பேச்சு:கணம் (கணிதம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கணம் (கணிதம்) எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

இலங்கையில் இதை தொடை என்பர். தொடை என்பதை REDIRECT செய்யலாமா?--ஜெ.மயூரேசன் 06:50, 25 ஜூலை 2006 (UTC)

கட்டாயம் செய்யலாம். கணம் என்ற சொல்கூட வடமொழி போலத் தோன்றுகிறது. அவ்வாறு இருப்பின், இப்பக்கத்தைத் தொடை என்ற தலைப்பிற்கே நகர்த்திவிடலாம். தொடை நல்ல தமிழ்ச்சொல்லாகத் தோன்றுகிறது, யாப்பிலக்கணத்தில் கூட இது ஒரு இலக்கண உறுப்பாக ஆளப்பட்டிருக்கிறது. மேலும், இலங்கையில் வழக்கிலிருக்கிறது என்று நீங்கள் கூறுவதால், தொடை என்பதையே முதன்மைத் தலைப்பாகக் கொண்டு, கணம் என்பதை வழிமாற்றுப் பக்கமாக ஆக்கலாம். பிறர் கருத்துக்களையும் அறிய விரும்புகிறேன். -- Sundar \பேச்சு 07:01, 25 ஜூலை 2006 (UTC)
தொடுக்கப்படுவது தொடை. தொடுப்பது என்பது ஒன்றன்பின் ஒன்றாக சேர்ப்பது, கோர்ப்பது. மலர் தொடுத்தல். மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழிலே 'தொடுக்கும் பழம் பாடல்' என வரக்காணலாம். அதிலே தொடை என்பது அடுக்கும், கோர்க்கும் புகழ்ப்பாடல் என்று பொருள். தொடை என்பது நல்ல சொல் அதனையே ஆளலாம் என்பது என் பரிந்துரையும். அடைபுக்குறிகளுக்குள் கணம் என்னும் சொல்லையும் குறிக்கலாம். நான் முதலில் அடை (அடுக்கப்படுவது அடை) என்று எண்ணினேன், ஆனால் தொடை என்பது இன்னும் சிறந்த சொல் ஏனெனில், தொடுக்கின்ற வரிசையையும் தெளிவாக உணர்த்த வல்லது. தொடையில் நாலாவதாக உள்ள எண் அல்லது உறுப்பு என்பது இயல்பானது. ஏதொன்றையும் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடுப்பது தொடை.. --C.R.Selvakumar 13:09, 25 ஜூலை 2006 (UTC)செல்வா
ஒரு சிறு குறிப்பு: கணிதக் கணங்களின் உறுப்புகளில் பொதுவாக வரிசை கிடையாது. வரிசையுடைய கணங்கள் ஒரு உள்வகையைச் சார்ந்தவையே. -- Sundar \பேச்சு 13:21, 25 ஜூலை 2006 (UTC)
உண்மை. வரிசை என்பது தேவை இல்லை. அது ஒரு உட்பிரிவுதான். தொகை போன்று தொடை (ஆனால் தொடை என்பதில் தொடுக்கப்படுவது என்பது கருத்து, தொகையில் தொகுக்கபடுவது என்பது கருத்து.). தொழுதி போன்ற சொற்கள் வெறும் கூட்டம் (கூடி இருப்பது) என்பதை மட்டும் குறிக்கும். மாடுகள் கட்டி வைத்து இருக்கும் இடத்தை தொழுவம் என்றும் இதனால் அமைவதே. தொழு = கூடு என்னும் பொருளது. பறவைக் கூட்டத்தை தொழுதி என்று அழைப்பர். தொழுதி என்றால் கூட்டம், திரள். தொறு என்றாலும் கூட்டம். ஆனால் கணம் என்னும் சொல் தமிழ்நாட்டில் வழக்கூன்றி இருப்பின், மாற்றுச் சொல் எடுபடுமா என்று அறியேன். --C.R.Selvakumar 15:43, 25 ஜூலை 2006 (UTC)செல்வா
கணம் என்ற சொல் தமிழ் தான். செந்தமிழ்ச்சொற்பிறப்பியல் அகரமுதலியில் நேரடிப் பொருளும், பொருள்களின் தொகுதி என்னும் பொருளும் இன்னும் பிற பொருள்களும் காட்டப்பட்டிருக்கின்றன. http://www.tamilvu.org/library/ldpam/ldpam02/ldpam021/html/ldpam021286.htm -இரா. செல்வராசு (பேச்சு) 04:24, 12 மே 2017 (UTC)[பதிலளி]

கொத்து[தொகு]

set = கொத்து;
set theory = கொத்துத் தேற்றம்.

பல ஆட்டங்கள் சேர்ந்தது ஒரு கொத்து.

"சான்யா 7க்கு 6 என்ற ஆட்டக் கணக்கில் முதற் கொத்தை வென்றார். இருப்பினும் சிறுசிறு தவறுகளால், வலுவிழந்து, இரண்டாவது கொத்தில் எதிராளியிடம் தோற்றுப் போனார். மீண்டும் பெரும்பாடுபட்டு மூன்றாவது கொத்தை வென்றார்."

கொத்து எ்னும் போது அதனுள்ளே ஓர் ஒழுங்கு இருப்பது சட்டென்று நமக்குப் புரிபடுவதில்லை. ஆனாலும் ஏதேனும் ஒன்று கொத்தின் எல்லா உறுப்புக்களையும் இணைக்கும். அந்த உறவு ஒன்றைச் சொன்னால் கொத்தின் கட்டுமானம் புரிந்து போகும்.

தமிழில் "ஒரு கொத்து மாங்காய், ஒரு பூங்கொத்து, ஒரு கொத்து வீடுகள்" என்னும் போது நம்மையறியாமல் கணிதத்தில் வரும் set என்பதையே நாம் உணருகிறோம்.

கணம் என்னும் போது அடுத்துறும் பாங்கு(இதற்கு அடுத்தது அது; இதற்கு முந்தையது, பிந்தையது என்னும் associative property) பெறப்படும். இதை ஒழுங்குப் பாங்கு (order property)என்றும் சொல்லுவர். எனவே இந்தக் காலக் கணிதத்தின் set theory இல் கணம் அடிப்படைத் தொகுதி ஆகாது.

கொத்து என்பது ஒரு விதப்பான தொகுதி. தொகுதி என்பது பொதுமையான collection என்பதற்குச் சரி வரும்.

set (கொத்து),category (கட்டுக் கூறு),ring (வளையம்),group (குழு)
போன்றவை ஏற்கனவே 30, 40 ஆண்டுகளாய் உயர்கணிதத்தில் பயன்படும் தமிழ்ச் சொற்கள்.

அன்புடன்,
இராம.கி.

இங்கே இட்டது --Natkeeran 01:32, 17 ஜூலை 2008 (UTC)

கணம் குறியீடுகள்[தொகு]

  • { , } - கணம்
  • { : }, { | } - கணத்தை வரையறை செய்தல்
  • ⊆ -
  • ∅. { }
  • ∃!

பகுப்பு நீக்கப்பட்டது குறித்து[தொகு]

@AntanO பொதுவாக எக்கட்டுரையாக இருப்பினும் அதன் அடிப்படையான துறை/புலம் சார்ந்து மூலப்பகுப்பை அளிப்பது மிகத்தேவையான ஒன்றாகும். ஆங்கில விக்கிப்பீடியாவில் இந்த நடைமுறையேப் பின்பற்றப்படுகின்றது. இந்தக்கட்டுரை கணிதவியல் அல்லது கணிதம் என்று வருவதுதானே இயல்பு.--Thamizhpparithi Maari (பேச்சு) 15:25, 10 மே 2017 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கணம்_(கணிதம்)&oldid=2791597" இலிருந்து மீள்விக்கப்பட்டது