பேச்சு:கணினியில் தமிழ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கணினியில் தமிழ் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

அத்தியாயமும், reference உம் அவசியம் என்று கருதிகிறேன். -ஜெயா

ஜெயா, நீங்கள் கூறுவது சரியே. ஆனால் அத்தியாயங்களுக்கு தகுந்த பெயரிடப்படவேண்டும். வெறுமனே அத்தியாயம் 1, 2 எனக்குறிப்பிட முடியாது. அத்தியாயங்களைத் தொடங்க முன்னர் கணணியில் தமிழ் என்றால் என்ன என்பதுபற்றி பொதுவான ஓரிரு பந்தி ஆரம்பத்தில் எழுதப்பட வேண்டும். பின்னர் sub titles ஆக அத்தியாயப் பெயர்களுடன் ஆரம்பிக்கலாம்.--Kanags 22:42, 5 ஜனவரி 2007 (UTC)

ஜெயபால், விக்கிபீடியாவுக்குப் பங்களிக்கும் உங்கள் ஆர்வத்துக்கு வாழ்த்துக்கள். ஆனால் விக்கிபீடியா எப்படி இயங்குகின்றதென்பதைச் சற்று விளங்கிக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிபீடியா நடையிலில்லை. ஆதலால் அதற்கு cleanup இட்டேன். கட்டுரையில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் cleanup ஐ மாத்திரம் நீக்குவது சரியான செயலல்ல. கோபி 06:11, 6 ஜனவரி 2007 (UTC)

கோபி, கனக்சு, உங்கள் பரிந்துரைகளுக்கு நன்றி. இப்பொழுது நான், அத்தியாயப் பிரிப்பை நீக்கி விடுகிறேன். தொடர்வதை பின்னாலேயே தொடர்ந்து append செய்கிறேன். இதற்கு மேலும் ஏதாவது என்றால் சொல்லுங்கள். அன்புடன், ஜெயா

நல்ல கட்டுரை[தொகு]

தமிழ்க்கணிமை வரலாற்றை விபரமாக தருகின்றது. --Natkeeran 03:41, 9 ஜனவரி 2007 (UTC)

நற்கீரன், எனது ப்லொக் இல் இதனை எழுதிக்கொண்டிருக்கும் பொழுது நீங்கள் இங்கே எழுதுமாறு கேட்டிருந்தீர்கள். நேரம் இன்மையாலும் தரமாக எழுத வேண்டுமே என்ற எண்னத்தாலும் உடனே தொடங்கவில்லை. இப்பொழுது தொடங்கியுள்ளேன். அதுவும் தொடக்கத்தில் விக்கிப்பீடியாவின் நடைமுறை நியதிகளுக்கமைய எழுதுவது சிரமமாக இருக்கிறது. ஆனாலும் கோபி, கனக்சு போன்றவர்களின் உதவி கிடைக்கிறது. நன்றி. அன்புடன், ஜெயா

நன்றி ஜெயா. உங்களைப் பற்றி ஒரு சில குறிப்புகளை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால் ஆரோக்கியமான பயனர் சூழலைப் பேணுவதற்கு உதவியாக இருக்கும். வலைப்பதிவில் இருக்கும் சிறு குறிப்பைப் போன்று. ஒரு சில கட்டுரைகள் எழுதிய பின் விக்கி நடையின் தன்மை நன்கு பழகிவிடும். பின்னர் இப்படியான "அறிவியல்" கட்டுரைகளை இங்கும் தந்து உங்கள் வலைப்பூவிலும் தரலாம்தானே. இங்கு தொலை நோக்கில் கூடிய பயன் தரும் என்று நினைக்கின்றேன். --Natkeeran 15:46, 9 ஜனவரி 2007 (UTC)
இக்கட்டுரையில் உள்ள சிவப்பு இணைப்புக்களில் கட்டுரையை உருவாக்கிவிட்டு மேலும் பேச்சுப் பக்கத்தில் உள்ள எல்லாவற்றையும் சரிசெய்து விட்டு சிறப்புக் கட்டுரையாக்கும் வண்ணம் பரிந்துரைக்கின்றேன். சிறந்ததோர் கட்டுரை. --Umapathy 15:44, 12 ஜனவரி 2007 (UTC)

நன்றி உமாபதி, உங்கள் பரிந்துரைகளை கவனித்துத் திருத்துகிறேன். அன்புடன், --Jeyapal 15:02, 16 ஜனவரி 2007 (UTC) "செம்மொழியாம் தமிழ்மொழி" பாடலின் ஒளிவாடாவில் இந்தப் பக்கத்தைக் காண்பித்திருக்கிறார்கள். --செயபால் 14:17, 10 ஜூன் 2010 (UTC)

மேலும் சில தகவல்கள்[தொகு]

  • Gift Siromoney ("Devising the first teleprinter keyboard in Tamil", Pioneering work in statistical analysis of Tamil alphabet frequencies.) [1]
  • Naa Govindasamy (Brought Tamil to be "the first Indian language to go on Internet on 27th October, 1994"; Instrumental Summary Paper - Towards a Total Solution for the Tamil Language through Singapore Research) [2]
  • Kuppusamy Kalyanasundaram (Architect of TADILNET; project coordinator of Project Madurai; Tamil Electronic Library; Developed Mayli font; TSCII)

எழுத்துரு, மின்னஞ்சல்[தொகு]

தற்போது, இரண்டு தொழில்நுட்பங்களைப் தமிழில் கொண்டுவந்த வரலாற்றை விளக்கியுள்ளீர்கள். அவற்றுக்கு ஏற்றவாறு நான் தலைப்பிடுகின்றேன், பிடிக்கவிட்டால் மாற்றி விடுங்கள். --Natkeeran 23:06, 9 ஜனவரி 2007 (UTC)

வரலாறு[தொகு]

பல செய்திகள் விடுபட்டுள்ளன. பின்னர் திருத்துகிறேன். கனடாவில் வாழும் முனைவர் சீனிவாசன் அவர்கள் ஆதமியை உருவாக்கும் சற்று முன்னர் பேராசிரியர் ஜியார்ஜ் ஹார்ட் அவர்கள் ஆப்பிள் கணினியில் தமிழ் எழுத்துருக்கள் ஆக்கினார். முதன் முதலாக முனைவர் பால சுவாமிநாதன் அவர்களும் அவர்தம் உடன்பிறந்தார் முனைவர் ஞானசேகர் அவர்களும் யூனிக்ஸில் தமிழுருக்கள் ஆக்கினர் xlib utilities etc. Definitely pioneering accomplishments. கனடாவில் வாழும் முனைவர் விஜயகுமார் அவர்களுடைய எழுத்துருக்கள் மிகச்சிறப்பானவையும் காலத்தால் முன்னதும் ஆகும். வரலாற்று நோக்கில் குறிப்பிடத்தக்க வேறு பல வளர்ச்சிகளும் விடுபட்டுள்ளன. பின்னர் மறு பார்வை இடுகின்றேன்--செல்வா 03:38, 10 ஜனவரி 2007 (UTC)

நற்கீரன், உங்கள் திருத்தங்களுக்கு நன்றி. அப்படியே இருக்கட்டும். செல்வா, Mac இல் தமிழ் நான் பார்த்தது 1990 ல் தான். விரிவான பாவனையும் வரலாறும் அறிய முடியவில்லை. நீங்கள் தெரிந்தவற்றை ஆதாரங்களுன் (வெளி இணைப்புகளாக) சேருங்கள். விடுபட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எழுத்துரு ஆக்கங்களையும் இடுங்கள். ஆனால் பிந்திய எழுத்துரு ஆக்கியவர்களின் விபரம் தேவையற்றது என்பது என் கருத்து.

நான் குறிப்பிட்டிருப்பவை அத்தனையும் யாரும் செய்யும் முன் செய்த முன்னுரிமைச் சிறப்பு உடையன. தமிழ்க் கணினியியல் முன் வரலாற்றை ஓரளவிற்கு நன்கு அறிந்தவன் என தெரிவித்துக்கொள்ளுகிறேன். வரலாறு நிகழ நிகழ பங்கு கொண்டவனும் ஆகும்.

முனைவர் விஜயகுமார் அவர்களின் எழுத்துருக்கள் தமிழ் எழுத்துருக்களில் மிக முந்தியதும் பிகப்பரவலாகப் பயன்பட்டதும் ஆகும். மயிலை, பாமினி முதலியவற்றுக்கு முந்தையது. அழகு நேர்த்தி மிக்கதும் ஆகும். கல்வி குப்புசாமி அவர்களின் எழுத்துருக்களும் மிக நேர்த்தியானவை. முனைவர் பாலா சுவாமினாதன், முனைவர் ஞானசேகர் அவர்களின் ஆக்கங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆக்கங்கள் (ஆனால் யூனிக்ஸ் அடிப்படையில் இருந்ததால், தனியார் கணினிகளில் பரவலாக பயிலப்படவில்லை - எனினும், MIT சேர்ப்பில் பதிவு செய்யப்பட்ட தொழில்நுட்பச் சிறப்பு உடையன.).--செல்வா 15:58, 10 ஜனவரி 2007 (UTC)

வேண்டுகோள்[தொகு]

தமிழகத்தில் முனைவர் என்பது, ஈழத்தில் கலாநிதி என்று அழைக்கப்படும். தமிழகத்தில் விழுக்காடு என்பது ஈழத்தில் வீதம் என்றழைக்கப் படும். ஆகவே இது போன்ற சொற்களைத் தயவு செய்து யாரும் திருத்தாதீர்கள், அவை பிழையல்ல :-). அன்புடன், ஜெயா 2007-01-09

தமிழ்நாடு-இலங்கை சொல்லாட்சி வேறுபாடுகளை ஓரளவிற்கு அறிவேன், எனினும், த.வியில், பொதுத்தரம் இருப்பது நல்லது. தவிர்க இயலாத இடங்களில் இரண்டு சொல்லாட்சிகளையும் குறிக்கலாம். இது ஏற்கனவே இங்குள்ள வழக்கம் தான். நான் த.விக்குப் புதியவன் இல்லை. மேலும் எது அதிக நன்மை பயக்கும் என்னும் நோக்கமும் இருத்தல் வேண்டும். --செல்வா 15:54, 10 ஜனவரி 2007 (UTC)
செல்வா, விளக்கங்களுக்கு நன்றி. அன்புடன், ஜெயா

தமிழ்க்கணிமை வரலாறு என்று பெயர் மாற்றலாமா...[தொகு]

--Natkeeran 02:33, 11 ஜனவரி 2007 (UTC)
ஜெயபாலின் பதில்: கணினியில் தமிழ் என்பது, தமிழ் எழுத்து கணினியில் ஏறியது முதல் ஒரு நியமம் உருவாகியது வரையான வரலாறு மட்டுமே. தமிழ்க் கணிமை என்பது, கணினியில் தமிழ் அடங்கலாக, தனித் தமிழ் இயங்கு முறை, தனித்தமிழ் விசைப்பலகையுடன் கணினி இயக்கம் ஆகியவற்றை உள்ளடக்க வேண்டும் என்பது என் அபிப்பிராயம்.

அதனால், இந்தக் கட்டுரையை அப்படியே வைத்துக் கொண்டு, தமிழ்க் கணிமை பற்றி இன்னொரு கட்டுரையைத் தொடங்குவது நல்லது. அது, தமிழ்த் தட்டச்சுக் கருவி, தமிழ் லினக்ஸ், தமிழ் உலாவிகள், தமிழ் மின்னஞ்சல் மென்பொருட்கள் மற்றும் இதர தமிழ் பிரயோகங்கள் (like MS Office products) போன்றவற்றை உள்ளடக்கலாம்.

அடுத்தது, கணிமை என்றால் என்ன? கணினியியல் என்பது நன்றாக இருக்குமே.

--Jeyapal 15:06, 11 ஜனவரி 2007 (UTC)

அப்படியானல் சரி. தமிழ்க்கணிமை = Tamil Computing...

தமிழ்க்கணிமை வரலாற்றை தொழிநுட்ப ரீதியா விபரிப்பதே பொருத்தம். எனது கணிப்பில் பின்வருமாறு விபரிக்கலாம்.

1. எழுத்துரு - Font Encoding, Processing, and Rendering - Input and Display
2. இணையத்தில் தமிழ் (மின்னஞ்சல், இணையத்தளம், தேடல், வலைப்பதிவு நுட்பங்கள்)
3. தமிழ் இடைமுகமும் உடாடலும் - Tamil Computer Interface and Interaction
4. இயற்கை மொழி முறைவழியாக்கம் - Natural Language Processing (Character Recognition, Speach Recognition, Context based Search, Tamil Spell Check, Tamil Grammer Check, AI)

--Natkeeran 19:25, 11 ஜனவரி 2007 (UTC)


நன்றி நற்கீரன். தமிழ்க்கணிமை வரலாற்றைத் தொழிநுட்ப ரீதியாக விபரிப்பது மிகவும் சுவரசியமான உபயோகமான் கட்டுரையாக அமையும். நீங்கள் சொல்லும் அலசல்கள் மிக மிகப் பிரயோசனமாகவும் விளங்கும். இந்தத் துறைகளில் அனுபவசாலிகளாக இருப்பவர்கள் கட்டாயம் எழுத வேண்டும்.

கணிமை = Computing கணினியியல் = Computer Science  ?? --Jeyapal 20:22, 11 ஜனவரி 2007 (UTC)

கணிமை - Computing; கணினி அறிவியல் - Computer Science; கணினியியல் - Hardware + Software, கணினி துறை நோக்கி ஒரு பொத்துச்சொல், நேரடி ஆங்கிலச்சொல் இல்லையெனலாம்.--Natkeeran 15:35, 12 ஜனவரி 2007 (UTC)

நல்ல கட்டுரை. இங்கே, செல்வா, நற்கீரன், மற்றும் பயனர்கள் கொடுத்துள்ள ஆலோசனைகளையும் உட்படுத்தி மேலும் வளப்படுத்தலாம். ஆங்கிலச் சொற்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை நீக்கிவிட்டு இணைப்புக்களை ஒத்த தமிழ்ச் சொற்களுக்குக் கொடுக்கவேண்டும். Mayooranathan 18:38, 16 ஜனவரி 2007 (UTC)


நன்றி மயூரநாதன், பரிந்துரைகளின் படி திருத்தங்கள் செய்யப் பட்டுள்ளன. --Jeyapal 19:21, 16 ஜனவரி 2007 (UTC)

ஆதாரம் தேவை[தொகு]

ஜெயபால், செல்வா, இந்தக் கட்டுரை நல்ல முறையில் வளர்ந்து வருவது கண்டு மிக்க மகிழ்ச்சி. இக்கட்டுரையின் சில தகவல்களுக்கு ஆதாரங்கள் (references) அடிக்குறிப்புகளாக இணைக்கப்படவேண்டும். உ+ம்:

  • முதலில் தோன்றிய மென்பொருள் ஓர் ஆவணங்கள் எழுதும் ஆதமி (Adami)
  • ஆதமி(1984) உருவாகும் முன்னர் பேராசிரியர் ஜியார்ஜ் ஹார்ட் அவர்கள் ஆப்பிள் கணினியில் தமிழ் எழுத்துருக்களை அறிமுகப் படுத்தியிருந்தார்.
  • UNIX இயங்கு தளத்திலும் முதன் முதலாக முனைவர் பால சுவாமிநாதன் அவர்களும் அவர்தம் உடன்பிறந்தார் முனைவர் ஞானசேகர் அவர்களும் யூனிக்ஸில் தமிழுருக்கள் ஆக்கினர்.
  • இவ் வெழுத்துருக்களில் கனடாவில் வாழும் முனைவர் விஜயகுமார் அவர்கள் ஆக்கிய நூற்றுக்கணக்கான எழுத்துருக்கள் குறிப்பிடத்தக்கன.

இவை போன்ற தகவல்களுக்கு ஆதாரங்கள் தந்தால் (ஆய்வுக்கட்டுரைகள், நூல், அல்லது இணையத்தளம்) மிகச்சிறந்த விக்கி கட்டுரை என்ற தகுதியைப் பெறும். நன்றி.--Kanags 02:15, 17 ஜனவரி 2007 (UTC)


மேற் குறிப்பிடப் பட்டவைகளுக்கான ஆதாரம் http://tamilelibrary.org/teli/sintalk1.html இந்தச் கட்டுரையில் உண்டு. இது வெளி இணைப்பாகவும் (மூன்றவது) தரப்பட்டுள்ளது. வெளியிணைப்பு என்ற தலைப்பை வெளியிணைப்பு / ஆதாரங்கள் என்று மாற்றலாமா? --Jeyapal 15:22, 17 ஜனவரி 2007 (UTC)

கனகு, உங்கள் கருத்துக்களை நான் வரவேற்கிறேன். மேலே நான் குறிப்பிட்டிருந்த அத்தனையும் நானே நேரில் கண்டவை. அவை நிகழ நிகழ உடன் பங்கு கொண்டவன். MIT lib utilities க்கு குறிப்புகள் சேகரித்துத் தருகிறேன். இவை அனைத்திற்கும் எழுத்து வடிவிலும் உறுதிச்சான்றுகள் சேர்ப்பது நல்லது. சேகரித்து உதவுகிறேன். 1983-84 வாக்கில் நானே Printer job control மொழியைக் கொண்டு CPMல் தமிழிலும் எழுதியுள்ளேன் (இது DOS வரும் முன்னர்). மைலாப்பூரில் திரு தியாகராஜன் என்பார் நிறுவிய துவக்கநிலை கணினி பயிற்சிப் பள்ளியில் நான் செய்தது. இதனை எல்லாம் குறிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. தஸ்கிக் உறுப்பினர் குழுவிலும் நான் ஒருவனாக இருந்திருக்கிறேன். தமிழ் எழுத்துக்களுக்காக நான் முன்மொழிந்த characterset இங்கே உள்ளது . அதில் பல புதுமைகளும் உள்ளன (மின் உரையாடல்களை இங்கே காணலாம்). --செல்வா 03:50, 24 ஜனவரி 2007 (UTC)

1993ல் கனடாவில் உள்ள வாட்டர்லூவில் நிகழ்ந்த soc.culture.tamil மடற்குழுவின் முதலாண்டு நிறைவு விழாவுக்கு வருகை தந்திருந்த திரு பாலா சுவாமிநாதன் (முனைவர் பட்டம் அவர் அப்பொழுது இன்னும் பெற வில்லை), கீழ்க்காணுமாறு குறிக்கிறார்:இங்கே "...discussed about various Tamil Softwares available (\bt vaLarnthuvarum thamizp padimangaL\et). I started with Dr. George Hart's Mac fonts, Dr. Kuppusamy's Tamil Teaching software, ADAMI, Palladam, Madurai, Wntml, m2t, xtmlfonts etc. The word "padimam" was used for software and "vanpathivu" for hardcopy. "--செல்வா 04:06, 24 ஜனவரி 2007 (UTC)

கணினியில் தமிழ் பற்றி கல்யாணசுந்தரம் தமிழ் டாட் நெட்டில் எழுதிய குறிப்புகள் அக்டோபர் 7, 1997.

சொல் தேர்வு[தொகு]

நியமம் என்பது சீர்தரம் என்று மாற்றப் பட்டிருப்பது அவசியமா? --Jeyapal 19:40, 9 பெப்ரவரி 2007 (UTC)

ஆம், தேவை என்பதாலேயே மாற்றினேன். நியமம் என்பது தமிழ்ச்சொல் இல்லை. கூடியமட்டிலும், நல்ல தமிழ்ச்சொற்களை ஆளுவது நல்லது. ஒரு தமிழ்ச்சொல் மற்றொரு தமிழ்ச்சொல்லுக்கு வலு சேர்க்கும். தமிழ்ச்சொல்லை ஆள வேண்டிய இடத்தில் வேற்றுமொழிச் சொல்லை ஆண்டால், தமிழ்ச்சொல்லுக்கான நேர்மையான வாய்ப்பு பறிக்கப்படுகின்றது. நாமே தமிழ்ச் சொல்லை ஆளவில்லை என்றால் யார்தான் தமிழ்ச்சொற்களை ஆளுவர்?--செல்வா 21:02, 9 பெப்ரவரி 2007 (UTC)

செல்வா, எப்படி நியமம் தமிழ்ச்சொல் இல்லை எனலாம். நியமம் சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, திவாகரம், பிங்களம், தேவாரம், மதுரைக்கல்ம்பகம் என்று 2000 ஆயிரம் வருடங்களாக தமிழிலக்கியத்தில் வருகிரது. இது நியாயமில்லை. நியமம், நியமங்கள் என்று தேடினால் கூகிளில் 800 பக்கங்களுக்கு மேல் கிடைக்கிரது.--விஜயராகவன் 00:50, 16 பெப்ரவரி 2007 (UTC)
தரம் என்னும் சொல்லை கூகிளில் தேடினால் 39,400 பக்கங்கள் தருகின்றது. கூகிள் தேடல்கள் முடிவெடுக்கப் பயன்படாது. ஒரு சொல் தமிழ்ச்சொல்லா இல்லையா என்று அறிய, சொல்லின் வேர் என்ன, இனமான சொற்கள் எவை எப்படி பல்கிக் கிளைத்தன என அறிய வேண்டும். இதன் அடிப்படையில் தமிழ்ச்சொற்கள் யாவை என அறியலாம். பல்வேறு காலகட்டங்களிலே பல்வேறு கரணியங்களுக்காக பல சொற்கள் (தமிழ்ச்சொல்லும் பிறமொழிச் சொல்லும்) வழக்கூன்றக் கூடும், வழக்கொழியவும் கூடும். நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தினால் அதனால் விளையும் நன்மைகள் மிகப்பல. ஒரு சொல் பிரிதொரு சொல்லுக்கு வலு சேர்க்கின்றது. இதனை ஒருவகையான மொழியின் உட் கூட்டுயிர்ப்பு எனலாம். கூடியமட்டிலும் நல்ல தமிழ்ச் சொற்களை ஆளுவது பயன் பெருக்குவது. சம்ஸ்கிருத சொற்களை ஆள சமஸ்கிருத விக்கி உள்ளது. தமிழ்ச் சொற்களை விலக்கி பிறமொழிச் சொற்களை ஆண்டால் தமிழ் மொழியின் உள் இணைப்புகள் அறுகின்றன, வளமும் செழிப்பும் குன்றுகின்றது, சமஸ்கிருதத்தை விரும்புபவன் நான். ஆனால் சமஸ்கிருத வன் திணிப்பை எதிர்ப்பவன், ஏனெனில் அதனால் ஒரு மொழியின் வளர்ச்சி தடைபடுகின்றது. எடுத்துக்காட்டாக நமஸ்காரம் என்னும் சொல்லை ஆளுவதை விட வணக்கம் என்று சொல்வது நல்லது (தமிழில்). பொதுவாக ஒரு மொழியில் இருந்து வேறு ஒரு மொழிக்குச் செல்லும் சொற்கள் வினைச்சொல்லாக மாறாது, ஆனால் தமிழின் வளமையால் எச்சொல்லையும் எப்படியும் ஆக்க முடியும். எனவே எனவே நமஸ்காரம் என்பது நமஸ்கரி, நமஸ்கரித்தான் என்று கூட சொல்ல இயலுகின்றது. என்றாலும் வணக்கம் என்னும் சொல், வணங்கு, வணங்கினான், வணக்கம், வணங்காமுடி, வணங்காத்தலை, வணங்கி ஒரு வேலையைச் செய்யமாட்டான், வணக்கம் இல்லாதவன், வணக்கு, வணக்குதல் ( = வளைத்தல்), யானைவணக்கி (யானைப் பாகன், தோட்டி, யானையை வழிக்குக் கொண்டுவருபவன்) என பலவகையாக வளர்ச்சியுறும். தமிழ்ச் சொல்லாய் இருப்பின் பிறசொற்களோடு இயல்பாய் சேர்ந்து பொருள் பெருக்கும் கிளைக்கும். மொழியின் இயல்பான செழிப்பான வளர்ச்சி கருதியே நல்ல தமிழ்ச் சொற்களைப் பரிந்துரைக்கிறேன். இதுபற்றி மிக விரிவாக எழுத உள்ளது ஆனால் இதுவல்ல இடம்.--செல்வா 01:58, 16 பெப்ரவரி 2007 (UTC)


செல்வா, இத்தனை நாள் நியமம் தமிழ்ச் சொல் என்று யோசித்துப் பார்த்ததில்லை. இப்போது யோசிக்கையில் நீங்கள் சொல்வது சரி என்று புரிகிறது. இது போல் எண்ணற்ற சொற்கள் தமிழ் என்றே நினைக்கப்பட்டும் யோசித்துப் பார்த்தாலும் தமிழா என்று அறிய முடியாமல் குழப்பி விடுகின்றன. சில சமயம், தமிழ்ச் சொற்களையும் பிற மொழி என்று ஒதுக்கும் பிழையும் நிகழ்ந்து விடுகிறது. இது போன்ற சொற்களுக்கு அடிச்சொல் அறிந்து பொருள் விளக்குவது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இது போன்ற பணிகளையாவது நீங்கள் விக்சனரியில் செய்து தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.--Ravidreams 21:40, 9 பெப்ரவரி 2007 (UTC)

-- திரு. செல்வா, நல்ல தமிழ்ச் சொற்களை நாம் பாவிக்க வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. standard என்பதற்கு ஒரு சாரர் தரம் என்ற பதத்தைப் பாவிக்கிறார்கள். இன்னொரு சாரர் சீர்தரம் என்கிறார்கள். இவை இரண்டுமே அனைவராலும் (ஏதாவது அரசுகளால்) அங்கீகரிக்கப்பட்ட சொற்களா? எனக்குத் தெரியாது. ஆனால் "நியமம்" என்ற சொல் இலங்கையின் அரச பாடவிதானக் குழுவினால் வெளியிடப்பட்ட கலைச்சொல்லகராதியில் தரப்பட்டிருக்கிறது. 1970 களிலிருந்து கல்வி கற்ற அனைவரும் பாவித்த ஒரு சொல் தான் இது. உதரணங்கள்:

நியம வெப்பநிலை - standard temperature நியம அலகு - standard unit

இப்படிப் பல உதாரணங்கள் உண்டு.

ஆக, நியமம் என்ற சொல் இலங்கையில் படித்தவர்களுக்குப் புதிய சொல் அல்ல. இவற்றைத் திருத்தவதிலும் பார்க்க கட்டுரையில் இருக்கும் கருத்துப் பிழைகளைக் களைவது நல்லது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். --Jeyapal 18:23, 12 பெப்ரவரி 2007 (UTC)

ஜெயபால், நியமம் என்ற சொல் தமிழ்நாட்டிலுக் கூடப் புரிந்து கொள்ளத் தக்கது தான். இருப்பினும், தகுந்த இடங்களில் சரியான தமிழ் சொல் இருப்பின் பயன்படுத்துவதென்பதை தமிழ் விக்கிபீடியா வழக்கமாக கொண்டிருக்கிறோம். பார்க்க - Wikipedia பேச்சு:சொல் தேர்வு. அந்த வகையிலேயே இந்த மாற்றங்கள். மேற்கண்ட பக்கத்தில் நீங்களும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்தால், தமிழ் விக்கிபீடியா கொள்கைகள் பரிணமிக்க உதவும். மற்றபடி, கருத்துப் பிழைகள், சொற் பிழைகள் திருத்துவது ஆகியவை இயன்ற அளவு செய்யப்பட்டு வருவன தான். நன்றி.--Ravidreams 18:39, 12 பெப்ரவரி 2007 (UTC)

ஜெயபால், தரம், சீர்தரம் ஆகிய இரண்டு சொற்களும் மிக நல்ல சொற்கள்தாம். உண்மையிலேயே நியம வெப்பநிலை என்றால் என்ன என்று எனக்கு விளங்கவில்லை. நியமம் என்னும் சொல் தமிழ்ச்சொல்லும் இல்லை, நியமனம், நியமித்தல் முதலிய சொற்களோடு குழப்பம் ஏற்படுத்தும் சொல்லாகவும் உள்ளது. நல்ல தமிழ்ச் சொற்களை நீங்கள் வரவேற்கிறீர்கள் என்பதால், தரம் அல்லது சீர்தரம் என்னும் சொல்லை ஆள வேண்டுகிறேன். தமிழ் வேரிலிருந்து ஆக்கபடும் சொற்கள் நன்றாக கிளைத்துப் பெருகும். பிறமொழிச் சொற்கள் பெரும்பாலும் மண்ணில் இட்ட பிளாஸ்டிக்கு (நெகிழி) போல் தனித்தே இருக்கும். அரசு ஏற்பு (அங்கீகாரம்) என்பது எல்லாச் சொற்களுக்கும் ஒத்து வராது. பல அரசுகள் இருப்பதும் குழப்பம் ஏற்படுத்தும். எனவே நல்ல சொற்களை நாம் இங்கே எடுத்து ஆண்டால் பொதுமக்களும், அரசுகளும் கூட ஏற்றுப் பயன் பெறுவர். ஒரு கலைக் களஞ்சியக் கட்டுரை என்பதே ஒரு வடிவான வரைவிலக்கணம் போன்ற சீர்தரம் தரும் எழுத்து ஆகும். நல்ல சொற்களும் நல்ல சொல்லாட்சியும், நல்ல மொழிநடையும் மிகவும் அடிப்படையான தேவை. எனவே அருள்கூர்ந்து மாற்றி எழுதியதன் உட்கருத்தை சீர்தூக்கிப் பார்க்க வேண்டுகிறேன். --செல்வா 19:03, 12 பெப்ரவரி 2007 (UTC)


ரவி, செல்வா, ரவி காட்டிய சுட்டியைப் பார்த்தேன். ஒன்றும் புதிதல்ல. இது போன்ற வாதங்களில் தமிழ்நெட் காலத்திலிருந்து பல தடவை பங்கெடுத்திருக்கிறேன். இருந்தும், என் நிலை வேறு. தூய தமிழ் தேடிப் பிடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை (பார்க்க : http://kandjey.tripod.com/). அது என் தனிப்பட்ட விருப்பு. ஆனால் தமிழுக்கென்று ஒரு கலைச் சொல்லகராதி (அதுவும் தொழில் நுட்பச் சொற்களுக்கு) வேண்டும். அதுவும், தமிழ் மொழிமூலம் கல்வி கற்பிக்கும் நாடுகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு அகராதி உருப் பெற வேண்டும். அதன் பின்னர் எல்லோரும் அதைத் தாயகரதியாகக் கருதிப் பிள்ளைகளைக் கற்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நன் பல தடவை முன் வைத்திருக்கிறேன். இது அவசியம் என்பது என் கருத்து. இதை நிறைவேற்ற இப்பொழுது அதிகபட்ச அதிகாரம் உள்ள அரசு தமிழகம் தான். ஆக தமிழகம் முன் வரவேண்டும். தமிழனுக்குத் தனியரசு வரும் போது இப்படி ஒரு நிலைக்கே இடம் வர மாட்டாது. இங்கே நேரத்தைச் செலவிடும் உங்கள் எல்லோருக்கும் தமிழின் ஏற்றம் என்ற உன்னத நோக்கம் இருப்பதை நான் உணர்த்திருக்கிறேன். உங்கள் மாற்றங்களை நீங்கள் தாராளமாகச் செய்யுங்கள். --Jeyapal 20:21, 12 பெப்ரவரி 2007 (UTC)

ஜெயபால், தமிழக அரசு இந்த வேலையை எப்படி செய்யும், என்று செய்யும் என்று சொல்வதற்கில்லை. ஏற்கனவே செய்யப்பட்ட பல அரசுக் கலைச்சொல்லாக்கங்களும் புத்தக அலமாரிகளில் உறங்கிக் கிடக்கின்றன. உங்களை போன்று அனுபவமும் ஆர்வமும் உள்ளவர்கள் தமிழ் விக்சனரி தளத்துக்கு வந்து எங்களை போன்று புதியவர்களை ஆற்றுப்படுத்தலாம் என்பதை மட்டும் வேண்டுகோளாக வைக்கிறேன். நன்றி--Ravidreams 20:59, 12 பெப்ரவரி 2007 (UTC)


தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவது தொடர்பில் செல்வா இங்கே எழுதியிருப்பவற்றுடன் நான் முற்றாக உடன்படுகின்றேன். கட்டுரை எழுதும்போது சரியான தமிழ்ச் சொல் தெரியாத போது சிந்தனையோட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சில சமயங்களில் பிறமொழிச் சொற்களைக் கையாள்வதுண்டு ஆனால் நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவது மிகமிக இன்றியமையாதது. தமிழ்ச் சொற்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும் தேவையானது. இந்த விடயத்தில் இப்படியும் இருக்கலாம் அப்படியும் இருக்கலாம் என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பது நல்லதாகத் தெரியவில்லை. அண்மையில் தமிழ்நாட்டில் தமிழ்நாட்டு மக்களுக்காக வெளிவரும் பெண்களுக்கான செல்வாக்குள்ள சஞ்சிகையொன்றைப் பார்க்க நேரிட்டது. பலவகையான பருப்பு மசியல்கள் என்று பெயரிட்டு அந்த இதழ் வெளியிட்ட இணைப்பில் பலவகை மசியல்களின் பெயர்களைத் தமிழில் எழுதியுள்ளார்கள் அவற்றுட் சில:
  • கோகனட் தால்
  • மிக்ஸ்டு வெஜிடபிள் தால்
  • பாலக்-குடமிளகாய் தால்
  • ஆல் இன் ஒன் தால்
  • ஈசி தால்
  • தால் ஃபிரை
  • பஞ்சாபி சன்னா மசாலா
மக்கள் பேச்சுவழக்கில் இவற்றைப் பயன்படுத்துகிறார்கள் என்பது உண்மையாக இருப்பினும் செல்வாக்குள்ள இதழ்கள் இவ்வாறான சொற்களைப் பரவலாக்க உதவுவதைப் பொறுப்பின்மை என்பதைத் தவிர வேறு சொற்களால் விளக்கலாம் போல் எனக்குத் தெரியவில்லை. இவ்விடயத்தில் இறுக்கமான கொள்கைகளைக் கொண்டிராவிட்டால் இம்மாதிரியான போக்குகளைத் தவிர்க்க முடியாது. விக்கிபீடியா போன்ற ஊடகங்கள் தமிழில் அறிவைப் பரவலாக்குவதை முக்கிய நோக்காகக் கொண்டிருந்தாலும் முறையான தமிழ் வளர்ச்சியும் இத்துடன் பின்னிப் பிணைந்தது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். விக்கிபீடியாவும் முன் குறிப்பிட்ட சஞ்சிகைகளைப் போலவே பரந்த செல்வாக்குப் பெறுவதற்குரிய வாய்ப்புக் கொண்ட ஒரு ஊடகம். எனவே இது தொடர்பில் நாம் அசட்டையாக இருக்கக்கூடாது. முறையான தமிழ் மொழி வளர்ச்சி தொடர்பில் முன்னணிப் பங்கு வகிப்பதற்காக முறையில் விக்கிபீடியாவை நாம் உருவாக்குவது அவசியம்.
ஜெயபால் குறிப்பிட்டிருப்பதுபோல ஒரு விரிவான கலைச்சொல் தொகுப்பு ஒன்று இன்று தமிழுக்கு மிகமிக அவசியமாகத் தேவைப்படுகிறது. இது தொடர்பில் பலர் தனித்தனியான முயற்சிகளைச் செய்து வந்தாலும் ஒருங்கிணைக்கப்பட்ட, விரிவான நோக்கங்களைக் கொண்ட ஒரு முயற்சி இன்னும் இல்லை என்றே சொல்லவேண்டும். விக்சனரி இதற்கான நல்ல களமாகச் செயற்பட முடியும் என்பதைப் பலகாலமாகவே நான் சொல்லிவந்திருக்கிறேன். ஆனாலும் விக்சனரிக்கு ஒரு முறையான, முழுமையான கொள்கையொன்றை உருவாக்கவேண்டிய தேவை இருக்கிறது. இக்கொள்கை, பக்கங்களின் வடிவமைப்பு, அவற்றின் உள்ளடக்கம், சொல்லாக்கங்களுக்கான அடிப்படைகள், பல் வேறுபட்ட கருத்துவேறுபாடுகளைக் கையாள்வதற்கான நடைமுறைகள், வட்டார வழக்குகளைக் கையாள்வதற்கும் அவற்றை ஒருங்கிணைப்பதற்குமான வழிமுறைகள் போன்றவற்றை உள்ளடக்கியிருத்தல் வேண்டும். விக்கிபீடியா ஓரளவுக்கு ஒரு நல்ல கருத்துப் பரிமாற்றங்களுக்கான ஒரு களமாக உருவாகி வருகிறது. விக்சனரியில் இந்நிலை இன்னும் ஏற்படவில்லை. இன்றைய நிலையில் தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் கலைச்சொல் அகராதி ஓரளவு ஒரு தீர்வாக இருந்தபோதிலும் அதிலே பல பிரச்சினைகள் உள்ளன. அதனைப் பயன்படுத்துவது சற்றுக் கடினமானது. இப்பொழுது சில வாரங்களாக அத் தளத்தை அணுக முடியாமலும் உள்ளது. தற்போதைக்கு இதற்கு ஒரு மாற்றாகவேனும் இன்னொரு தளம் கிடையாது. நிச்சயமாக, விக்சனரியை தமிழர்களில் கலைச்சொல் தேவை உட்படத் தற்காலத்துக்கு ஏற்ற சொல் தேவைகளுக்கான ஒரு களமாக வளர்த்தெடுக்க முடியும். ஆர்வமுள்ள அனைவரும் இதில் ஈடுபட வேண்டும். அரசுகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் வேறு பல நோக்கங்கள் இருக்கின்றன. அவை இத்தகைய வேலகளில் ஈடுபட நினைத்தாலும் நோக்கங்கள் திசை மாறுவதும் தடம்புரள்வதும் வழக்கமாக நிகழ்வது. உண்மையில் ஆர்வமுள்ள தனிப்பட்டவர்களின் ஆற்றலில் ஒருங்கிணைப்பு இத் தேவையை நிறைவேற்ற முடியும் என்பது எனது நம்பிக்கை. Mayooranathan 05:52, 16 பெப்ரவரி 2007 (UTC)

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:10, 14 மே 2007 (UTC)[பதிலளி]

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:10, 14 மே 2007 (UTC)[பதிலளி]

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:11, 14 மே 2007 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கணினியில்_தமிழ்&oldid=815571" இலிருந்து மீள்விக்கப்பட்டது