பேச்சு:கணித மாறிலி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"கணிதத்தின் நிலை எண்கள்" என்றும் குறிக்கலாம் என நினைக்கிறேன். நிலை எண் என்பது மாறா எண். நிலைப்பி என்பது நன்றாக உள்ளது. ஆனால் நிலைப்பி என்பது நிலைக்கச் செய்வது என்பது போல் தோற்றம் அளிக்கின்றது. நிலையி என்று சொன்னான் பொருந்துமோ என நினைக்கிறேன். இதற்காகவே கணிதத்தில் மாறா என்கள் அல்லது கணிதத்தில் நிலை எண்கள் என்னும் தலைப்புகளைக் கருதச் சொல்கிறேன். --செல்வா 13:19, 28 மே 2007 (UTC)[பதிலளி]

Profvk, Complex Number என்பதற்கு சிக்கலெண் என்றே இங்கே ஆள்கிறோம். இராம்.கி அவர்கள் என் வலை நண்பர்தான், எனினும் அவர் பரிந்துரைத்த பலக்கெண் என்பது ஏற்புடையதா என தெரியவில்லை. நல்ல பரிந்துரையாக இருப்பின், அதனை அடிக்குறிப்பில் இடலாம். எனவே. சிக்கல் எண் தளம் என்றே இப்போதைக்குக் குறிப்பது நல்லது. இது குறித்து நானும் வேறு விதமாக கருத்தாடி இருக்கின்றேன். என் பரிந்துரை செறிவெண். நற்கீரன் கலப்பெண் என்று முன் மொழிந்தார். சிக்கலெண் என்னும் சொல் பாட நூல்களில் இருப்பதால் அதனை ஆள்வதே நல்லது.--செல்வா 13:26, 28 மே 2007 (UTC)[பதிலளி]

செல்வா, நன்றி. சிக்கலெண் என்பது பாடநூல்களில் இருப்பதாக நீங்கள் சொல்வதால், சிக்கல் எண் என்றே கையாள்கிறேன். நிற்க, உங்களுடைய சொல்லாக்கங்களில் சிலவற்றை மாற்றலாம் என்று தோன்றுகிறது. சுழி என்பது zero வுக்கு ஒரு குறியீடு.. சூன்யம் என்பது zero என்பதன் மதிப்பு. "கற்பனைப் பகுதி b ஆனது சுழியாக, 0, இருக்குமானால் அந்த செறிவெண் வெறும் மெய்யெண்ணாகும்" என்ற உங்கள் வாசகம்
சிக்கலெண் கட்டுரையில் உள்ளது. அதை மாற்றலாம் என்று நினைக்கிறேன்.
மற்றும், புள்ளிப்பெருக்கல் கட்டுரையில், Commutative க்கு நீங்கள் 'இடமாற்றுதல்' என்று எழுதியிருக்கிறீரகள். இது 'பரிமாறல்' என்று மாற்றப்படவேண்டும். ஏனென்றால் 'இடமாற்றல்' Transposition என்ற அணிக்கோட்பாட்டுச் செய்கைக்குத் தேவைப்படுகிறது. உங்களுடைய 'அணித்திருப்பமும்' வெகு அழகான சொல் தான்.

--Profvk 16:23, 29 மே 2007 (UTC)[பதிலளி]

மேற்கோள்களின் பட்டியல்[தொகு]

  • வரி 1: [1]
  • பை நிலையெண்ணில் வாய்ப்பாட்டில் : [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Weisstein, Eric W. "Constant". MathWorld. பார்க்கப்பட்ட நாள் April 13, 2011.
  2. Weisstein, Eric W., "Sphere", MathWorld.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கணித_மாறிலி&oldid=1539512" இலிருந்து மீள்விக்கப்பட்டது