பேச்சு:கணினி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதை எழுதியது ஏற்கெனவே உள்ள அடையாளம் காட்டிக்கொள்ளாத பயனரா..இல்லை, புதுப்பயனரா தெரியவில்லை. நல்ல அறிமுகக் கட்டுரை. பாராட்டுக்கள். இது போன்று மேலும் பல தொழில் நுட்பக் கட்டுரைகள் உருவாக வேண்டும் என்பது என் ஆவல்.--ரவி (பேச்சு) 14:48, 25 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

பாரட்டுகளுக்கு நன்றி, இது ஆங்கில கட்டுரையின் ஒரு பகுதி மட்டுமே மிகுதியையும் விரைவில் மொழிபெயர்க்க உள்ளேன் - சுரேன்

கணினி என்று தேடும்போது இங்கே வழிப்படுத்தப்படுகிறது.

உண்மையில் சரியான கலைச்சொல் கணினி என்பதேயாகும். இங்கே தலைப்பு கணனி என்று இருக்கிறது.

கணனி என்று தேடும்போது கணினி எனும் கட்டுரைக்கு வழிப்படுத்தப்படுவதே பொருத்தமானது.

--மு.மயூரன் 17:54, 3 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]


மயூரன், உங்கள் கருத்து சரி. அதாவது, கணி -> கணினி, கண? -> கணனி?. ஆகவே, புது பக்கத்துக்கு நகல் செய்து விட்டேன். எனினும், கணனி என்றும் சிலர் எழுதுவதுண்டு. --Natkeeran 00:17, 4 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]

சிவப்பு இணைப்புகள்[தொகு]

சிவப்பு இணைப்புகள் அதிகமாக இருக்கிறது. படிப்பவர்களுக்கு சிரமம் ஏற்படுத்தலாம். எனவே அவற்றை நீக்கலாம் எனப்பரிந்துரைக்கிறேன். --சிவகுமார் \பேச்சு 16:50, 4 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கணினி&oldid=215566" இலிருந்து மீள்விக்கப்பட்டது