பேச்சு:கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தின் மீது வான்புலிகள் தாக்குதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கில செய்திகளுக்கான தொடுப்புகள் தேவைதானா? அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கைக்கான தொடுப்பை மட்டும் சிங்களத்தில் வழங்கின்ணால் போதும் என்று கருதுகிறேன். --மு.மயூரன் 08:09, 26 மார்ச் 2007 (UTC)

பதிவு இணையத்தளும், இலங்கை அதிகாரபூர்வ இணையத்தளமும் தெளிவாக நடுநிலைமை கொண்டவை அல்ல. பொதுவாக, பிபிசி நடுநிலைமை அல்லது நம்பகத்தன்மை கொண்ட ஒரு செய்தி நிறுவனம். ஆங்கிலத்தில் செய்திகள் மேலதிக தகவல்களைத் தரும் பட்சத்தில், அல்லது கூடிய நம்பகத்தன்மையாக இருக்கும் பட்சத்தில் அவற்றை தருவதில் தவறில்லை. --Natkeeran 08:36, 26 மார்ச் 2007 (UTC)

முன்னர் எம்மை ஆண்டவர்களின் நிறுவனம் என்பதால் நம்பகத்தன்மை கொண்டதா?[தொகு]

//பிபிசி நடுநிலைமை அல்லது நம்பகத்தன்மை கொண்ட ஒரு செய்தி நிறுவனம்// எதை ஆதாரமாக வைத்து இதனைச் சொல்கிறீர்கள்? உலக அளவில் பீ பீ சீ பல இடங்களில் நடுநிலைத்தன்மையை இழந்திருக்கிறது. இது பரவலான கண்டனங்களுக்குள்ளான விடயம். அத்தோட்டு இலங்கை பிரச்சினை தொடர்பிப் பீ பீசி இரண்டு தரப்பிடமுமே பலமாக நம்பகத்தன்மையினை இழந்திருக்கிறது. பீபீசி முன்னர் எம்மை ஆண்டவர்களின் நிறுவனம் என்பதால் நம்பகத்தன்மை கொண்டதா? --மு.மயூரன் 10:03, 26 மார்ச் 2007 (UTC)

//இலங்கை பிரச்சினை தொடர்பிப் பீ பீசி இரண்டு தரப்பிடமுமே பலமாக நம்பகத்தன்மையினை இழந்திருக்கிறது//இக்கூற்றே பிபிசியின் நடுநிலையைப் பறைசாற்றுகிறதே:)--Kanags 10:13, 26 மார்ச் 2007 (UTC)

அதிகாரப்பூர்வத்தளம்[தொகு]

http://www.news.lk/sinhala/index.php?option=com_content&task=view&id=1779&Itemid=44 இல் சிங்கள இணைப்பொன்று தரப்பட்டுள்ளது. அடியில் Devloped என்று குறிப்பிடப்பட்டுள்ளது இதில் e விடப்பட்டுள்ளது. இது உண்மையில் அதிகாரப்பூர்வத்தளமா? அப்படியாயின் தமிழில் ஏன் இந்தச் செய்தி இல்லை. தமிழ் அதிகாரப்பூர்வ மொழியென்றால் தமிழிலும் இசெய்தி இருக்கவேண்டுமல்வா?--Umapathy 19:05, 31 மார்ச் 2007 (UTC)

தமிழில் சற்று மேலே இருக்கின்றது. * இலங்கை அரசின் உத்தியோகபூர்வ செய்தித்தளம் வெளியிட்ட செய்தி --Natkeeran 19:15, 31 மார்ச் 2007 (UTC)