பேச்சு:கண்டுபிடிப்புச் சித்தாந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வரையறையில் பொருள் மாற்றம்[தொகு]

இச் சிந்தாந்தம் எந்த ஐரோப்பிய, குடியேற்றவாத, கிறித்தவ அரனைச் கொண்ட நாடுகள் அமெரிக்க நிலப்பரப்புக்களைக் "கண்டுபிடித்தனவோ", அவற்றுக்கே அந்த நிலங்கள் அல்லது நாடுகள் சொந்தம் என்று நிலைநாட்டுகிறது.

"இச் சிந்தாந்தம் ஐரோப்பிய கிறித்தவ அரசின் ஆட்சியின் கீழ் இல்லாத மக்கள் வாழும் அமெரிக்க நிலப்பரப்புக்களை முதலில் கண்டறிந்து குடியேறியவரின் நாட்டுக்கே அந்த நிலங்கள் அல்லது நாடுகள் சொந்தம் என்று நிலைநாட்டுகிறது."

முதல் இருந்த வரையறையில் என்ன குறைபாடு என்று தெரியவில்லை, ஆனால், புதிய வரையறையில் பொருள் தெளிவாக இல்லை. நிச்சியமாக "முதலில் கண்டறிந்து குடியேறியவரின் நாட்டுக்கே அந்த நிலங்கள் அல்லது நாடுகள் சொந்தம்" என்பது முதற்குடிமக்களுக்கு அல்லவா அந்த நாடுகள் சொந்தம் என்று கூறுவது போல் உள்ளது.--Natkeeran (பேச்சு) 13:50, 21 ஏப்ரல் 2014 (UTC)

நற்கீரன், "Title to lands lay with the government whose subjects explored and occupied a territory whose inhabitants were not subjects of a European Christian monarch. " - இதன் மொழிபெயர்ப்பாக தானே இச்செற்றொடர் அமைய வேண்டும்?
  1. ஒரு ஐரோப்பிய அரசின் ஆட்சியின் கீழ் இல்லாத மக்கள் வாழும் நாடுகளுக்கு மட்டுமே இச்சட்டம் பொருந்தும் என்பது முதல் சொற்றொடலில் குறிக்கப்படவில்லை.
  2. மாறாக கண்டுபிடிப்பவர் ஐரோப்பிய, குடியேற்றவாத, கிறித்தவ அரனின் ஆட்சியின் கீழ் வாழ்பவராக இருத்தல் வேண்டும் என்பதுபோல முதல் செற்றொடர் அமைந்துள்ளது.
நீங்கள் இரண்டாம் செற்றொடரில் குறித்துள்ள பிழை அல்லது தெளிவற்றத்தண்மை சரியே. ஆயினும் அத்தகைய தெளிவற்றத்தண்மை மூல சொற்றொடரிலேயே இருக்கின்றதே! மேலும் இச்சட்டத்தின்படி முதற்குடிமக்கள் ஒரு நாடாகவோ அல்லது அரசாகவோ கருதப்படுவதில்லை. அவர்களுக்கு குடியிருக்கும் உரிமை மட்டுமே கொண்டவராக கருதப்படனர்.

The tribes which occupied the land were, at the moment of discovery, no longer completely sovereign and had no property rights but rather merely held a right of occupancy. The tribes were not independent states but "domestic dependent nations"

--ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 05:17, 25 ஏப்ரல் 2014 (UTC)


இச் சிந்தாந்தம் ஐரோப்பிய கிறித்தவ அரசின் ஆட்சியின் கீழ் இல்லாத மக்கள் வாழும் அமெரிக்க நிலப்பரப்புக்களை எந்த ஐரோப்பிய, கிறித்தவ, குடியேற்றவாத நாட்டு மக்கள் முதலில் சொந்தம் கொண்டாடுகிறார்களோ, அவர்களின் அரசுக்கே அந்த நாடு செந்தம் என்று நிலைநாட்டுகிறது. --Natkeeran (பேச்சு) 16:44, 25 ஏப்ரல் 2014 (UTC)
👍 விருப்பம் --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 15:04, 27 ஏப்ரல் 2014 (UTC)