள் (குட்டி குடிக்க மறுக்கின்றது). அந்த ஒட்டகக் கன்றைக் காப்பாற்ற ஏதும் செய்ய முடியாததால், ஹூஸ் (Hoos) என்னும் ஒரு சடங்கு செய்ய நெடுந்தொலைவு இரட்டைத் திமில் ஒட்டகத்தின் மீதேறிச் சென்று அங்கிருந்து அந்த நரம்பிசைக் கருவி வாசிக்கும் ஒருவரை அழைத்து வருகின்றார்கள். அவர் அந்த நரம்பிசை கருவியை ஒரு நீல நிறத்துணியைக் கட்டி, ஒட்டகத்தின் முன் திமில் மீது கட்டித் தொங்க விடுகின்றார். பாலைநிலத்தில் வீசும் காற்றில் மெல்லிய நரம்பொலி எழுகின்றது. அந்த இசைக்கருவியும் உடல்மீது தொட்டுக்குக்கொண்டிருப்பதால் அதன் அதிர்வுகளையும் ஒட்டகம் உணர்கின்றது என்று நினைக்கின்றேன். சிறிது நேரம் இப்படி சென்றபின், அந்த இசைக்கருவியை எடுத்து வாசிக்கத் தொடங்குகிறார். மங்கோலிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி உள்ளத்தை உருக்கும் பண்ணில் உருக்கமாகப் பாடுகிறார். ஒட்டகத்தின் கழுத்தையும், தோளையும் மிக மென்மையாக வருடிக்கொண்டே தன் இனிய குரலில் பாடுகின்றார். இவ் இனிய பாட்டையும், நரம்பிசை வாசிப்பையும் கேட்டு, சற்று தொலைவில் உள்ள மற்ற ஒட்டகங்களும் உற்று நோக்கி ஈர்ப்புடன் கேட்பதையும் பார்க்கலாம். அந்த பாட்டு முடிந்தவுடன், ஒட்டகக் கன்றை அழைத்து வந்து பாலூட்ட விடுகின்றார்கள். இப்பொழுது ஒட்டகம் உவந்து பாலூட்டுகின்றது!! கொஞ்சம் பால் குடித்தபின் குட்டி விலகி நகர்ந்தாலும், தாய் ஒட்டகம் மீண்டும் தன் கன்றை மென்மையாக ஊக்குவித்து பாலூட்டும் காட்சி அழகானது. நரம்பிசைக் கலைஞர் அக்கருவியை வாசிக்க, அந்தப் பெண்மணி தன் இனிமையான குரலில் பாடப்பாட அந்த ஒட்டகத்தின் கண்ணில் இருந்து நீர் சொட்ட சொட்ட அதன் உள்ளம் மாறுவதைக் காணப் பெருவியப்பாகவும், மிக உருக்கமாகவும் உள்ளது. எத்தனை நுட்பமாக, எத்தனை மென்மையான வழிகளில், விலங்கிலும் எப்படி ஒரு உளமாற்றத்தை ஏற்பட வைக்க இயலுகின்றது என்பது எண்ணி எண்ணி வியக்க வேண்டிய ஒன்று. March of the Penguins என்னும் ஒப்பரிய ஆவணப் படம் போல், வேறு வகையில் இப்படம் உள்ளத்தை உருக்கியது. --செல்வா 14:59, 11 மே 2008 (UTC)[பதிலளி]
மாந்தரல்லாத விலங்குகளின் விந்தையான உலகை இவ்வாறு ஆவணப்படுத்துதல் மிக நன்று. ஆம், பென்குயின்களைப் பற்றிய படமும் அருமையாகவும் உருக்கமாகவும் இருந்தது. -- சுந்தர் \பேச்சு 15:40, 11 மே 2008 (UTC)[பதிலளி]

ஆங்கிலத்தில் எத்தனையோ விசயங்களை அறிந்து கொண்டாலும் சிவற்றைத் தமிழில் படிக்கும்போது தான் செய்து பார்க்கத் தூண்டுகிறது. இக்கட்டுரையைப் படித்த பிறகு படத்தைப் பார்த்து மகிழ்ந்தேன். அடுத்து March of the Penguins பார்க்க இருக்கிறேன். தொடர்ந்து இது போல், தமிழ்த் தொல்லூடகப் பரப்பில் காணக்கிடைக்காத விசயங்களை அறிமுகப்படுத்தித் தர வேண்டுகிறேன்.

எங்கள் வீட்டு மாடும் அவ்வப்போது அழுத நினைவுண்டு. ஆனால், எதற்கு அழுதது என்று மறந்துவிட்டது :) கன்று இறந்தால் மாடுகள் சோகமாக இறப்பது வெளிப்படையாகத் தெரியும். நாளும் உணவு தரும் எங்கள் அம்மாவோ அப்பாவோ வயலில் இருந்து வீடு திரும்பினால், அவர்கள் வெகு தொலைவில் வரும்போதே அதைக் கண்டு கொண்டு "ம்மா" என்று குரல் எழுப்புவது நெகிழ்ச்சியாக இருக்கும்.

கட்டுரையில் முடிவே இல்லாமல் நீண்ட வரிகளை திருத்தி சிறு சிறு வரிகளாக மாற்றி இருக்கிறேன். இது போல் நீண்ட வரிகளைப் படிப்பது பலருக்குப் பழக்கம் இல்லாததால் இயன்ற அளவு சிறு சிறு வரிகளாக எழுதுவது நன்றாக இருக்கும். நன்றி. --ரவி 19:41, 12 மே 2008 (UTC)[பதிலளி]

நீங்கள் பார்த்து மகிழ்ந்ததை அறிய மிக்க மகிழ்ச்சி. கட்டுரையில் திருத்தங்கள் செய்ததற்கு நன்றி, ரவி. ஆம், பல தொடர்கள் மிக நீளமாக இருந்தன. மார்ச் ஆ'வ் 'த பென்குவின் பாருங்கள். அதுவும் மிக அற்புதமான படம். தமிழில் படிக்கும் பொழுது ஒரு வகையில் ஆழமாகப் உணர்வோடு புரிந்து கொள்கிறோம். --செல்வா 21:54, 12 மே 2008 (UTC)[பதிலளி]